86. மறந்தது எப்படி!

 

மறந்தது எப்படி!   

 

உறியில் உப்பிருந்தும் கண்ணே!
கறியில் உப்பிட மறந்தது எப்படி!

கண்ணாடியை முகத்தில் மாட்டியபடி
கண்ணாடியை தேடுகிறாயே செல்லம்!

தேனீருக்கு சீனி கலக்குவதாய் அன்பே
உப்பைக் கலந்தாயே மறந்தது எப்படி!

இரண்டாவது மாடிக் கதவு துவாரத்தில்
சாவியிட்டுத் திறக்க எத்தனித்தாயே!
மூன்றாவது மாடியில் வசிப்பது மறந்தது எப்படி!

கதையல்ல, விவாதமல்ல, கவிதைக்கொரு
கவித்துவத் தலைப்பிட மறந்தார்கள் எப்படி!

மறதி  என்பதொரு மயக்கமா!
மனித வாழ்வில் வருமொரு பலவீனமா!
இளமையில் மறதி அது என்ன!
முதுமையில் மறதி அது என்ன!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்  டென்மார்க்.
6-1-2009.

(இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியிலும் என்னால் வாசிக்கப்பட்டது.)
In vaarppu.com july 2014:- http://www.vaarppu.com/view/2723/

 

                                          

 
 

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Angelin
  பிப் 26, 2012 @ 17:15:01

  இளமையில் மறதி ……மயக்கம்
  முதுமையில்.. மறதி… அது பலகீனம் .
  நல்ல கவிதை

  மறுமொழி

 2. kowsy
  செப் 16, 2014 @ 06:51:02

  மறதி மனிதனுக்குத் தேவை. அதுகூட அளவு க்குத் தான் இருக்க வேண்டும் . முதுமையில் வரும் மறதிக்கு அல்ஸ்கைமர் நோய் என்பார்கள் . மறதி சிலவேளை கவலையீனத்தாலும் stress ஆலும் வருகின்றது.

  மறுமொழி

 3. கோவை கவி
  அக் 28, 2015 @ 17:26:03

  அன்புச் சகோதரி தங்கள் இனிய வரவிற்கும், கருத்திற்கும் மிக மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் ஆசி கிடைப்பதாக.

  மறுமொழி

 4. கோவை கவி
  அக் 28, 2015 @ 17:26:45

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: