83. ஒரு முறை ஒரேயொரு முறை……

 

ஒரு முறை ஒரேயொரு முறை…… 

 

உலகப் பிரச்சனைகளால் எழும் கலகம் தீர்க்க இறைவனிங்கு
வலம் வந்து வழிவகையாக்கி நலங்கள் பெருகி மகிழ்ந்திட…..

சாய்ந்தால் சாய்கிற பக்கங்களில்லா சமன் செய்து சீர்தூக்கும் கோலாக
அமைந்த மனமுடைய சான்றோர் அருகில் மகிழ்வாய் உறவாட……..

உறவு மேடையில் அன்பாய் உண்மை ஆடையணிந்து
உருகும் உள்ளங்களோடு ஒரேமுறையில்லாது பலமுறை உறவாட……

குரோதம், விரோதம், பாதகமான, குறுக்குச் சிந்தனையாளர், பொறுப்பின்றி
குதூகலக் கும்மாள மனங்களில் குளப்பமாய் எச்சமிடும் நிலைமாற…..

சமையலின்றி சகல வேலைகளுமின்றி சதா காலமும் தமிழ்ப் பாலருந்தி
சங்கஇலக்கியங்கள், செய்யுள்களுள் சஞ்சாரமிட்டு ரசித்து இலயித்திட…..

ஒரு முறை ஒரேயொரு முறை ஒரு தபாற்காரனை எதிர்பார்க்கும்
பெரும் விருப்பாய்க் காத்திருக்க பெரும் மாய மாற்றம் வரட்டும்.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ்,  டென்மார்க்.
27-6-2008.

( இலண்டன் தமிழ் வானொலி,  ரி.ஆர்.ரி தமிழ் ஒலியிலும் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.)

 

                                       

 

 

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

 1. கோவை கவி
  செப் 08, 2014 @ 18:22:36

  You, Rathy Gobalasingham, சிறீ சிறீஸ்கந்தராஜா, Baba Muthu and 5 others like this.

  Muruguvalli Arasakumar :-
  அருமை …

  Vetha Langathilakam:-
  Dear M.A and all likers mikka nanry…..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: