அனுபவம். அங்கம். 21.

அனுபவம். அங்கம். 21.
 

திர்காமம் போய் கொழும்பு வந்த பின்பு 30ம் திகதி நானும் கணவரும் விமானத்தில் யாழ் சென்றோம். கோவையில் எனது தங்கையைச் சந்தித்தோம்.

யாழில் இளவாலை, சங்கானை, உரும்பராய். எனும் ஊர்களுக்கு உறவினர்களிடம் சென்று வரும் வழியில் கோவை மாவீரர் துயிலும் இல்லம் சென்றோம். இங்கு படங்கள் காண்கிறீர்கள்.

கோவை மாவீரர் துயிலும் இல்லம்.

     

 

பார்க்க மிக அழகாக கம்பீரமாக அந்த நினைவாலயம் இருந்தது. அஞ்சலி செய்தோம். கனத்த இதயத்தோடு நடமாடினோம். ஏராளமான பேருந்துகளாக இலங்கை பூராக சிங்கள மக்களும் வருவது போவதுமாக  ஒரு சுற்றுலா இடமாகத் தெரிந்தது. இது ஒரு மறக்க முடியாத நினைவு தான்.

யாழ் தமிழாராய்ச்சி மகாநாட்டில் உயிர் நீத்தோர் நினைவிடம், யாழ் வீரசிங்க மண்டபம், யாழ் பதிய நூல் நிலைய சரஸ:வதி சிலை வரை  சுற்றி நடந்தோம். உள் புக அனுமதி மறுக்கப்பட்டது.

     

மார்கழி 4ம் திகதி அதிகாலை 7.00 மணிக்கு யாழ் சிங்கள மகாவித்தியாலயத்தில் பேருந்து எடுத்து  பலாலி விமானம் மூலம் பகல் ஒரு மணிக்கு கொழும்பு வந்தடைந்தோம்.

கொழும்பிவ் நாம் ஓய்வாக இருந்து உரையாடிய போது. எனது பெட்டகோ வேலை (சிறுவர் பராமரிப்பு) அனுபவங்கள், தமிழ் அலை வானொலி ஐரோப்பிய வலம் டென்மார்க் செய்தி வாசிப்பு, எனது கவிதைத் தொகுதி வெளியிடும் ஆயத்தங்கள் யாவும் கவனித்த என் தங்கை கமலா    ”உன்னை ரூபவாகினி தொலைக்காட்சி  ஐ சனாலில் மனையாள் மண்டப விசேட விருந்தினர் பேட்டி நிகழ்வுக்கு அனுப்பத்தான் போகிறோம், ‘ என்றாள்.

னையாள் மண்டப நிகழ்வு காலை 9.30- 10.30 ஆக ஒரு மணி நேர நிகழ்வாக அங்கு நடை பெறுகிறது. 

நிலையப் பொறுப்பாளர் திரு விசுவநாதனுடன் தொடர்பு கொள்ள, நாள் நியமிக்க, அறிவிப்பளர்களுடன் வேண்டிய ஆயத்தங்கள் செய்ய என்று நேரம் ஒதுக்க வேண்டி இருந்ததால் எமது கண்டி நுவரெலியாப் பயணம் தடைப்பட்டுவிட்டது.

யினும் மார்கழி 8ம் திகதி காலை சிலாபம் முனீசுவரர் கோயிலுக்கு தங்கை குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்று மாலையே கொழும்பு வந்தடைந்தோம்.

இங்கு படங்கள் காண்கிறீர்கள்.

             

முனீசுவரம் முழுவதும் சிங்கள மயம். ஆலயத்தில் அனைத்தும் பணம் பிடுங்கும் செயலாகவே கண்டோம். வெறுப்பாக இருந்தது. கடதாசி மாலை உட்பட பழ குவியலாக  அலங்கார அருச்சனைத் தட்டு, சிங்கள பாணியில். அள்ளு கொள்ளையாக விலை கூறினார்கள்.

பாக்கு, வெத்திலை, பழம், தேங்காய், பூ, கர்ப்பூரம், சாம்பிராணி என நாம் பிடிவாதமாக தட்டு சரிக்கட்டி வாங்கினோம். பக்தி என்பது அங்கு பணமாகவே இருந்தது.  தமது கடையில் பொருள் வாங்கினால் தான் அங்கு வாகனம் நிறுத்த இடம் தரும் அந்த  அநாகரீகச் செயல், முனீசுவரத்தில் மட்டுமல்ல, கதிர்காமத்திலும் கண்டோம். வெறுப்படைந்தோம்.

—–மிகுதியை அங்கம்   22ல் காண்போம்.——-

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. துளசிதரன் தில்லைஅகத்து, கீதா (துளசி எனது நண்பர்)
  செப் 25, 2014 @ 08:09:10

  தங்கள் பின்னூட்டங்களைக் கண்டிருந்த போதும், தற்போது வலைச்சரத்திற்கு வேண்டி நாங்கள் தேடிய போது தங்கள் பயணக் கட்டுரைகளைக் காண நேர்ந்தது. எங்கள் தளத்தில் நாங்கள் இருவர் எழுதுகின்றோம். துளசிதரன், கீதா.
  கீதா : இந்த =ப் படங்களையும், முனீஸ்வரன் என்ற பேரைப் பார்த்ததும், புளகாங்கிதம் அடைந்தோம். நான் கொழும்புவில் என் அப்பாவின் வேலை நிமித்தம் 3 ஆம் வகுப்பு வரை வுல்ஃபெண்டா பள்ளியில், ஜிந்துப்பட்டி முருகன் கோயில் அருகில், இருந்த போது எனது தாத்தா, அப்பாவின் அப்பா முனீஸ்வரம் கோயிலில் சில வருடம் தங்கி கோயிலில் பூஐ செய்துவந்தார். நான் சொல்லுவது 1960 களில். நான் 64ல் பிறந்த பிறகு, கொழும்புவில் வாசம். அப்போது முனீஸ்வரம் கோயில் போன நினைவு. சிறு பிள்ளையாக, கண்டி, எனது பள்ளி, தமிழ் நாட்டிற்கு கப்பல் பயணம் எல்லாம் இன்னும் என் நினைவில் உள்ளது. நாங்கள் 1970ல் பிரச்சினைகள் வரவும், எனக்கு வரப் பிடிக்காமல் இங்கு வந்தோம். தங்களது இந்தப் பயணக் கட்டுரை கண்டதும் அதுவும் முனீஸ்வரம் கண்டதும் மகிழ்வடைந்தேன்…எனது அப்பாவிடமும் காட்டினேன் அப்படங்களை.

  மிக்க நன்றி மிக்க நன்றி!

  மறுமொழி

 2. கோவை கவி
  செப் 25, 2014 @ 17:04:41

  மிக நன்றி சகோதரா…
  மிக மகிழ்ந்தேன்
  கருத்திடலிற்கு மிக மகிழ்வும் நன்றியும்.
  இறையாசி உங்கள் எல்லோருக்கும் நிறையட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: