82. சொல்வது சரிதானா?…..

சொல்வது சரிதானா?…..

வார்த்தைகளின் ஊர்வலம் வாழ்வில்
வர்ணக் குமிழிகளாய், வானவில்லாய்
வாசமிகு பூக்களாகிறது, சத்தியமானால்.
வசீகரமாய் நாற்காலியிடும் வார்த்தைகள்
விரிந்து வாளாகவும் வெட்டும்,
உசிரில் குத்தூசியாயும் ஏறும்.
உணர்ந்து சொல்வது சரிதானா!
உங்கள் மனச்சாட்சிக்கே வெளிச்சம்!

சின்ன நடையாய் மகிழ்வோடு பாதையில்
என்னதான் பத்திரமாய் ஓதுங்கி நடந்தாலும்
தன்னாலே எச்சமிடும் குருவிகள்
என்ன ஒரு அருவருப்பைத் தருகிறது!
என்றும் தவிர்க்க முடியாத இந்த
நிலைக்கென்றும் குடையா பிடிக்க முடியும்!
வில்லின் அம்பான வார்த்தைகளுக்கும்
கேடயமா பிடிக்க முடியும்!

சில்லறைத்தனமான குழாயடிக் கதைகள்
கேள்விகள், ஊகங்கள் இலட்சியத் தடை.
நீண்ட நோக்குப் பயணம் தொடரவேண்டும்.
நண்டின் பக்கப் பாட்டு நடையும்
முண்டும் சொல்நடையும் பிறப்போடானது.
கண்டும் மாற்ற முடியாதது, ஆபத்தானது!
சொல்வது சரியென்ற நீதியான உறுதியை
சொல்லுமுன் சிந்தனையில் பெறவேண்டும்.!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-10-2008

(ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

10-02-2015  ” வளரி இதழில் இக் கவிதை.”

 valati2

                                          
 

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

 1. கோவை கவி
  பிப் 11, 2015 @ 14:41:08

  Parithi Ramaswamy:-
  வாழ்க வாழ்த்துக்கள்
  10-2-15

  Gowry Sivapalan :-
  வாழ்த்துக்கள்
  10-2-15

  Thiriverni Sripathy Umesh :-
  Nice

  Velavan Athavan :-
  வாழ்த்துகள் வேதா அக்கா….

  Kannan Sadhasivam :-
  சந்தோசம் வாழ்த்துக்கள்

  Muruguvalli Arasakumar :-
  வாழ்த்துகள் ….

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan .-
  வாழ்த்துக்கள்

  சிறீ சிறீஸ்கந்தராஜா –
  வாழ்த்துக்கள் அம்மா!!

  Rathy Srimohan:-
  வாழ்த்துக்கள்

  Malini Mala :-
  வாழ்த்துக்கள்.

  Kuppu Samy :-
  இனிதே தொடருங்கள்

  Malikka Farook :-
  வாழ்த்துகள் சகோதரி

  Alvit Vasantharany Vincent-
  வாழ்த்துக்கள் சகோதரி.

  Vetha Langathilakam.-
  அன்புடன் பரிதி ஐயா – கௌசி – திரிவேணி -சுயேன் –
  கண்ணன்.ச – முருகுவல்லி – டொக்ரர் – ரதி –
  மாலினி – குப்புசாமி ஐயா – மாலிகா. பாரூக் – அல்விற்.
  அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும்
  என் மகிழ்வையும் தெரிவிக்கின்றேன்.

  Punitha Gangaimagan:-
  வாழ்த்துக்கள் சகோதரி…
  2 hrs · Like

  Kalaimahel Hidaya Risvi வாழ்த்துகள் சகோதரி
  Kalaimahel Hidaya Risvi’s photo.
  11-2-15
  Vetha.Langathilakam:-
  Nanry dear Punitha – K.H.R

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: