நவீன பார்த்த சாரதியுடன் நாம்..3

நவீன பார்த்த சாரதியுடன் நாம்..3

பயண அனுபவங்களும், சரித்திரத் தகவல்களுடனும் அமைந்தது..இது…(படங்களின் மேலே கிளிக்குங்கள் பெரிதாகக் காண்பீர்கள்.)

 

ரி.ஆர்.ரி கலையகத்திலேயே ஈபில் கோபுர முகவரியை எடுத்து நவீன பார்த்த சாரதியிடம் ஊட்டி, அவர் வழிகாட்டலில் கோபுரம் பார்க்கப் புறப்பட்டோம். கணவர் தான் அப்போது வாகனம் செலுத்தினார். சிறிது தூரம் செல்ல ஒரு சந்தியில் பிரான்ஸ் பொலிஸ் குழுவினர்  வாகனங்களை நிறுத்திப் பரிசோதனை செய்தபடி நின்றிருந்தனர். ‘ ஓகோ! பிழையான நேரத்தில் நாம் வந்துள்ளோம் போல இருக்கிறது…’  என்று கூறி முடிய முதல், ஒரு பெண் பொலிஸ் எம்மைக் கை காட்டி ஓரம் கட்டக் கூறினாள். ‘ ஏன் எங்களை நிறுத்துகிறீர்கள்! நாம் ஏதும் பிழைகள் விடவில்லையே…’ என்றோம்.

நாம் யார்? என்ன? ஏது எனக் கேட்டு, வாகனக் காப்புறுதி, பதிவுப் பத்திரங்களைக் கேட்டனர். நாம் அவற்றை இங்கு கொண்டு வரவில்லை என்றோம். ‘ எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள்?..’ என்றாள். ‘ ஏன்?…’ என்றார் கணவர். ‘..தண்டனைப் பணமாக எனக்கு 35 ஈரோ வேணும்…’ என்றாள். கணவரிடம் 15 ஈரோ தான் இருந்தது எடுத்துக் காட்டினார், கொடுக்கவில்லை. ‘..காசில்லாமல் எப்படி என்றாள்..?..’ விசா அட்டையைக் காட்டினோம். ‘..தேவையானால் இழுப்போம்..’ என்றோம்.

                   

 

விசா அட்டை, வாகனம் ஓட்டும் அனுமதிப் பத்திரம் யாவும் வாங்கிப் போய் கூடிப் பேசினார்கள்.
மறுபடியும் வந்து வாகனப் பதிவுப் பத்திரக் கதையை இழுத்தாள். ‘…நாம் இதைக் கொண்டு திரிவதில்லை. இதோ எமது ஐடி அட்டை, டென்மார்க் பொலிசுக்கு உடனே தொலை பேசி எடு! எமது முழு விபரமும் தமது விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள். உடனே தருவார்கள்..’ என்றோம். இதை இரண்டு தடவை நான் கோபமாக அழுத்திக் கூறினேன். அவளும் எனக்குத் தெரியும் என்று அழுத்திக் கூறினாள். பின்னர்..’.. நீங்கள் உல்லாசப் பயணிகளாதலால் எம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. உங்கள் பயணம் நல்லாக அமையட்டும் ..’ என்று வாழ்த்தி எம்மைப் போக அனுமதித்தாள்….’..எம்முடன் இனிமேல் பத்திரங்களைத் தவறாமல் எடுத்துச் செல்வோம். மிக்க நன்றி…’ என்று கூறி பயணத்தைத் தொடர்ந்தோம். அப்பாடா! என்று இருந்தது.

தில் பாதி நேரம் போய்விட்டது. நாம் டென்மார்க் பிரஜா உரிமை பெற்றவர்கள். எம்மிடம் எதுவித ஐடி யும் இல்லை. வைத்தியரிடம் காட்டும் சுகாதாரக் காப்புறுதி அட்டையையே நாம் போலீசாரிடம் காட்டினோம். இதை நம்முடன் தேசியரீதியாக எப்போதும் வைத்திருக்க வேண்டப் பட்டுள்ளோம்.

நேரம் மாலை 4.45 ஆனது.

பொலிசார் அங்கு வந்த வெள்ளையர்கள் வாகனங்கள் எதுவுமே நிறுத்தவில்லை. கறுத்தவர் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி ஏதேதோ பேசினார்கள். அது..என்ன! ..இனத்துவேசமா!…அவர்கள் கடமையா!..வேற்று நிறத்தவர்களை மட்டும்!…ஏன்!…எதுவுமே..பரியவில்லை…

…’..பிரான்ஸ்…பொலிசி.!…’..என்றபடி ஒருமாதிரி  பொலிஸ் கெடுபிடியிலிருந்து தப்பிப் பயணத்தைத் தொடர்ந்தோம்

சால்ஸ் டி கோலா தெருவூடாகத் தொடர்ந்த போது தெரு முன்புறத்தில் எக்கச்சக்க சன நெரிசல். ‘.ஓகோ! வந்து விட்டோமா!..ஈபில் கோபுரத்தடிக்கு!…அப்படியானால் எங்கே கோபுரத்தைக் காணோமே!…எனப் பேசியபடி தொடர்ந்த போது ஆக் டி றியும்ப் என்று கூறும் பெயர் பெற்ற பிரான்சின் வெற்றி வளைவு தெரிந்தது. ‘..ஓகோ! ..இதைத் தான்..திருமதி குகநாதன் சால்ஸ் டி கோலாவும் பார்க்கக் கூடிய இடம் என்றாரோ!…’ என்று பேசிய படி வசதியான இடம் தேடி வாகனத்தை நிறுத்தினோம். புகைப்படக் கருவியுடன் இறங்கி இதைப் பார்க்க நடந்தோம்.
பிரான்சில் இந்தப் பெயரில் ஒரு விமான நிலையமும் உண்டே!…

யாரிவர் இந்த சால்ஸ் டி கோல்!….

—————–மிகுதியை அடுத்த அங்கத்தில் பார்ப்போம்.————

வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
18-10.2010.

last line

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: