7. பெற்றவர் மாட்சி

 

 

பெற்றவர் மாட்சி

12-6-2005.
னிமை பெற்றவர் அருகு.
இனிமை அவர்கள் அணைப்பு.
இனிமை அவர்கள் ஆதரவு.
இவையே உலகின் முதற்தர இனிமை.

24-6.2005
குலத்திலும்(மனக்கலக்கத்திலும்);, ஆபத்திலும்
அணைக்கும் ஆதரவும், பெற்றவர்
ஆசி மொழி கேட்பதுவும் பேரானந்தம்.

யுள் முழுதும் அன்பு, ஆதரவெனும்
ஆயுதபாணியாக வாழ்வுப் போரில்
தீயுள்ளும் நீராக, தீரமாய் வாழ்ந்தது
சாயும் நினைவல்ல. அப்பா! அம்மா!
சகலபொழுதும் நினைவில் நீங்களே!

3-7-2005.
ள்ளமும் உணர்வுகளும்
தெள்ளிய நீரோடையாக
கள்ளமின்றி உருவாக்கியவர்கள்
உள்ளபடியெம் பெற்றோர்கள்
புள்ளிக் களங்கமும் படாதவர்
மனதை வெள்ளையாகக் காப்பது மேல்.

23-7-2005.
ன்பு நிறை பெற்றவர் உள்ளம் அமிர்ததாரை
இன்பமாய் இதயத்துள் சிறகடிக்கும் ககனப் பறவை
பண்பாய், இதயத்துத் தீப்பெட்டிப் பொன் வண்டாய்
என்றும் போற்றிடுமே அவரன்பை எமதுள்ளம்.

20-3-2005.
ண்ணாக நீ, பண்ணாக நீ
மண்ணாக நீ விண்ணாக நீ
கண்ணிலே உறவாடும் உருவங்கள்
எணணிடில் பிள்ளைகளின் தெய்வங்கள்.
எண்ணாத பொழுதிலும் உங்களை நினைவு
என்னோடும், என்னுயிர் மூச்சோடும்.

26-3-2005.
ன்றோ கேட்டது போலவல்ல உங்கள் குரல்.
என்றோ பார்த்தது போலவல்ல உங்கள் உருவம்.
நன்றே இதயச் சிறையில் பதிந்து
இன்றும் பார்ப்பது போலத் தெரிகிறது.
இன்றும் அன்பு மொழிகள் கேட்கிறது.

4-4-2005.
பெ
ருமையாய் பிள்ளை வாழப் பாடும் தரங்கம்.
அருமையறியாது அவலமெனும் துன்ப அரங்கக்
கருமையில் தள்ளிவிடும் சில பிள்ளையின் இரங்காமனம்.

10-4-2005.
னவுத் தொழிற்பாடு எதிர்காலத் திறப்பு.
நினைவுடன் பின்னியது பிள்ளை வளர்ப்பு.
வினவுதல் விடைகாணல் உறவுக் கவனிப்பு.
நனவுக் கடமை பிள்ளையின் நல்லெதிர்காலம்.

நீங்கள் உங்கள் பெற்றவரைப் போற்றுவதும்
உங்கள் சொத்தாகப் பார்ப்பதுவுமென்றும் நிலைக்கட்டும்.
நிலையான இந்தப் பந்தம் உங்கள் வாரிசுகளுடனாகவும்
என்றும் தொடரட்டும் உங்கள் வழிகாட்டலாய்.

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

                          

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: