100. தூருக்குச் சேதமின்றி……

 

தூருக்குச் சேதமின்றி……

 

தோல்விகளின் தொடரான தோரண வரிசைகள்,
சால்வை தரித்து திலகமிடும் ஏமாற்றங்கள்,
மேல்விலாச முத்திரை மாற்றும் இழப்புகள்,
மேல் நிலை மனிதம் மரக்கும் அதிர்வுகள்.

தோல்விகளின் கனம் தாங்கும் உடலில்
தோல் சுரணைத் துலக்கம் குறையும்.
தோழமைப் போர்வை இதமும் மாறும்.
தோள் கொடுக்கும் உணர்வும் ஊறடையும்.

மேடையிட்டு மேவும் பல ஏமாற்றங்கள்
மேலாடையிடுகிறது மேன்மைக் குணங்களிற்கு.
மேன்மாடம் அமைக்கிறது அவநம்பிக்கை உணர்விற்கு.
மேற் பார்வையை அறிவு மயக்குகிறது.

காலூன்றிக் காயமிடும் காட்டமிகு இழப்புகள்
நூலறிவின் ஒளி கலைக்கும் மயக்கங்கள்,
சீலமுடைகுணம் மாற்றும் ஊனங்கள்,
மேல் நிலை மனிதத்தின் இறக்கங்கள்.

வேருக்குள் புகுந்திடும் சிறு பூச்சிகளாய்
யாருக்கு இல்லை அதிர்வான தாக்கங்கள்!
நேருக்கு நேராகும் ஆழ்மன மாற்றங்கள்!
தூருக்குச் சேதமின்றிப் பாதுகாத்திடுங்கள்!

 

வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.
6-4-2007.

(முத்துக் கமலம் இணையத் தளத்தில் வெளியானது.
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

http://www.muthukamalam.com/muthukamalam_kavithai342.htm

                     
 

 

 

 

 

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  செப் 08, 2017 @ 08:13:11

  Sj Siva :- வேருக்குள்புகுந்திடும் சிறு பூச்சிகள்…. நல்லதொரு உவமையும் கருத்தும்
  8-9-2017
  Vetha Langathilakam :- மிக நன்றி உறவே.
  இனிய கருத்திடல் மகிழ்ச்சி
  8-9-2017..

  மறுமொழி

 2. கோவை கவி
  செப் 16, 2017 @ 08:36:15

  Vetha Langathilakam கருத்துகள் தரும் உருத்து உங்களது…
  விருப்புடன் காத்திருப்பது எங்களது.
  பெரும் பொறுமை வேண்டப்படுவது.
  அரும் தவம் போனறது அது.
  · 12 September at 14:12

  Maniyin PaakkalGroup admin :- ஆழமான ஆக்கம்
  16-7-17
  Vetha Langathilakam :- மிக நன்றி சகோதரா. மகிழ்ச்சி.
  கருத்திடுவதே ஒரு தேவையற்ற செயலாகிவிட்டது இன்று
  16-9-2017

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: