3. நகைச்சுவை நாகேஷ்.

      

 

நகைச்சுவை நாகேஷ்.

நாகேஷ் பெயர் கேட்டதும்
நம்பிக்கையாய் மனம் நாடும்
நாகரீக நகைச்சுவையை – அது
கழுவும் மனக்கவலைகளை.
ஏற்றதாய் உடலை வளைத்து
மாற்றும் குரல் வளத்தால்
ஆற்றிய நகைச்சுவை மொழி
வெற்றியெட்டியது நாகேஷ் பாணியாக.

ல்லிக்குச்சி உடலாளரின் வீட்டுச்
செல்லப் பெயர் குண்டப்பாவாம்.
சல்லிக்காசு கொட்டுவதாயெமை
நல்லாகச் சிரிப்பூட்டிய நகைச்சுவையாளன்.
கில்லாடியவன், கிருஷ்ணராவ் – ருக்மணியின்
வல்லமைப் புதல்வன் நாகேஸ்வரன்.
விருதுகள் பெறாதவனின் பூர்வீகம்
மைசூர்.  வளர்ந்தது தாராபுரம்.

டிப்பு, நடனம், தத்துவமாக
நீடித்தான் முப்பதாண்டிற்கும் மேலாக,
துடிப்பானவன் இந்திய யெர்ரிலுயிசான
சர்வர் சுந்தரக் கதாநாயகன்.
பார்த்த ஞாபகம் இல்லையோ – இயக்குனன்.
அபூர்வ சகோதரர்கள் – வில்லன்.
நீர்க்குமிழி குணசித்திரம் – இவன்
திருவிளையாடலை மறக்க முடியுமா!

னோரமா சோடியாக 19 படங்கள்.
எம்.ஐp.ஆருடன் 45 படங்கள்.
27-9-1933ல் பிறப்பு.
31-1-2009ல் இவ்வுலக் துறப்பு.
தோற்றம் எதுவாயினும் மனிதனை
ஏற்றி வைப்பது அவன் திறமையென்ற
கூற்றுக்கு உதாரணமானவர் நாகேஷ்.
வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் சரித்திரத்தில்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-10-2010.

( ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் எனது குரலில் ஒலிபரப்பானது.)

                                                              

                               

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: