7. அமரர் கீழ்கரவையூர் பொன்னையன்

 

 

 

அமரர் கீழ்கரவையூர் பொன்னையன்.

 

எத்தனை அறிவிப்பாளர்கள் ஊடக
முத்தங்களில் தம் திறனை
வித்;திடுவதை அறிகிறோம், கேட்கிறோம்.
தத்துவங்கள் விதைத்த உன்
உத்தமப் பாணி யாருக்கும்
சொத்தாகவில்லையே அமரர் வியூகனே!

தாராளம் உனக்கொரு சொல்.
சரளமாய் வானலைத் தமிழில்
ஏராளம் கருத்துக்கள் பாய்ந்து
ஊராளும் மணிக்கணக்கிற்கும் மேலாக.
நேராய் வாழ்த்துக்களும் பெற்றாயே!
யாரால் முடியும் இவ்வகையில்!

தின்றுவிடுகின்ற  நோயும் மரணமும்
வென்று விட்டது உன்னை.
என்றும் மறக்க முடியாத
அன்றலர்ந்த உன் தமிழுக்காய்!
இன்றும் நெஞ்சம் தவிக்கிறது,
நின்றலைகிறது உன் பிரசன்னத்திற்காய்!

உன் ஆத்துமம் பிரிந்த நாள்
இன்று 23-9-(2002) இதயம் கனக்கிறது.
சாளரச் சக்கரவர்த்தியே! உன்
சாதுரிய இலக்கியக் காற்றில்லா
சாளரங்கள் திறந்து மூடுகின்றன.
சாந்தியுடன் நீ துயில்கொள்வாயாக!

 

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
22-9-2009.

 

வேறு

 

அருட்சுடர் வீசு!

(22-9-2002ல் ரி.ஆர்.ரி தமிழ் அலை இலண்டன் தமிழ் வானொலியில் வியூகனுக்கு நோய் எனும் தகவலிற்காக எழுதி வாசிக்கப் பட்டது.)

 

வியூகன் எனும் சகலகலாவல்லவன்
வியூகம் அமைத்து விதைத்தான் இலக்கியம்.
சாளரச் சக்கரவர்த்தியின்று நோயில்
சாய்ந்துள்ளான் மருத்துவ மனையில்.
சக்கரவாகமான நேயர்கள் மனம்
துக்ககரமாகித் துடித்துத் துவள்கிறோம்.

விதந்தோத முடியாத விழுமிய தமிழுடன்
வித்தகச் செருக்குடன் வார்த்தைகள் நர்த்தனமிடும்
தமிழ்க் கவிச்சமர் அவனுடன் தொடுத்தோம்.
அமிழ்தினும் இனிய அம் மகோன்னத
அனுபவத்திற்குக் கரவையூர் பொன்னையனை
மீண்டும் எம்மிடம் அனுப்பு இறைவா!

கீர் கீர் எனத் தமிழினைக் கிழித்து விளக்கும்
சீராளனைத் தாராளமாக எழுப்பித் தா!
அருச்சுனனுக்குத் தேரோட்டினாயே!
அருமையாகக் கீதை உபதேசித்தாயே!
அருமை வியூகம் அமைத்து அருட்சுடர் வீசு!
எங்கள் வியூகனுக்கும் கைகொடு கண்ணா!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-9-2002

 

 

                      

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: