19. தமிழ் தோட்டம் வாழ்க!

 

 

தமிழ் தோட்டம் வாழ்க!

தோட்டம்! கற்பனை விரியல்!
ஓட்டமின்றி, விரல் நுனித்
தட்டலில், வழிகாட்டலில் விரிந்தது,
நோட்டம் துள்ளும் மனதாய்.
கொட்டிய செந்தமிழ்ச் சுவையால்
நட்டமென்பது யாருக்குமில்லை!
கொட்டமடிக்கும் கவிமலர்த்
தோட்டம் காணுமென் மனது.

தோட்டத்தில் காலாற நடந்து
வட்டமிடுதல் தமிழ் பயிற்சி.
எட்டும் இலக்கணச் சூழல்
தொட்டணைத்து வருடும் மனதை.
அந்தமில்லாத் தமிழ் அழகாய்
சிந்தி விளையாடும் தோட்டம்.
சங்கத் தமிழ் நதிகளின்
சங்கமம் தமிழ் தோட்டம்.

ட்டுத் தமிழோடு நாளும்
ஒட்டியுறவாடிச் சிறகடித்து
எட்டுத்திசையும் பறந்து சிகரம்
தொட்டுவிடலாம் திறனிருந்தால்.
கடமை தமிழை ஊன்றுதல்!
காலச் சுவடுகளில் கருத்தாய்க்
கால்பதித்துச் சாகசம் புரிந்து
காரிய சித்தி பெறலாம்.

ணனி வெளிச் சோலையின்
மின் தமிழ்  தோட்டம்
அரணிக்கட்டும்! பாலமிடட்டும்!
பூரணித்துப் பொலிந்து உயரட்டும்!
தமிழ் சிறகு விரித்துப் பலர்
தரணியில் புகழ் பெறட்டும்!
தகுந்த தளமாய்  தங்கிடட்டும்
தமிழ் தோட்டம் வாழ்க!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-11-2009.

(மிழ் தோட்டம்இணையத்தளத்தில் வெளியானது.)

 

                 

 

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: