6. மறுமலர்ச்சி.

(‘ உறவு’  எனும் இந்திய மாத சிறு சஞ்சிகையில்
புதுவை சிவம் அறக்கட்டளை நடத்திய கவிதைப்
போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.    2006- april – page 23 )

          

 

மறுமலர்ச்சி.

இருமனம் இணையும் ஒருவழி யாகம்
இருமனம் சேரும் திருமண யோகம்.
பிணையா இருமனம் திருமணப் பெயரில்
இணையாதொரு வழி ஏகல் நோதல்.
ஆதிக்க நாயகனின் ஆதிக்க நினைவால்
பாதிக்கும் இல்லறம் – நீதியில் பேதம்.
மோதிப் புழுங்குதல் – மிதித்தல் சேதம்.

அன்பின் கசிவு ஆங்காரமாகி, – ஆதிக்கம்
வன்முறைப் புற்றுநோயானால், -பாதிக்கும்
மென்மனம் கண்ணாடியன்றோ,- சோதிக்கும்
எண்ணமேன்? வேதனை அழிக்கும் ஆரோக்கியம்.
தனக்குள் கலங்கும் வெறுப்பான வாழ்வு
தனக்கே சேதம்- பொருமுதல் தேய்வு.
வாழ்வு வளமான வழிமுறைத் தெரிவு.
தாழ்வு வழியேகும் மனக்காப்பு உயர்

தாலிக்குள் தாம்பத்தியத்தை முடிச்சிட்ட மூத்தோரே!
தாலியால் வாழ்க்கையே தடுமாறல் நியாயமா?
ஒருவனுக்கு ஒருத்தியென்று ஒடுங்கியே வாழ்வதா?
இருவேறு பாதையாய் திசைமாறல் மறுமலர்ச்சி.
திருவினை பெற்றிட திட்பமான வழிமுறை
திருமண விலக்கு திருப்தியான செயல்முறை.
திருப்பம் நிகழ திடமான வழிமுறை
தித்திக்கும் வாழ்வின் மறுமலர்ச்சித் திறவுகோல்.
        

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
6-9-2006

 ( ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.)

                              

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  
 

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. சக்தி சக்திதாசன்
  மார்ச் 11, 2012 @ 17:30:13

  அன்பினிய சகோதரி வேதா,
  அருமையான கவிதை. உங்களின் கவியார்வத்திற்கு இன்னும் மென்மேலும் பரிசில்கள் பெற்றுச் சிறப்புற பெரும்பேறு பெறுவீர்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 08, 2012 @ 12:39:08

   மிக மிக மகிழ்வடைந்தேன் சகோதரா தங்கள் கருத்திடலிற்கு.
   என் மனமார்ந்த நன்றிகள் உரியதாகுக.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. Sharmila Dharmaseelan
  மே 26, 2014 @ 16:33:57

  அருமை அருமை

  மறுமொழி

 3. கோவை கவி
  ஜூன் 05, 2014 @ 13:05:54

  இனிய கருத்திற்கு மனமார்ந்த நன்றி…Sharmila….

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: