3. பெற்றவர் மாட்சி வரிகள்.

 

    

இலண்டன் தமிழ் வானொலியில் எழுதி வாசித்தவை.

1.           முதன்முதலாய் விரல் பிடித்து
முதல்வராய் முன்னேற்றப் பாதையில்
முதன் மொழியாம் முத்தமிழை எமக்கு
முத்தம் முதலீடாகப் பதித்தவர்.
முதல் வர்க்கமிவர் எம் மனதில்.

2.           எமக்குள் மனிதம் நுழைத்து
ஏகபோக இராச்சியம் அமைத்து
எல்லவனாய் என்றும் ஒளிதரும்
நல்ல பெற்றவரன்பில் நனைதலின்பம்
 
3.            கனவில் அம்மா வந்தால்
மனதில் நிறைவு பெருகும்.
வானவில்லாய் முகம் மலரும்.
வாழ்வில் அந்த முகம் தானே
வாயார வாழ்த்துக் கூறும்.
வாழ்வில் பலரிதை அனுபவித்திருப்பாரோ!
 
4.            என்னைக் கருவறையில் அம்மாவும்
தன் மனஅறையில் அப்பாவும்
தினமும் தாலாட்டி வளர்த்தனர்.
பணிப்பெண் கைத்தொட்டிலில்
பலர் வாழ்கிறார். இந்நிலை
எனக்கு வராததற்கு  பெற்றவருக்கு நன்றி.

5           தாரம் எனும் பெண்மை
ஈரம் மிகுந்த தாய்மை.
பாரம் கருதாது உண்மை.
பாசமது சாயாது, ஓயாது.

6.          அலையலையாக என்றும்
நிலையாக வீசும் பாசத்தின்
வலை பெற்றவர்அன்பு.
தலை நிமிர்ந்து எம்மைத்
தகுதியாக வாழ வைக்கும்
தண்ணிலவு வட்டம் இவ்வன்பு.
மண்ணிலெம்மை நிலையூன்ற வைப்பது.

7.                     மூடரும் பெற்றவரன்பை முதலாக
வடமாகச் சுற்றினால் வளம் பெறுவார்.
சீடரானால் சீருடன் முத்தியடைவார்.
தொடரும் அன்பு விடமாகாது.

8.             என்றும் இன்ப நறுமணப் புகையாக
என்மனச் சிம்மாசனத்தில் வாசனையாக
என்னைச் சுற்றிப் படலமாகக் கவியும்
என் பெற்றவர் நினைவுகளென்றும்.
என் மனமன்றத்தில் இராசராகம்.
நின்று வாழும் நிலைத்த இன்பமது.

9.            வல்லமை பெருகும் பெற்றவரைப் பேணுங்கள்.
நல்லதாகப் பெறுவீர்கள் வெற்றி மாளிகை.

10.          ஆலம் விழுதாக நெஞ்சிலூன்றுவர்.
நூலெனும் உறவு ஏணியாக
பலமான தொடர்பிற்குப் பாலமாவார்.

11.     அடியளந்து ஆலயம் சுற்றி
மடியில் வந்துதித்த செல்வங்கள்
படியேறி, பண்பு, அறிவில்
முடிசூட வேண்டுமென்று
துடிப்போடு ஆர்வம் கொள்வார்
நடிப்பில்லா ஆவலுடன் பெற்றோர்.

12.     சன்மார்க்கம் கல்வி, சமயம்
சகல கலைகளையும் காலத்தில்
சம்பிரதாயப்படி ஊட்டுவார் பெற்றோர்.
சந்தணமாக எம்மனதில் மணக்கிறார்.
சங்கீதமாக இனிக்கும் பிறந்தவீடு
சன்னிதி, சிறப்பிலொரு இமயம்.

13.      ஆழம் ஆயுளற்றது, பெற்றவரன்பு.
சூழல், சுகம் பார்க்காத பொன் பூ.
வாழும் காலத்திலும் வீழும் போதினிலும்
நீளும் வாழ்வினிலும் உயிர் நீரோட்டமானது.

14.      தேகமிது பெற்றவர் தந்தது.
ஊகமில்லையிது அழிவது.
மேகமென அன்பு பொழிந்து
நோகுமெனப் பாதுகாத்து எமை
சோகம் அண்டாது காத்த
தியாக நெஞ்சுடையோர் பெற்றவர்.

15.      கருவறைக் கர்ப்பக்கிரகம், மனிதத்தின்
உருவறை.  தந்தையால் உருவாகும் அறை.
இருவரின்  பாச நிறைவை நாம்
கல்லறை செல்லும் வரை
மன அறையில் மதித்தப் பூசிப்போம்.

16.         ஆற்றல் மிகு பெற்றவர் அன்பை
நேற்றும், இன்றும், நாளையும்
ஏற்றமுடன் காற்றும் பேசும்.
அகில சீவன்களும் பெறும்
அளப்பரிய அன்பு, பண்பு
ஆதரவு தாய் மடியில்தானே!

17.      ஏழேழு சென்மங்கள் அல்ல
எழுந்துள்ள இந்த சென்மத்திலேயே
பழுதற்ற வாழ்வை மனதிலேற்றி
பெற்றவரை மதித்துத் தொழுதிடுங்கள்.
அவரை அழுதிடச் செய்யாதீர் பாரினிலே.

க்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-9-2010.

                           

 
 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: