4. மக்கடோனிய மரகதம்.

     

 

மக்கடோனிய மரகதம்.

 

மக்கடோனிய மண், ஸ்கோப்யத்தில், மலர்ந்த
மரகதம், அக்னெஸ், பன்னிரு வயதில்
பரவசம் இறையழைப்பு என்றுணர்ந்தார்.
சரணமான தேவ அன்பைப் பரப்பினார்.
துள்ளும் இளமைப் பதின்ம வயதிலவர்
தெள்ளிய அமுதம் இறையருள் வயமானார்.
உள்ளுறை இன்ப இளமையுணர்வைக்
கொள்ளியிட்டு அருட் கொடியேற்றினார்.

பதினெட்டில் பிறந்தகம் விலகிய சேவகியார்
பதியாம் கல்கத்தா கன்னிமாடத்தில் பயின்றார்.
புதிதாய்ப் பயில டப்ளின் பறந்தார்.
நிதியாய்  இந்தியாவில் கன்னியாஸ்த்திரி பிரதிக்ஞை.
பதினேழு வருடம் சென்மேரீஸ் ஆசிரியை.
பதவியைத் துறந்தார் சேரிக் குழந்தைகளுக்காய்.
படிப்பிற்குத் திறந்த வெளிப்பாடசாலை திறந்தார்.
பரிசுத்த அவதாரமானார் இருபதாம் நூற்றாண்டில்.

துயரில் பிறருக்காய் உருகிய தூயவர்
அயர்லாந்தில் பயின்ற அன்னை திரேசா,
அயர்வற்ற சேவையில் அட்சயபாத்திரமானார்.
ஆதரவற்றோருக்கு அபயக்கரமீந்த அன்பரசி.
ஆதரவின் இலக்கணம், அறநெறியாளி திரேசா.
பசிக்கு உணவீந்த அன்புக் கங்கை திரேசா.
காசம், பால்வினை பாரிசவாதம், குஷ்டரோகிகளையும்
நேசமாய்த் தொட்டார்,  பல பரிசுகளும் பெற்றார்.

 

(அன்னை திரேசாவின் தோற்றம் – 27 ஆவணி, 1910.
மறைவு                  – 5 புரட்டாதி, 1997.
சமாதானப் பரிசு (போப்)      – 1971.
நேருவின் பரிசு             – 1972.
நோபல் பரிசு,              – 1979 லும்                                                                                                                                                               இன்னும் ரெம்பிளெட்டோன்                                                                                                                                                                       மக்செய்செய, பரிசுகளையும்  பெற்றார்.)

 

பா ஆக்கம் – வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
25-9-2006

( அலைகள் இணையத் தளத்தில் பிரசுரமானது.
ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

n anthimaali web site:-   http://anthimaalai.blogspot.com/2011/11/blog-post_09.html

 

                                  

 

 

Advertisements

3 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ரெவெரி
  நவ் 10, 2011 @ 15:11:18

  நீங்கள் விட்டது அவர் Saint ஆனதை…My most favorite woman…(other than My Mom,Wife & Daughter)

  மறுமொழி

 2. Vetha ELangathilakam
  நவ் 28, 2011 @ 13:25:28

  ஆமாம் சகோதரா. இப்போது நீங்கள் கூறிவிட்டீர்கள் அல்லவா! இதை வாசிப்பவர்கள் அதையும் புரிந்து கொள்ளட்டும். மிக்க நன்றி உங்கள் தொகுப்பிற்கு. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 3. கோவை கவி
  செப் 05, 2014 @ 06:34:16

  Muruguvalli Arasakumar :-
  மிகவும் அருமை… Vetha Langathilakam

  Vetha Langathilakam:-
  Nanry sis..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: