89. சிந்தித்தால் சிரிப்பு வரும்.

சிந்தித்தால் சிரிப்பு வரும்.  

நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! ஒப்பாரியை நிறுத்துங்கள்!
உறுத்தும் உங்கள் இழப்புகளை எண்ணி
பொறுப்பின்றி இழுக்கும் ஒப்பாரியை சிறிது
நிறுத்துங்கள்! நிமிருங்கள்! எழுந்து நிமிருங்கள்!

தமிழின் குடும்பத்து வாழ்வுப் பயணம்
தற்காலிகமாயின்று துன்ப நகரத்தில்.
தங்கிட மாட்டார்கள் நிரந்தரமாய் அங்கு.
தொங்கவிடாதீர்கள் அவர்களையுங்கள் துன்பக் கொழுக்கியில்!

துன்பச் சுமையால் எழுவது சுலபமல்ல!
தன் நெஞ்சுத் துணிவும், காலத்தின் துணையும்
அன்புடைய தமிழின் நினைவுகளும், அழியாத
தென்புடைய அனுபவங்களும் மேலெழத் துணையாகும்.

நோய் வந்து பாய் விரித்தாலும்
வாய் ருசிக்க பொரியல், கரியலாய்
மாய்ந்து மாய்ந்து உணவு சமைக்கிறார்களே!
தூய்மை உயிரைப் பாதுகாக்க வேண்டாமோ!

கொழுப்பு உணவைத் தவிர்த்துத் தம்மில்
பழுக்கும் மரணத்தைத் தள்ளிப் போடாத
வழுக்கும் நிலையைச் சிந்தித்தால் சிரிப்பாகிறது.
இழுக்கு வராதுடல் காப்பது நம் கடனன்றோ!

கவனிப்பற்ற உணவுப் பழக்கம் வெறும்
அவலம் தரும் வாழ்வின் வழியாகும்.
பவனி வர வேண்டாமோ சுகமான உடல்!
அவதானியுங்கள்! உயிர் உடலில் தங்கட்டும்!

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2-11-2008.

(இலண்டன் தமிழ்  வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

                   

 

                                   

 

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. sravaani
  பிப் 27, 2012 @ 09:14:42

  நாவடக்கம் வெறும் பேச்சுக்கு மட்டும் அன்றி
  ருசிக்கும் பொருந்தும் , ஆரோக்கியம் மிக அவசியம்
  என்றக் கருத்து தாங்கிய கவிதை மிக நன்று சகோதரி.

  மறுமொழி

 2. ரெவெரி
  பிப் 27, 2012 @ 16:53:38

  இருந்தாலும் அஞ்சப்பருக்குள்ளே நுழைந்தால் நாவடக்கம் பறந்து போகிறது சகோதரி…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: