நவீனபார்த்த சாரதியுடன் நாம். (2)

நவீனபார்த்த சாரதியுடன் நாம்.  (2)  29-9-2006.

(பயண அனுபவங்களுடன் சரித்திரத் தகவல்களுடனும் அமைந்தது. இது….)

 காலை திங்கட்கிழமை புத்துணர்வோடு லாச்சப்பலில் விழித்தோம். ஏற்கெனவே வதனி மகால் சகோதரர் ஞானியை சந்திப்பதாக டென்மார்க்கிலிருந்து தொலை பேசியில் பேசியிருந்தோம். அவர் முகவரிக்குப் பார்த்த சாரதியைத் தயார் படுத்தி விட்டு வெளியே புறப்பட்டோம்.

 

ப்போது நான் பிரான்ஸ் தெருக்கள், கட்டிடங்கள் பெயர்களை டெனிஸ் அல்லது ஆங்கில உச்சரிப்பில் தான் கூறப்போகிறேன், தவறுகளைத் திருத்தியெடுப்பீர்களாக!

 

றூ பிலிப்ப டி கிறாட் தெருவின் விடுதி அறை வாசலில் நின்று வலது பக்கம் நோக்கினால் லாசப்பல் மெட்றோ பாலம் தெரியும். இடது பக்க தொங்கல் வரை தெருவின் இரு பக்கக் கட்டிடங்கள், ஆதிகாலத் தொடர் மாடி இராச கட்டிடங்கள், பிரமாண்டமாக, அழகாக, பல்கணியில் கலை வேலைப்பாடுகள் கொண்ட கம்பி வளைவுகளாகக், கவர்ச்சியாக இருந்தது. அதன் அருமை அழகு என்னைக் கவர்ந்தது. ‘ ஓ! பழசு என்றாலும் எவ்வளவு அழகு!….’  என வாய்விட்டுக் கூறி வியந்தேன்.

ழியில் வானொலிகளில் கேட்ட கடைப் பொயர்களைப் பார்த்தபடியே நடந்தோம். முதல் வேலையாக  

ரு தொலைபேசி அட்டை வாங்கி பிள்ளைகளுடன் பேசினோம்.
என்ன! ஆச்சரியப்படுகிறீர்களா! இன்னும் நாம் பிள்ளைகளுடன் பேசவில்லையென.
மாம்! எம்மிடம் கைத் தொலைபேசி இல்லை. இன்று வரை இது எமக்குத் தேவையென நாம் எண்ணவும் இல்லை. பிள்ளைகள் பல தடவை ஏசியதுண்டு, ஒரு தொலை பேசியை வாங்குங்களேன் என்று, இது வேறு கதை.

 

மொழிப் பிரச்சனையால் தொலை பேசி அட்டை சிறிது சிரமம் கொடுத்தது. அருகில் ஒரு தமிழன்பர் வேலை முடிந்து வந்து சிநேகிதருக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார். அவரிடம் மொழி உதவி பெற்று, பின்னர் பேச சரி வந்தது.

 

காலையுணவை விடுதி அறையில் நாமாகப் பணம் கொடுத்து உண்ண வேண்டியது. ஏன் நாமே கடை வீதிக்கு நடந்து சென்று வேறு ஏதாவது உண்ணலாமே என்று நினைத்து கணேஷ் கோணரில் தேனீருடன் அப்பம் சாப்பிட்டோம். பின்னர் சென்று வாகனத்தை எடுத்துக் கொண்டு  வதனி மகாலுக்குப் போனோம். என்னே! ஏமாற்றம்!

 

திங்கட் கிழமைகளில் இவர்கள் கடை பூட்டுவார்களாம். இது எமக்குத் தெரியாது. சரி, இனி என்ன செய்யலாம் என எண்ணி, வாகனத்தை ஒரு வசதியான இடத்தில் நிறுத்தினோம். ‘ ஏய்!….இது எனது இடம் எடு..எடு…’ என்று ஒரு ஆபிரிக்கன் பிரெஞ்சில் கத்தினான். ‘ சரி! இப்போ ஏன் கத்துகிறாய்! எடுக்கிறோம்…’ என்று அவன் கத்திய தோரணையில் நான் ஆங்கிலத்தில் பதிலளித்தேன். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

 

வேறு இடம் தேடி வாகனத்தை நிறுத்தி ரி.ஆர்.ரி கலையக முகவரியைப் பார்த்த சாரதிக்கு ஊட்டினோம்.

 

ந்தவித சிரமமுமின்றிக் கலையகம் நோக்கிப் பயணமானோம். பிரசிடென்ற் வில்சன் தெருவுக்குப் போய் இறங்கித் தேடிய போது அவர்கள் இலக்கத்தைக் கண்டு பிடிக்கச் சிரமமாக இருந்தது.

க்கத்தில் வசதியாக ஒரு தொலைபேசிக் கடை இருந்தது. கலையகத்திற்குத் தொலைபேசி எடுத்தால் ‘ நான் வாசலில் நிற்கிறேன் வாங்கோ அன்ரி என்றார் திருமதி குகநாதன்’….

 

ல்ல வேளை திரு.குகநாதனும் கலையகத்தில் நின்றிருந்தார். சகோதரர் ராஜா ‘….யார் உங்களைக் கூட்டி வந்தது?…’ ஆச்சரியமாகக் கேட்டார். நவின பார்த்த சாரதி தான் என்றோம்.

 

கோதரி பவானியும் சிறிது நேரத்தில் வந்தார். அவர்கள் அன்பான உபசரிப்பில் ஒன்றரை மணி நேரம் உறவாடினோம். ‘…..எங்கே தங்குகிறிர்கள்?….’ கேட்டார் திரு குகநாதன். ‘…லாசப்பலில் தான் என்றோம்…’
 (ரி.ஆர்.ரி கலையகப் படங்கள் பார்க்கிறீர்கள்)

 ‘..பிறகென்ன முழுப் பாரீசும் பார்த்த மாதிரித் தான்…’ என்றார் தன் வழமையான கிண்டல் நகைச்சுவையுடன் திரு குகநாதன்.

————-மிகுதியை அங்கம் 3ல் பார்ப்போம்———————

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: