1. நவீன பார்த்தசாரதியுடன் நாம்……

 

 

நவீன பார்த்தசாரதியுடன் நாம்……..(1)  17-9-06.

(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களுமடங்கிய இது)

பி ள்ளைகள் உடல் நலம், மனநலம் பற்றிப் பெற்றவர் அக்கறை கொள்வது போல, பெற்றவர் மகிழ்விலும் பிள்ளைகள் அக்கறை கொள்வது தான் பரஸ்பரம் புரிந்துணர்வு என்போம்.

வ்வகையில் கடந்த காலங்களில் அப்பாவும், அம்மாவும் எங்காவது சுற்றுலா போங்கள் என்று எமது பிள்ளைகள் வேண்டுகோள் விடுத்தபடி இருந்தனர்.

தேதி குறித்து, இடம் தெரிவு செய்து, விடுமுறை எடுங்கள், நான் வந்து அண்ணாவுக்கு உதவி செய்கிறேன்”   என்று மகளும் இலண்டனிலிருந்து வற்புறுத்தினார்.

ரியென்று கூறியபடியே முடிவு இழுபட்டது. “”ஆவணி 10ல் நான் டென்மார்க்கில் நிற்பேன், நீங்கள் வெளிக்கிடுகிறீர்கள்!”” என்று கட்டளையே இட்டார் மகள்.

நாம் பயண முகவர்களிடம் எடுத்த பயணத் திட்டமானது,  ஒரு இடத்தில் நின்று சுற்றிப் பார்ப்பது, வெயிற் குளிப்புடனமைந்த ஓய்வு நாட்கள் என்று இருந்தது என் கணவருக்குப் பிடிக்கவில்லை.

ல இடங்களை ஒரே தடவையில் மகிழ்வுந்தில், (காரில்) சென்று பார்ப்பதென, இடங்கள் தெரிவு செய்தோம். தங்கும் இடங்களை என் கணவர் கணனி மின்வலையில் தெரிவு செய்து முகவரிகள் சேகரித்தார், ஆனால் பதிவு செய்யவில்லை.

மது நீண்ட பயணத்திட்டத்திற்கு, 1986 ம் ஆண்டு ‘ மஸ்டா  வாகனம்’   பிள்ளைகளுக்குத் அதிருப்தியாகவே இருந்தது. அவ்வப்போது தொலைபேசியில் நாங்கள் செய்தி தருவதாகவும், எமக்கு மகிழ்வுந்தில் செல்வது வசதி என்றும், எடுத்துக் கூறி, ஒருமாதிரி அவர்களைச் சமாதானப் படுத்தி, பயண ஆயத்தங்கள் செய்தோம்.

னக்குத் திகிலாகவும், எல்லாம் சரியாக நிறைவேற வேண்டுமே என்ற யோசனையுமாக இருந்தது. பயணக் கலகலப்பு எனக்கு வரவேயில்லை. எதையும் வெளிக் காட்டாது ஆயத்தங்களைச் செய்தேன்.

ம்முடன் ஒரு முக்கிய நபரையும் கூட்டிச் சென்றோம். எமது பெரிய பலமாக இவர் இருந்தார். இவரின்றேல் எமது பயணம் வெற்றியடைந்திருக்காது. அர்ச்சுனனுக்குக் கண்ணன் தேரோட்டியது போல, நாம் காரோட்ட வழிகாட்டியாக இருந்தவர்.

தின்மூன்றரை சென்ரிமீட்டர் நீளமும், எட்டு சென்ரிமீட்டர் அகலமும் கொண்ட, நவீன பார்த்தசாரதி என்று நாம் நாமம் சூடிய, ஐரோப்பிய நவிகேட்டர்  தான் எம்முடன் வந்த விசேட நபர்.

 

கரத்தின் பெயரும், இலக்கமும் கொடுத்தால் அருமையாக வழியைக்காட்டும் அற்புதர் இவர். எப் பாதையில் போகிறோமோ, அப் பாதைக்குரிய வேகம் தவறி, மேலதிகவேகமாகப் போனால், பெற்ற தாயினும் மேலாக,  ‘பிவெயர்..பிவெயர்’ என்று ஜாக்கிரதை! ஜாக்கிரதை! என்று பெற்ற தாய் போல அலுக்காமல் கூறுவதும், இது தொல்லையாக இருக்கே என்று சத்தத்தைக் குறைத்தால், பென்னம் பெரிய சிவப்பு ஆச்சரியக் குறியைப் பாதையின் வேக இலக்கத்திற்கு அருகில் போட்டும் காட்டுவார்.

ந்நூறு கிலோ மீட்டர் நேராகப் போங்கள் என்றால் பேசாமல் பாட்டைக் கேட்டபடி வாகனத்தை ஓட்டலாம். மூன்று கிலோ மீட்டர் நேராகப் போங்கள் என்றால், ஒரு திருப்பமோ, வளைவோ எதிரே வரப்போகிறது என்று கவனமாக இருக்கலாம்.    ” இவருடன் மிகத் திறில்லாக இருக்கும், உறவாடிப் பாருங்கள் “….. என்று கூறித்தான் மகன் எங்களை வழியனுப்பினார்.

வணி 13 ஞாயிறு காலை 8.00 மணிக்கு வீட்டிலிருந்து கணவரும் நானும் பாரீஸ் நோக்கிப் புறப்பட்டோம். பாரிஸ்ல் நாம் தங்க வேண்டிய விடுதி அறை முகவரிக்கு 1227 கிலோ மீட்டர் தூரத்தைக் காட்டினார் நவீன பார்த்தசாரதி.
.21-9-06.
பாரிஸ் 18 லாச்சப்பலை எமது தங்குமிடமாக நாமாகவே விரும்பித் தெரிவு செய்தோம். சனி மாலை, நேரம் செல்ல வந்த மகனை எழுப்பாது, சனி பகலே அவருக்குப் பயணம் கூறிவிட்டோம். மகள் ஞாயிறு காலையில் எழுந்து, ”  சந்தோசமாகப் போய் வாருங்கள், அண்ணாவைக் கவனமாகப் பார்ப்பேன், நாங்கள் சண்டைபிடிக்கமாட்டோம் ”  என்று வழியனுப்பினார்.

யது முப்பதுகளைக் கடந்தாலும் கொள்கை முரண்பாடுகளில் சிறு குழந்தைகள் போலத் தான் எமது பிள்ளைகளும் சண்டைபிடிப்பார்கள். அது போல அன்பிலும் ஒருவருக்கு ஒருவர் உயிராக உருகுவார்கள். அதில் நாம் நெகிழ்வதும் உண்டு. அது வேறு கதை.

வாகனத்தில் அமர்ந்து ஓடத் தொடங்கியதும் எனக்குப் பயணக் குதூகலம் வந்து விட்டது. மனம் மகிழ்வில் துள்ளியது.

பாடல் ஒலிப்பதிவு நாடாக்களைப் போட்டுப் பாடல்களைக் கேட்டும், அதனோடு சேர்ந்து பாடியும், கவி வரிகளை மனதில் உள் வாங்கியும் மகிழ்வாகப் பயணம் செய்தோம்.
     ….” ஒரு சோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
         உறவன்றி வேறு இல்லை கவனங்களில்…” என்ற வரிகள் போல  ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை, சாரதிகள் இடம் மாறினோம்.

மாறும் போது கை, கால்கள், உடலிலும் தசைகள் இறுகித் தொல்லைகள் தராது இருக்க சில பயிற்சிகளையும் செய்து கொள்வதில் கவனம் செலுத்தினோம். வாகன யந்திரத்திற்கும் ஓய்வும் கொடுத்தோம்.

சிக்கிறது எனும்போது நாம் உணவு எடுத்தோம். போதிய அளவு  போத்தல்களில் தண்ணீரையும் கைவசம் வைத்திருந்தோம். வாகனம் செலுத்தவதில் இவர் நிதானமாகவும், நான் வேகமாகவும் இருந்தோம்.

7,8 தடவைகள் இலண்டனுக்கு இதே வாகனத்தில் சென்றுள்ளோம். பின் பிள்ளைகள், இவரின் இலண்டன் உறவுகள் தடை போட்டு, நிறுத்தி வைத்திருந்தோம். நீண்ட இடைவேளையின் பின் இன்னொரு வாகனப் பயணம். எமக்கு மிகப் பிடித்தது.

னது கணவர் முகம் சற்று வாடியே இருந்தது. ஏனென்றபோது, ” ஒன்றை மட்டும் எப்படி நம்பி வெளிக்கிடுவது? “…. என்றார். தனிய பார்த்தசாரதியை மட்டும் நம்பாது, பாதைகளின் விபரங்களையும் கணனியில் பிரதி பண்ணி (பிரின்ட்) கொண்டு வர அவர் விரும்பினார். போக்கு வரவுப் பகுதியின் ஒத்துளைப்பு கணனியில் கடைசி இரு நாளும் சரியாக இயங்கவில்லையெனப் பதில் வந்தது.

பாதை விபரங்களைப் பதிவு பண்ண முடியாத சோர்வு இவர் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. நல்ல வேளை இரண்டை நம்பாது, என் ஒருத்தியை நம்பி வாழ்க்கைப் பயணத்தில் வந்தாரே என்று நான் நகைச்சுவையாகக் கூறிச் சிரித்தோம்.

ளவான காலநிலை. கோடை ஆடையோடு பயணக் காலம் முழுவதும் இருந்தோம்.
நள்ளிரவு 12.00 மணிக்கு பாரிஸ் 18 ஐ அடைந்தோம். நல்ல ஒரு விடுதி அறையைத் தெரிவு செய்தோம். அருகிலேயே வாகனம் நிறுத்த இடமும் கிடைத்தது.

     

யண அலுப்பத் தீரக் குளித்தோம்,   ”  நள்ளிரவு, உணவகங்கள் மூடிவிடுவார்கள், அருகில் அரேபிய உணவகங்கள் உண்டு”    என்ற விடுதிப் பொறுப்பாளர் தகவலிற்கமைய, அருகிலேயே அரேபிய உணவகத்தில் பீசா  சாப்பிட்டுவிட்டு  நடந்து வந்தோம். அசிங்கமான தெரு. வைரவர் வாகனக் கழிவு, உணவு எச்சங்கள், சிறு நீர் மணம்  “.. சிச்சீ!…”  என்ற படி எமது கூட்டை அடைந்தோம்.          

ம்மைக் குளப்ப வேண்டாம் என்ற தகவலைக் கதவுக்கு வெளியே போட்டுக் காலை 8.00 மணி வரை நன்றாக நித்திரை கொண்டோம்.         

அடுத்த அங்கம் 2ல் மிகுதியைப் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்.   
ஓகுஸ், டென்மார்க்.

17-10-2010.

straight line

1 பின்னூட்டம் (+add yours?)

  1. Trackback: தூ…….தூ…….போ……போ………!  | ranjani narayanan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: