5. குடத்து விளக்காகவல்ல…..

 

குடத்து விளக்காகவல்ல…..

 

குடத்தில் விளக்காய் ஏன் பெண்ணே!
நடக்கும் விளக்கன்றோ நீ பெண்ணே!
தடம் பதிக்க ஆசை கொள்!
சுடர் வீசத் திறமை கொள்!
திடம் கொண்டு சுமைகள் பங்கிடு!
அடங்கும் எண்ணச் சிறகை அரி!
இடப்புளக்கம் உலகில் பரந்தது.
அடம் பிடித்தேனும் அறிவைப் பெருக்கிடு!

நுண்மையாய்ப் பெண் இல்லம்; பேணும்
வண்ணம் கண்டு ஊர் வியக்கும்!
தண்மை அன்பைத் தரும் இவள்
கண்படும் அழகிலும் ரதி மகள்!
ஊன்றுகோலாய்ப் பெண் குடும்பத்திற்கும்
சான்றோனாக வாரிசை வளர்க்கவும் – ஆனால்
பெண் திறனை எல்லோரும் போற்றார்.
புண்பட வைக்கவும் சிலர் பின்னிற்கார்!

பெண்னைத் தாழ்த்தும் ஆண்மகன்,
பெண்ணிங்கு ஆணை மதிப்பதில்லை
என்ற குற்றப் பாசிகள் விலக்கி
மண்ணேற்க மதித்து நடக்கலாம்.
பெண்ணே தன்னிலை உயர்த்தல் உரிமை.
பெண்கள் தினத்தில் மட்டுமல்லை
என்றும் பெண்மனத் தாழ்வு நிலையழித்து
குன்றில் தீபமாகலாம்!…குடத்து விளக்காகவல்ல!….

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-3-2006.

(ரி.ஆர்;.ரி தமிழ் அலை, ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

                                    

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  செப் 17, 2017 @ 07:46:32

  Gowry Sivapalan ஆம். பெண் குன்றில் விளக்காக.
  16-9-2017

  Vetha Langathilakam :- மிக நன்றி Gowry. மகிழ்ச்சி.
  கருத்திடுவதே ஒரு தேவையற்ற செயலாகிவிட்டது இன்று.
  16-9-17

  மறுமொழி

 2. கோவை கவி
  செப் 17, 2017 @ 07:48:59

  Vetha Langathilakam கருத்துகள் தரும் உருத்து உங்களது…
  விருப்புடன் காத்திருப்பது எங்களது.
  பெரும் பொறுமை வேண்டப்படுவது.
  அரும் தவம் போனறது அது.
  16-9-2017
  Subi Narendran :- பெண்ணை புதுமைப் பெண்ணாக்கும் புத்தி மதிகள் அருமை. வாழ்த்துக்கள்.
  17-9-17
  Vetha Langathilakam:- கருத்திடும் உருத்தை
  கையிலெடுத்தமைக்கு நன்றி சகோதரி.
  மகிழ்ச்சி
  17-9-2017

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: