நவீன பார்த்த சாரதியுடன் நாம். 6.

நவீன பார்த்த சாரதியுடன் நாம். 6.

(பயண அனுபவங்களுடன் சரித்திரத் தகவல்களுடனுமாக இது..படங்களின் மேல் கிளிக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்..)

 

 

 
கெய்ரோவைப் பிடிக்கும் முயற்சி தோற்ற போது, நெப்போலியன் எங்காவது போக வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. சிரியாவில் அதிகளவு துருப்புகளை எதிர்கொள்ளத் துணிந்தான்.  
 
பாலைவனத்தூடாக ஆக்ராவுக்குச் சென்றான். மறுபடியும் எதிர்ப்பு, போர், இறுதியில் பாரிசுக்கு வந்தான்.
பிரான்சின் முதல் நிறைவேற்று அதிகாரியாக ஆகினான். வங்கி, பொது ஊழியர், அரச, ஆமி முதலாக பொது வேலைகளுக்கு ஆட்களை நியமித்து பிரான்சின் சிறந்த ஆளுனராக இருந்தான்.
தேவாலயங்களைத் திறந்தான். தனது வாசஸ்தலமாக ருய்லறீஸ் மாளிகையை ஆக்கினான்.
யெனிவா , சுவிஸ், அல்ப்ஸசையும் கடந்து தன் போர் வீரர்களை வைத்தான். அல்ப்ஸ்சைத் தாண்டி மிலானுக்கும் சென்றான். பிரெஞ்சுப் புரட்சியை  அடக்கக் கடும் சட்டங்களையும் இயற்றினான்.
பிரான்ஸ்  ஒஸ்ரியாவுடன் சண்டை, தொடர்ந்தபடியே இருந்தது. லம்பாடி மறுபடியும் பிரான்சுக்கு வந்தது.

1801ல் லுனவில்ல எனும் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
போர், அரசு, நாடு கைப்பற்றல் என்று இவன் வாழ்வு தொடர்ந்தது. 1902ல் சிசல்பைன் குடியரசுக்கு அரசனானான்.
ங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் ஏற்படுத்தப் பட்ட ஒப்பந்தம் சரி வரவில்லை. போர் தொடங்கியது. பிரான்ஸ் வியாபாரங்கள் பாதிக்கப்பட்டது.

தே நேரம் சென்ற்.கிளவுட்க்கு பாப்பரசரின் முன்னிலையில் அரசனானான். அதே கோடையில் இத்தாலிக்கும் அரசனானான். இவனது ஒன்றுவிட்ட மகன்  வைஸ்ராய் ஆகினான். இவைகள் ஐரோப்பாவின் மற்றைய தேசிய இனங்களுக்கு ஆபத்து மணியாக, முக்கியமாக அவுஸ்திரியா உணர்ந்தது. இங்கிலாந்து ரஷ்யா, அவுஸ்திரியா, சுவீடன் இணைந்து போர் கிளம்பியது.
1806ல் பிரெஞ்சு ஆமி நாப்பெல்ஸ் ஐக் கைப்பற்றியது. நெப்போலியன் தனது தம்பி யோசேப்புக்கு முடி சூடினான்.  நெதலாந்துக்குத் தனது அடுத்த தம்பி லுயிசை அரசனாக்கினான்.

புறூசியா நாடு பகைமை காட்டியது. அதன் சக்தியை நாசம் பண்ணினான். 5 நாட்களின் பின்னர் பெர்லினுக்குள் நுழைந்தான். பிரிட்டிஷ் வியாபாரக் கப்பல்களுக்கு ஐரோப்பியத் துறை முகங்களை மூடும்படி வேண்டினான். இதன் கடுமையால் ஏமாற்றத்தைச் சந்தித்தான்.
பெர்லினைப் பிடித்தான். பின் வடக்கு நோக்கி புறூசியாவிற்கு உதவுவதால் ரஷ்யாவை எதிர்த்தான். ஃபிறியெட்லாண்டில் பெரிய படையை வென்றான். இதன் மூலம் ரில்சிற் உடன்படிக்கை கைச்சாத்தானது.  தனது தம்பி யெறோம் சவேரியனை வெஸ்ற்பாலியாவிற்கு அதிபதியாக்கினான்.
உடனும் போர்த்துக்கல் – பெரிய தீபகற்பப் போர் தொடங்கியது. ஸ்பெயின், ஆங்கில உதவியுடன் கலகம் மூட்டியது. இதை வென்று மட்றிட்டை எடுத்தான். ஆயினும் அவனது தேவை எல்லா இடங்களிலும் வேண்டியிருந்தது. பிரச்சனைகள் பெருகியது.

ந்த இடைக் காலத்தில் சோண்புறூன் உடன்படிக்கை எழுதப்பட்டது.
யோசபீனாவுக்குக் குழந்தைகள் இல்லாததால், அரசியல் தொல்லைகளையும் தவிர்க்க அவுஸ்திரியாவில் உயர் நிலையிலிருந்த மரியா லுயிசாவை மறுமணம் புரிந்தான்.
1812ல் ரஷ்யாவுடன் போர் தொடுத்தான். தீயினால் எரிந்து பாழான மஸ்கோவை அடைந்தான். பசி, பட்டினி, பனி, நோய் பல வீரர்களை இழந்தான். அழிவின் குவியலில் 5 கிழமைகள் நின்றான். பின்வாங்கத் தொடங்கினான். இந்தப் போர் மறைமுகமாக இவன் இராச்சியச் செல்வாக்கை அழித்தது. இலட்சக் கணக்கான வீரர்களில் 20ஆயிரம் வீரர்களுடன் பிரான்ஸ் திரும்பினான்.  

——மிகுதியை அங்கம் 7ல் பார்ப்போம்.—————–

வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.

11497627-vintage-dividers-and-borders-set-for-ornate-and-decoration

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: