103. புன்னகை.

புன்னகை.

அற்புத ஆப்பிள் இதழோரம் சற்று
சொற்பமாய் இழுத்த நிலாக்கீற்று.
முற்றத்து வெண் முல்லைச் சிலிர்ப்பு
கற்பக விதை அப் புன்னகைப்பூ.
மூடிய இதழ்களின் இணை விரிப்பு
சூடிய புன்னகை மகிழ் விரிப்பு.
கோடிடும் மனித நேயத் தரிப்பு
வாடிடும் மனதிற்கு இன்பத் துளிர்ப்பு.

உலகத்து உயிர்கள் சிந்தாத வகை
உணர்வுள்ள மனிதனின் புன்னகை.
பொன்னகை தராத அழகினை
பின்னிடும் மனிதப் புன்னகை.
இருட்டுலகின் ஒளிக் கீற்று வகை.
அருட்டும் பயம் விலக்கிய நிலை.
முரட்டுக் கைப்பிடி இளக்கிய நிலை.
திரட்டும் நம்பிக்கை ஒளிப் புன்னகை.

கண் நகை ஓவியம் தீட்டுவதும்
புன்னகை காவியம் காட்டுவதும்
நன் நகை மாணிக்க வகையாம்
புன்னகை மனிதப் பொக்கிசமாம்.
உன்னத விழிகளின் புன்னகை
உள்ளத்தில் உள்ளதைக் காட்டிவிடும்.
பொன்னிதழ்ப் புன்னகை வீச்சிலே
உண்மையும் நன்கு வேசமிடும்.

மழலைப் புன்னகை பசும் தோரணம்
மனித உறவுத் தேடல் காரணம்
மலரும் புன்னகை ஒரு பூரணம்
பலரும் விரும்பும் நல் ஆரணம்.
பொன்னகை சாதிக்காத செயலினை ஒரு
புன்னகை சாதிக்கும் வலுவுடைத்து.
என்னகை நன்னகை உலகிலென்றால்
அந்நகை புன்னகை எனக் கொள்ளலாம்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
25-04-2008.

 

(ரி.ஆர்.ரி தமிழ் ஒலி,  இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது)

In Muthukamalam.com –  http://www.muthukamalam.com/muthukamalam_kavithai258.htm

                                    

Advertisements

3 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Arrow Sankar
  ஜன 09, 2015 @ 08:40:46

  மிக்க மகிழ்ச்சி உங்களது வருகைக்கும் கருத்துக்கும்.உங்களது கவிதையை படித்தேன் நன்றாக உள்ளது.எனது 16 பேறுகளை தரும் மகாமந்திரம் போன்றே உள்ளது

  மறுமொழி

 2. கோவை கவி
  பிப் 08, 2015 @ 22:11:27

  மிக்க மகிழ்ச்சி உங்களது வருகைக்கும் கருத்துக்கும்.
  மிக்க நன்றி.

  மறுமொழி

 3. கோவை கவி
  அக் 16, 2017 @ 07:54:04

  Jasmin Kennedy நன்றி அம்மா
  உங்கள் வரிகள் மிக அழகு
  16-10-2017
  vetha: You visited there Mikka nanry…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: