6. இசைமகன்.

 

 

இசைமகன்.  

பிரிக்க அமெரிக்க உழைப்பாளர் குடும்பம்.
அமெரிக்க இந்தியானா கேரி நகர்.
ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தெட்டு.
ஆராதிக்கும் இசையெனும் சீவ இயக்கத்;துடன்
அற்புத இசை நடனக் கலைஞன் மைக்கல் ஐhக்சன்
ஆவணி இருபத்தொன்பதில் சாதனையாளனாகப் பிறந்தான்.

சிகரம் தொடவென்று கத்தரின் எஸ்தரின்
உதரத்தில் ஏழாவதானவன். வயலின் வாத்தியம்
வாலாயமானவர் தந்தை யோசப் வால்டர்.
‘ஐhக்சன் ஐந்து’  இசைக் குழுவை
ஐந்து சகோதரர்களை இணைத்து உருவாக்கினார்.
ஐந்து வயதில் பொப் இசையரசன் அரங்கமேறினான்.

றாம் வயதில் இசைக் குழுவிற்கு முதல் பரிசு.
பதினோராம் வயதில் தனி பொப் குழு அமைவு.
பதின்னான்கு வயதில் பொப் அல்பம் வெளியீடு.
அதிஅற்புத வரவேற்பு நாடு, மொழி, இனமின்றி.
பதின்மூன்று ‘கிராமி’ விருதள்ளிய சாதனையாளன்.
பொப் இசைவானின் துருவ நட்சத்திரம் மைக்கல் ஐhக்சன்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-7-2009.

 

 

பொப்பிசைச் சூரியனே!

கலோகம் இணைக்கும் இசையெனும் ஐசுவரியமே!
இந்தியானாவில் முளைத்த  இனிய இசை விருட்சமே!
ஆபிரிக்க அமெரிக்கக் குடிமகனே!
அகிலம் நிமிர்ந்து பார்க்கும் சிகரம்                                                                                                                                                   பொப்பிசைச் சக்கரவர்த்தி மைக்கல் ஐhக்சனே!
வேதனைகளால் திரண்ட விநோதமே!
வைராக்கிய உரத்தால் வளர்ந்;த
தைரிய சாதனையாளனே!
இனிய உன் இசை நடனங்களால்
எம் நெஞ்சம் கண்களை நிறைத்தாய்!
அப்பப்பா! எத்தனை விழுதுகள் உன் சாயலில்!
கை நிறைத்தாய் மில்லியன்களால்!
பலர் மனம் நிறைத்தாய் உன் தானங்களால்!

திருப்தியெனும் செல்வத்தால் உன் மனம்
நிறைக்க மட்டும் ஏனோ தவறிவிட்டாய்!

ன்னிசை கேட்கும் மக்களின்
தசை நார்கள் முறுக்கேறி
விசை கொண்டு ஆட்டுவிக்கும்
விந்தை எங்கு கற்றாய்!

டையில் நவீனம்! ஆட்டத்தில் நவீனம்!
உன் குரலில் ஒரு ஈர்ப்பு!
அறுபது பாடல்கள் தானாம்! ஆயினும்
என்னவொரு துறுதுறுப்பு உன்னிசையில்!

நிலவு நடையை நிரந்தரமாக்க
நிலவுக்கே சென்று விட்டாயா!
ஐந்தில் அரங்கேறிய பொப்பிசைச் சூரியனே!
ஐம்பதில் ஆவி பிரிந்தது
உன் வாழ்வு ஐந்து தசாப்தம்
ஒரு அளவெடுத்த காலமோ!

ன்னுடல் அழிந்தாலும் உன்னிசையூற்று அழியாது!
உலகோரைப் பலவசத்திலாழ்த்தினாய்!
இனியாவது நீ அமைதி பெறுவாய்!
உன் ஆத்ம அமைதிக்கு எம் அஞ்சலிகள்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
12-7-2009.

( திவுகள் இணையத்தளத்தில் வெளியானது. இரண்டு வானொலிகளிலும் என்னால் வாசிக்கப்பட்டது. — ர்p.ஆர்.ரி தமிழ் ஒலி,  இலண்டன் தமிழ் வானொலி.)

http://www.geotamil.com/pathivukal/august2009_poems.htm#vetha

In Anthimaalai web site:-      http://anthimaalai.blogspot.com/2011/12/4.html

                                

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Gajan
  டிசம்பர் 25, 2010 @ 08:32:49

  தங்களின் இசைமகன் கவிதை அற்புதம், மரணித்தாலும் இன்னும் எல்லா இசை மனங்களிலும் உயிர்வாழும் பொப் இசை வேந்தன் மைக்கல் ஜக்சனை கவியாய் வடித்தீர்கள். அருமையிலும் அருமை வாழ்த்துக்கள்,

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 25, 2010 @ 15:44:11

   நன்றி அன்புச் சகோதரரே! கஐன்!..வாழும் வரை நாமும் ஏதாவது சிறு சாதனையாவது படைக்க முயற்சிப்போம். இதில் நீதி, நேர்மை முதலில் மிகவும் முக்கியம். நமது பல்லில் அழுக்கின்றித் தானே, பிறர் பல்லுப் பற்றிக் கூற முடியும். வாழ்த்துகள் சகோதரரே!

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: