நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 8.

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 8.

 (பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களுடனும் அமைந்த …இது..படங்களின் மேல் கிளிக்கினால் பெஜீரிதாகப் பார்க்கலாம்.
.)

 லக அதிசய ஈபில் கோபுரத்தைக் கண்டதும், மேலே ஏறுவதில்லை என்று முடிவு எடுத்தோம். நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள், நிச்சயமாக ஒரு நாள் போதாது போல இருந்தது. நேரமோ 5.00 மணி பின் மாலையானது. சுற்றிப் பார்த்து, புகைப் படங்கள் எடுத்து, நீண்ட அழகிய புல்வெளியில் காலாற நடந்து, ரசித்து….என்று நேரம் வேகமாக ஓடியது.

      

 ந்தக் கோபுரம் 1889ல் உலகக் கண்காட்சிக்கு விடப்பட்டதாம். இரும்பின் ஆதாரத்துடன் மிகப் பெரிய பின்னற் தட்டி வேலைப்பாடுடன் உள்ளது. 700 திட்டங்களின்(டிசைன்களின்) போட்டியில் ஏகமனதாக இந்தத் திட்டம் தெரிவு செய்யப்பட்டதாம்.

 ங்கிலாந்து 7வது எட்வேட் இளவரசர் உத்தியோக பூர்வமாக 1889ல் இதைத் திறந்து வைத்தாராம். பிரெஞ்சுக் கட்டட அமைப்பு என்ஜினியர் அலெக்சான்டர் குஸ்டாவ் ஈபில் மற்றும் மவுறிஸ், கொச்சிலின், இமைல், நூகுயரும் – கட்டிடக் கலைஞராக (ஆக்கிடெக்ட் ஆக) ஸ்ரெபின், சவுவெஸ்ரார் ஆகியோரும் இதை உருவாக்கியுள்ளனர்.

 லராலும் மெச்சப்பட்ட இதன் உச்சியின் அன்ரீனாவை 1918ல் பிரெஞ்சு வானொலியும் 1957ல் பிரெஞ்சுத்  தொலைக் காட்சியும் பாவிக்கத் தொடங்கினர்.

 300 மீட்டர் உயரமும், 700 தொன் எடையும் கொண்ட கோபுரம் மிகச் சிறந்த அட்சர கேத்திர கணித முறைப்படி, காற்று, வேகம், கனம் என்பவற்றைத் தாங்கும் விதத்தில் அமைந்துள்ளது. இதன் நுனியின் அசைவு 4.75 இஞ்சுகள் அதாவது12 சென்ரி மீட்டருக்கு மேற்பட ஆடுவதில்லையாம்.
பாரீசின் அடையாளமாக  இது மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

 மூன்று மேடைகளாக அமைக்கப்பட்ட முதலாவது மேடை 57.63 மீட்டர் அளவு, அதாவது 189 அடியாகும். இக் கோபுர அசைவு, இதன் உச்சி முதலியவற்றைப் படிக்கும் அவதான நிலையமாகவும், உணவகம், பரந்த பக்கக் காட்சியினைத் தரும் ஸ்பேஸ் சினி பீல்ட்ம் அங்கு உள்ளது. தபால் நிலையம, விசேட ஈபில் கோபுர முத்திரையும் உள்ளது.

 தன் இரண்டாவது தட்டு 115.73 மீட்டர், அதாவது 379அடி 8 அங்குலமாகும். பாரீசின் பரந்த காட்சி, கடைகள், யூலியர்ஸ் வேர்ன உணவகமும் உள்ளது.

 மூன்றாவது தட்டு 276.13மீட்டர், அதாவது 905 அடி 11 இஞ்சுகளாகும். பாரீசின் சுற்று வட்ட இரவு-பகல் வியக்கும் காட்சி, கோபுர சரித்திரம் அறியும் வாய்ப்புடன் இன்னும் பல உண்டு.
அங்கிருந்து இரவில் கோபுர இரும்பு ஆரஞ்சு வர்ணத்தில் மிக அற்புதமாக இருக்கும் எனவும் வாசித்தோம்.

     

 இக்கோபுரம் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள்:

– இக் கோபுரத்தை 300 இரும்பு, உருக்குத் தொழிலாளர்கள் 2 வருடமாக உருவாக்கினார்களாம் (1997- 1889)
– கடையாணி தவிர்ந்த 15 ஆயிரம் இரும்புத் துண்டுகளும் 2.5 மில்லியன் கடையாணிகளும் பாவிக்கப்பட்டதாம்.
– 40 தொன் நிறக் கலவை (பெயின்ட்) பாவிக்கப்பட்டுள்ளதாம்.
– 1671 படிகள் நுனிவரை ஏறிப் போக உள்ளதாம்.
– ரெலிவிசன் அன்ரீனாவுடன் சேர்த்தால் இதன் உயரம்320.755 மீட்டர், அதாவது(1052அடி 4 இஞ்சி)யாகுமாம்.
– அடிப்பாகத்தில நிலஅளவு 2.54 ஏக்கர் ஆகும்.
– தை 26-1887 தொடங்கி பங்குனி 31- 1889 வரை கட்டப்பட்டது.
– 7.34 மில்லியன் கிலோ இரும்பு (8092.2தொன்) பாவிக்கப்பட்டுள்ளது.
– எலிவேட்டர் அமைப்பு மட்டும்946 கிலோ(1042.8 தொன்) நிறையாகும்.
– இதைக் கட்ட 7.8 மில்லியன் பிராங்க் செலவானதாம்.

மிகுதியை அடுத்த அங்கம் 9ல் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-11-2006.
 

pink-swirl-divider-1

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: