4. பெண்விடுதலை

 

 

பெண்விடுதலை

பெண்ணுரிமை பெண்விடுதலை
பெண்ணெழுச்சி என்று
பொன்மொழி பேசுகிறோம்
வீண் அல்ல அவை.

ஓன்று உறுதியானது!
ஆண்களுக்கெதிராக இது
ஆண்களை வெல்லும்
ஓன்றுபட்ட குரலல்ல!

தொன்றுதொட்டு உலகில்
பெண்களை அடிமைகளாக
நின்றழிய வைக்காதீர்
என்ற குரலே இது!

ஆணோடு பெண்ணும்
பெண்ணோடு ஆணும்
தூணோடு தூணாக நின்று
இணங்கி இயங்குதல் வாழ்வு!

ஒருவருக்கொருவர் உதவி
பெருமையிலும் சிறுமையிலும்
உரிமை கொண்டு சமமாக
இருவரும் வாழ்தலே விடுதலை.

24-3-2009.

(வார்ப்பு இணையத்தளத்தில் வெளியானது.
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

http://www.vaarppu.com/view/1760/

 

                                 

நவீன பார்த்த சாரதியுடன் நாம். 5.

 

 

நவீன பார்த்த சாரதியுடன் நாம். 5.
 

(பயண அனுபவங்களுடன் சரித்திரத் தகவல்களும் அமைந்த இது. படங்களின் மேலே கிளிக்குங்கள் பெரிதாகக் காண்பீர்கள்.

)

 
 

பிரான்சின் வெற்றி வளைவின் மேல் ஏற மின்சாரத் தூக்கிகள் (லிப்ட்) ஓரளவு உயரம் வரை உள்ளது. அதற்கும் மேல் 235 படிகளை நாமாக ஏறவேண்டும். 1918ல் பிரான்ஸ் யெர்மனி இராணுவக் கைச்சாத்திடலின் நினைவாக ஒவ்வொரு கார்த்திகை 11லும் கொண்டாட்டம் நடத்தப்பட்டது என்ற தகவலை வாசித்தேன். இது ஒரு வேளை முன்னர் நடந்தது ஆகவும், இப்போது எப்படி என்பதும் தெரிந்தவர்கள் தான் கூற வேண்டும். இங்கு இதன் சரித்திரம் கூறும் ஒரு நூதன சாலையும் உள்ளது.
1061ல் அமெரிக்க ஐனாதிபதி ஜோன். எஃப். கென்னடியும் முதல் பெண்மணி ஐக்குவிலின் கென்னடியும் ஐனாதிபதி சாள்ஸ் டி கோலா காலத்தில் இவ் வளைவுக்கு வந்து தமது மரியாதையை இறந்த போர்வீரர்களுக்குச் செலுத்தினார்கள்.

 

பின்னர் 1963ல் கென்னடி கொலை செய்யப்பட்ட போது இந்த இடத்து அணையா விளக்கை ஐக்குவிலின் நினைவு கூர்ந்து தனது கணவனின் பூதவுடல் அடக்கம் செய்த இடத்திலும் ஒரு அணையா விளக்கை ஏற்றச் செய்தார். சாள்ஸ் டி கோலாவும் கென்னடியின் இறுதிச் சடங்கிற்குச் சென்று அதற்குச் சாட்சியாக இருந்தார்.
 

பிரான்ஸ் சுதந்திர தினக் கொண்டாட்ட அணிவகுப்பு இங்கிருந்து கொன்கோட் சதுக்கம் வரை செல்கிறதாம்.

 ( பிரான்ஸ் கொங்கோட் சதுக்கம்.)

 

வ்வெற்றி வளைவு எழுவதற்குக் காரணமான போர் வெறி வீரன் வெற்றி வீரன் நெப்போலியன் பற்றிய பல நுணுக்க விபரங்களை விலக்கி, பல பழையகால இடங்கள் பெயர்களுடன் நாம் இங்கு சிறிது பார்ப்போம்.

    (நெப்போலியன்)

(ழைய இடங்களின் புதுப் பெயர்களை என்னால் அறிய முடியவில்லை. சாள்ஸ் டி கோலா, நெப்போலியன் பற்றி வாசித்த பின்பு பல பழைய புகழ் பெற்றவர்கள் பற்றி அறியும் ஆவல் எனக்குள் பெருகியுள்ளது உண்மை.)
 

க்கரவர்த்தி நெப்போலியன்1 அல்லது நெப்போலியன் பொனபாட் 1769ஆவணி 15ல் மத்தித்தரைக்கடலில் கோசிக்கா தீவில் அயாசியோ நகரில் பிறந்தான்.
 

த்து வயதில் மிலிட்டரிப் பாடசாலயில் பிறெயினே எனுமிடத்தில் சேர்ந்து ஐந்தரை வருடம் சரித்திரம், பூமிசாத்திரம், அட்சர கேத்திர கணிதம் போன்றவை படித்து 1796ல் யோசபீனா பியானேசைத் திருமணம் செய்தான்.

   (யோசபீனா)

சில நாட்களுக்கு முன்னர் தான் இத்தாலியின் அதியுயர் ஆமி கட்டளையாளரானதால் நீஸ் நகரையும், தன் இளம் மனையியையும் விட்டு இத்தாலி சென்றான்.

 

சென்ற சிறிது நாட்களில் மொன்ரெனோற்றவில் ஒஸ்ரியன்களுடன் போரிட்டு தன் முதல் வெற்றியைப் பெற்றான். இது அப்பினைன்சை இவனுக்குத்  திறந்தது. மூன்று நாட்கள் கழித்து மிலிசிமோவை வென்றான். மூன்றாவது வெற்றி ஆர்கோலாவில் 1796ல் நடந்தது. 4வது வெற்றியை றிவோலியிலும் பெற்றான். 5வது ஆமியை ரக்கிலியமென்ரோவில் கூட்டி அளவற்ற வெற்றி பெற்றான்.

 

வுஸ்திரியன் அரசு அமைதி உடன்படிக்கை கம்போ – ஃபோமியோ கைச்சாத்திட்டதால் நெதலாந்து, லெம்பாடி இன்னும் பல சிறிய நாடுகளையும் பிரான்சுக்குக் கீழ்ப்படிய வைத்தது. இங்கு இவனது போர்க் குழு என்றும் இல்லாதவாறு மிகச் சிறப்பாகப் போராடினார்கள் என்று கூறப்பட்டது.
1797ல் பாரீசுக்குத் திரும்பினான். 1798 யூலையில் அலெக்சான்றியாவைக் கைப்பற்றினான். கெய்ரோவை நோக்கி அணிவகுத்தான். எகிப்திற்கு பிரான்ஸ் தலைமை வகித்தது.

கஸ்டில் நெப்போலியன் கப்பற் படை அபுவக்கிர் குடாவில் அழிக்கப்பட்டு, ஐரோப்பியத் தொடர்பு முறிக்கப் பட்டது. ஒரு மாதம் செல்ல சுல்ரான் நெப்போலியனுக்கு எதிராகப் படையெடுத்தான். கெய்ரோவில் குளப்பம் ஏற்பட – கலவரமானது. கெய்ரோவைப் பிடிக்கும் முயற்சி தோற்றது.

————–மிகுதியை அங்கம் 6ல் பார்ப்போம்.————–23-10-2006.

chainborder

12. உன் காதல் கவிதையாக….

 

 

உன் காதல் கவிதையாக….

உனது கவிதைகளில் மானே!
உலகியல் பிரச்சனைகள் தானே!
உல்லாசக் காதலையும் ஏனோ
உணர்ந்து எழுதிடுவாய் தேனே!

என் உயிரோடு கலந்த
மென் காதல் மலரெடுத்துக்
கவிதைத் தோரணங்கள் கட்டு!
கவிதை மாலைகள் கட்டு!

நினைவில் வாடாத காதல்
நிதமும் இளமைக் காதல்
நிலவாக ஒளிரும் காதல்
குலவக் கவிதை பாடு!

உன் காகிதமாக நானும்
உன் எழுதுகோலாக நானும்
உன்கரங்களில் ஆடினாலென்ன!
உன் கவிதையாகினால் என்ன!

-கவிதாயினி வேதா இலங்காதிலகம்

தமிழ் விசை இணையத்தளத்தில் வந்தது.

http://www.tamilvishai.com/poem/?p=824

                                     

நவீன பார்த்த சாரதியுடன் நாம். 4

 

 

நவீன பார்த்த சாரதியுடன் நாம்.  4

பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களுடனுமானது இது. (படங்களின் மேலே கிளிக்குங்கள் பெரிதாகக் காண்பீர்கள்.

)

( தில் பல பிரெஞ்சுச் சொற்கள் வருகின்றன. டேனிஸ் அல்லது ஆங்கிலத்தில்  அவை எழுதப்பட்டுள்ளது, திருத்தியெடுப்பீர்களாக!)

 

சாள்ஸ் டி கோல் 1940ல் பிரான்ஸ் முதலமைச்சர் பவுல் றெய்னாயுட் னால் மாகாண பிரிகேடியராக நியமிக்கப்பட்டார். ஹிட்லர் படையை வென்றவர். சுதந்திர பிரான்சின் துருப்புகளின் தலைவராக 2வது உலக மகாயுத்தத்தில் இருந்தவர். 1944 – 1946ல் பிரான்சின் மாகாண அரசுத் தலைவரானார். பிரான்ஸ் 5வது குடியரசின் முதல் ஐனாதிபதியாக 1958 – 1969 வரை இருந்தார். முதலாவது உலக யுத்தத்தின் பின் போலாந்திலும். தொண்டர் அடிப்படையில் இராணுவச் சேவையாற்றிப் பரிசும், மேஐர் பதவியும் பெற்று, சுய விருப்பினால் பிரான்சிற்குத் திரும்பியவர். 1959 – 1969 வரை ஐனாதிபதியாகப் பதவி பெற்றார். 1962ல் அதிகாரமுள்ள, மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஐனாதிபதியானார்.
 

ல அரசியற் குளப்பமுடைய பிரான்சில் அன்றிலிருந்து ஸ்திரமான ஒரு ஆட்சி அமைத்த ஒரு கர்த்தாவானார் சாள்ஸ் டி  கோல்.
   

 

22-11-1890ல் லீல எனுமிடத்தில் பிறந்தார். இவரது அரசியற் சித்தாந்தம் கவுலிசம் என கூறப்படும்.
மனைவி இவோனா வென்றொக்ஸ், மகன் பிலிப்ப 1921லும், மகள் எலிசபெத் 1924லும், மகள் ஆன் 1928லும் வாரிசானார்கள். மகள் ஆன் 20 வயதில் நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார்.
 

சாள்ஸ் டி கோலின் இராச்சிய அமைப்பு தொடர்ந்து அடுத்து வருவோராலும் எடுத்துச் செல்லப்பட்டது. தேசிய ரீதியில் இவரால் அமைக்கப்பட்ட சுதந்திரப் பிரான்சின் கொள்கை முக்கியத்துவம் வெளிநாட்டுக் கொள்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 

போட்டிக்கார யெர்மனியும் ஐரோப்பிய இணைவாக்கத்தின் அடித்தள கர்த்தாவாகவே சாள்ஸ் டி கோலைக் பார்க்கின்றனர்.
 

1970ல் தனது நினைவுகளை எழுதிக் கொண்டிருந்த நடுக் காலத்தில் தொலைக் காட்சியில் மாலைச் செய்தி கேட்டு அமர்ந்திருந்த வேளையில் சடுதியாக மரணமடைந்தார்.

ஆர்க் டி றியும்ப்.

ந்தப்பிரான்ஸ் வெற்றி வளைவு சாள்ஸ் டி கோல் தெருவின் மத்தியில் உள்ளது. இது பிரான்ஸ் இராணுவ வெற்றிக்காகக் கட்டப்பட்டது. 1806ல் நெப்போலியன்1 னால் அதாவது நெப்போலியன் போனப்பாட்டா சக்கரவர்த்தியினால் உத்தரவிடப் பட்டு உருவான அழகிய கம்பீர வளைவு. ரோமானிய கட்டிடக் கலையைச் சேர்ந்தது. 1806ல் யேன் பிரான்சிஸ் திரேசா சாள்கிறின் என்பவரின் வரை கலையில் உருவாகி இவர் இறக்க மற்றும் பலரால் 1836ல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

50மீட்டர்(164அடி)உயரம், 45மீட்டர்(148அடி) அகலமும், 72 அடி (22மீட்டர்) ஆழமும் கொண்ட வளைவு. பிரான்சின் 12 வீதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் சுவரில் 558 இராணுவத் தலைவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
       

1920ல் முதலாவது உலகப் போரில் மறைந்த பெயரிடப்படா வீரர்களின் பூதவுடல்கள் இவ் வளைவின் கீழ் புதைக்கப்பட்ட போது அணையா விளக்கு ஒன்றும் ஏற்றப்பட்டது. இதன் உயரத்தில் நின்று பார்த்தால் பிரமாண்டமான பாரிஸ் நகரத்தின் காட்சி தெரிகிறது. 1982ல் வட கொரியாவில் இப்படி ஒரு வளைவு கட்டப்படும் வரை, இந்தப் பிரான்ஸ் வளைவே உலகில் பெரிதானதாக இருந்தது. இப்போது இந்த வளைவு உலகில் 2ம் இடத்தைப் பிடிக்கிறது.

———மிகுதியை அடுத்த அங்கம் 5ல் பார்ப்போம்.———-

line3

99. வர்ணம் ஆயிரம்.

வர்ணம் ஆயிரம். 

(அழகு எனும் கருத்தில்.)

கர்ணன் தந்த கொடையாய்
வர்ணம் ஆயிரம் உலகில்.
சொர்ணம் பூலோக வாழ்வு.
தருணம் இதுவே களிப்பாய்!

வர்ணம் ஏழு வரிசையில்
வானவில் தோற்றம் அழகு.
காமனின் வில்லினைப் போலதைக்
காண்பதிலே ஒரு மயக்கம்.

தென்னோலைக் கீற்று அசைய
சின்னக் குருவிகள் கதை பேச
சொர்ண நிலாவும் தென்றலும்
வர்ணம் ஆயிரம் வரையும்.

குண்டுக் கன்னம் குழிய
வண்டுக் கண்கள் விரிக்கும்
வரமாம் குழந்தைச் சிரிப்பில்
வர்ணம் ஆயிரம் ஆயிரம்.
                    

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
14-4-2008.

 

வர்ணம் ஆயிரம்.  

(புகழ் எனும் கருத்தில். )

வர்ணம் அடைய வாழ்வில்
கரணம் போடும் மனிதன்
மரணம் வரை ஓயான்
தருணம் தேடி அலைவான்.

கனாக் கண்ட நினைவு
கணித்து எழுப்பும் குறிக்கோள்,
தினவெடுக்கும் கரங்களால்
புகழெனும் வர்ணம் தொடும்.

சுடராய் நிமிர்ந்து உயர
இடறும் தாழ்வு எண்ணம்
படராதுன்னைப் பார்! – பின்
தொடரும் வர்ணம் ஆயிரம்.

வந்தனை செய்து தமிழால்
வர்ணம் (துதி) பாடு இறைவனை!
தருணமிதுவே தாய் மொழியில்
வர்ணம் ஆயிரம் காண்பாய்

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
14-4-2008.

 
In pathivukal January 2014…http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1908:-2014-&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23
                            

 

 

98. படிகள்.

 

படிகள்.  

சுடரும் புகழின் படிகள்
இடறும் சூறாவளி நொடிகள்,
படரும் பாசிகள், கொடிகளால்,
தொடரும் வாழ்கைப் படிகள்.

பிறப்பு இறப்பெனும் படிகளில்
முதற்படியாம் வளர்படியாளருக்கு
அறிவு தரும் அனுபவப்படி பெரும்
ஆரோக்கியப்படி, நம்பிக்கைப்படி.

ஏறுபடி நோக்கும் அடிகள்
ஊறுபட வரும் மிடிகள்.
மாறுபடா நம்பிக்கைப் பிடிகள்
கூறுபடாது தரும் வெற்றிப் படிகள்.

இறங்கு படியாம் மாடிப்படியின்
கைப்பிடி ஒரு ஆதாரப்படி.
நிலைப்படியின் வாசற்படியால் உட்புக
தலைகுனியும் நிலை தலைக்கனம் இறக்குமாம்.

எடுத்தடி வைக்கும் ஒவ்வோரடியும்
கற்படியோ ஏணிப் படியோ
தப்படியின்றிப் பல படிகள்
எட்டிட வேண்டும் உயர்படிகள்.

இலக்கியப் படிகள் ஆர்வம் தரும்.
ஆய்வுப் படிகள் மகத்துவம் தரும்.
இசைப்படிகள் இனிமை தரும்.
கவிதைப்படியெனக்கு வெளிச்சம் தரும்.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-11-2008.

(ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலியிலும் என்னால் வாசிக்கப்பட்டது.)

 
In pathivukal…..:- http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1948:-2014-&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23                            

97. காலக்கெடு.

 

காலக்கெடு.  

வெளிப்படும் திறமைப்பாடு
நெறியோடு எடுத்தாட
காலக்கெடு, திட்டமிடலின்
வரைகோட்டுக் கட்டுப்பாடு.
வார்த்தையாடு, விளையாடு, முறையீடென
நடைபோடவே உண்டு காலக்கெடு.

காலக்கிரமத்தில் கடமைகள் புரிந்தால்
காலக்கெடுவும் ஒரு மேம்பாடு.
உருப்படும் உளப்பாடுடையோனுக்குக்
காலக்கெடு, கைகொடுக்கும பற்றுக்கோடு.
காலக்கெடுவை மதிக்கும் உளப்பாடு
ஒருமைப்பாட்டின்  வெளிப்பாடு.

காலச்சக்கரச் சுழல்வில் பருவங்களிடுகிறது
காலக்கெடு, காலப்பயிர்விளைவிற்கு.
காலக்கெடுவில் கிரகங்கள் நடமாடும்.
காலக்கெடுவுண்டு கல்யாணம், குழந்தை பெற.
காலக்கேடு யார் மதிக்கிறார் இவைகளை!
காலக்கெடுவால் விடுதலையன்றோ வேண்டுகிறார்!

காலக்கெடுவிற்குள் காரியமாற்றுதல்
காலையில் ஒரு அக்கப்பாடு.
காலக்கெடு உருப்படாத ஒரு
சாபக்கேடு என்பான் சோம்பேறி.
பொதுவாகக் கூறினால் காலக்கெடுவும்
ஒரு இலட்சுமணன் கோடு தான்.

 

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்
26-3-2008.

(ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலியிலும் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                              

9. தமிழனின் அடையாளம்.

 

தமிழனின் அடையாளம்.

( நடையா  இது நடையா   ராகத்தில்….)

தமிழே! இனிய தமிழே!
நீங்கள் இனிக்க இனிக்கத் தமிழ் பேசுங்களே.
தமிழே உங்கள் வேர் தான்
அது தமிழனின் அறிமுக அடையாளம் தான்.   (தமிழே)

கற்கண்டு போலே இனிக்கும்
கடலான இன்பத் தமிழ் தான்.
கம்பன் அகத்தியன் வள்ளவனும்
அவ்வையும் பேசிய தமிழிது.               (தமிழே)

தமிழனென்றிருந்தால் தமிழ் வேண்டும்.
தரணியில் அதையும் விதைக்க வேண்டும்.
தனக் கொரு புகழையும் தேடவேண்டும்.
தெரிகிறதா இது புரிகிறதா!….               (தமிழே)

எழுதுகோலோடு தமிழை
எடுத்தாள இடத்தினைக் கொடுங்கள்.
எந்நாளும் வீட்டினில் பேசி
எங்கள் தமிழினை உயர்த்துங்கள்.            (தமிழே)

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
23-11-2008.

( இலண்டன் தமிழ் வானொலி பூஞ்சோலை நிகழ்வில் என்னால் பாடப்பட்டது.

 

                           

21. விடியலுக்கான நாட்கள்.

  

 விடியலுக்கான நாட்கள்.  

பஞ்சு மெத்தைப் படுக்கை.
பாதம் நோகாமல் பாதணி,
பலவகை உணவு பசிக்கு
புலம் பெயர் வாழ்விங்கு.
நிலம் போகுது அங்கென
கலங்கும் நெஞ்சங்கள் இங்கு.

வெடிக்கின்ற குண்டு மழையால்
வடிகின்றதங்கு இரத்த ஆறு.
இடியும் ஊர், உடைமைகள்
மடியும் பல்லுயிர் தாய்நிலத்தில்.
அடிவானத்திலும் தெரியவில்லை
எம் விடியலுக்கான நாட்கள்.

தேடித்தேடி உயிரழிப்பு.
கொடிய அரசோடு சேர்ந்து
கூடி உதவிடும் நாடுகள்.
முடியாதா போராட்டம் என்று
துடிக்கிறதெம் மனம் துவளுகிறது
விடியலுக்கான நாட்கள் எப்போது!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
30-1-2009.

17-2-2009  ல் ரிஆர்ரி தமிழ் ஒலி வானொலியில் வாசித்தேன்.                      வார்ப்பு இயைணத்தளத்திற்கு அனுப்பியது.  

 

                     

 

18. வெண் தலையணைகள்.

 

(படம் :- என் இனிய தோழி சுஜாதா.(அவரின் செயதிப் படம்)

 

வெண் தலையணைகள்.  

 

ஆகா! அற்புதம்! அழகு!
ஆச்சரியக் கண்காட்சி யிது!
அம்சமாய் விரிந்த நீலவானில்
ஆயிரமாயிரம்  வெண் தலையணைகள்!
அடுக்கியது யாரோ! எவரோ!
அழகழகாய் அளவெடுத்துச் செய்தாரோ!

அத்தனை தலையணைகளுக்கும் பஞ்சினை
அலுக்காது நிறைத்தவரெவரோ யாரோ!
நித்திரையற்ற இவர் பணியால்
நினைக்க மறந்தாரோ விளக்கணைக்க!
நிலையாய் ஒளிருது மூலையில்
நிகரற்ற நித்தியமாம் சூரியஒளி!

தகதகக்கும் தங்கவொளியில் . முகில்
தலையணையோரங்கள் மின்னியது சருகையாய்.
தனித்தனியாய் துல்லியமாய் தலையணைகள்
கண்ணில் படுகிறது துலாம்பரமாய்,
வண்ண இயற்கைப் பரிசு இது.
எண்ணிக் கொள்ளலாம் விரும்பினால்.

தன் பட்டுப் பாதங்களாலந்தத்
தலையணைகளில் துள்ளிக் குதிக்க
துறுதுறுப்புக் குழந்தையும் எண்ணும்.
இந்தக் குளிர் டென்மார்க்கில்
இணைந்த கோடையில் கண்ட
இன்பக் காட்சியென் விழித்திரையில்.

 

பா ஆக்கம் – வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.
21-8-2009.

About Vaanam another one:-
https://kovaikkavi.wordpress.com/2010/08/31/42-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/
https://kovaikkavi.wordpress.com/2012/03/24/19-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%95/

( இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் ஒலியில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.)

In Muthukamalam –  http://www.muthukamalam.com/muthukamalam_kavithai304.htm

                        

Previous Older Entries Next Newer Entries