7. மந்திரக் குரலோன் சந்திரபாபு.

 

      

மந்திரக் குரலோன் சந்திரபாபு.

தற்பெருமை மிக்க அழகன்
தன் நடிப்பே சவால் என்றவன்.
மேற்கத்திய நடையுடை பாவனையில்
மோகமுடைய இளம் பருவம்.
சொந்தக் குரலின் பாட்டு
தந்திடும் ரசனையின் ஆட்டம்.
சுந்தர முகம் பார்த்தால்
முந்திடும் ஆனந்தச் சிரிப்பு.

சந்திரகுலம் தூத்துக்குடியில்
சுதந்திரப் போராட்ட வீரர்கள்
ரோட்றிக்ஸ் ரொசலினுக்கு
பிறந்தார் பனிமயதாசன்.
செல்லப் பெயர் பாபு. பாபுவே
பெருமிதமாய்ச் சூடியது சந்திரபாபு.
பள்ளிக் கல்வி இலங்கையிலே.
காமராசர் அரவணைப்பிலும் சிலகாலம்.

இன்னிசைப் பாட்டு, ஓவியம்
நடனம், நாடகம், சிற்பம்
நடிப்பாம் பல் கலையிலீடுபாடு.
மது, தற்பெருமையிவன் பலவீனம்.
சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்
சினிமாவிற்கு அறிமுகமாக்கினாராம்.
தன அமராவதி முதற்படம் (1947)
பிள்ளைச் செல்வமிறுதிப் படம்.(1974)

பதினைந்தாண்டுகள் நகைச்சுவையரசன்.
‘தட்டுங்கள் திறக்கப்படும்’ இயக்குனர்.
கதை, இயக்கம், நடனம்,
திரைக்கதை நான்குமிணைத்த முதலியக்குனர்.
எழுத்தாளர் யெயகாந்தன் ரசிகர்.
முழுநட்பை அவருடன் பேணினார்.
சினிமாவில் ஒளிர்ந்த இவன்
சொந்த வாழ்வு சோகமயமானது

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
6-11-2010.

இவரது முக்கிய சில பாடல்கள்….
1. குங்குமப்பூவே  கொஞ்சும் புறாவே..
2. உனக்காக எல்லாம் உனக்காக..
3. நானொரு முட்டாளுங்க..
4. பிறக்கும் போதும் அழுகின்றான்…
5. சிரிப்பு வருது…சிரிப்பு வருது…
6. ஒன்னுமே புரியலே உலகத்திலே..
7. பொறந்தாலும் ஆம்பிளையாய்..
8. புத்தியுள்ள மனிதரெல்லாம்…
9. என்னைத் தெரியலையா இன்னும்…
10. பம்பரக் கண்ணாலே..

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

In Anthimaalai web site:-     http://anthimaalai.blogspot.com/2012/01/5.html

 

                                 

 

 

 

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. சக்தி சக்திதாசன்
  நவ் 20, 2013 @ 13:43:47

  அன்பினிய சகோதரி, அருமையான நடிப்பு மேதை , சொந்தக்குரலில் தங்கப் பாடல்கள் பல தந்த சந்திரபாபு அவர்களின் பெருமை கூறும் அருமையான கவிதை. வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: