12. வாழ்கடல் வலம்புரி அம்மா.

 

வாழ்கடல் வலம்புரி அம்மா.

தாமரை பூத்த கரையிலே
    சாமரம் வீசும் தென்றலாய்,
சாந்தி தரும் தாயன்பு.
    சாமகானத் தாய்மை, சீவன்களை
சாரத்தியம் பண்ணும் சங்கீதம்.
    சர்வலோக சஞ்சீவி தாய்மை.
அன்பு அகராதியை ஆரம்பித்த
    அறிமுகத் தொப்புள் கொடிப்பாசம்.
 
 காலங்கள் வெற்றுக் கிண்ணமாகாது,
    கோலமிடும் துன்ப நூலாம்படைகளை,
மூலமான பாசக் கண்ணிமையால்
    பலமாகத் தள்ளும் மின்சாரம் தாய்மை.
நந்தவனப் பாசக் குகையதில் அம்மா
    விந்திலிருந்து உருவான இசைச்சந்தம்.
வசந்த மழலையின் நேச அருவி.
    அந்தமுடன் நீந்தும் அமுதஅருவி.
 
யிருக்கு உறவானவள், சிந்தனைப்
    பயிருக்கு முன் மாதிரியானவள்.
துயருக்குப் பாச மருந்தானவள்.
    அயராது உழைக்கும் தேனீயவள்.
மனிதம் உய்ய வந்த
    மகரந்தத் தேன் தாய்மை.
ஏழ் கடலிலும் காணாத
    வாழ்கடல் வலம்புரி அம்மா.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-5-2006.

( திவுகள் இணையத்தில் வெளியானது. ரி.ஆர்.ரி தமிழ்ஒலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

http://www.geotamil.com/pathivukal/poem_kothai_ammaa.html

                  
 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: