நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 9

 

 நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 9

 (பயண அனுபவங்களும், சரித்திரத் தகவல்களுடனுமானது. படங்களின் மேல் கிளிக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.)

 

 பில் கோபுர ஒரு பக்க முடிவில் அரும் பெரும் காட்சியகமும்(மியூசியமும்) மறுபுற முடிவில் போர் வீரர், அதாவது மிலிட்டரி (எக்கோலா மிலிட்டரி) பாடசாலையும் உள்ளது.
 

கோபுரக் காட்சி அற்புதமானால், கோபுரத்து இரு பக்கமும் இந்த இரு கட்டிடங்களும் இன்னொரு அழகு போங்கள்!….இவைகள் அவசரத்தின் திட்டத்தில், ஒரு நாளில் ஓடி ஓடிப் பார்ப்பதல்ல, மிக ஆறுதலாக ரசித்துப் பார்க்க வேண்டிய இடங்கள் என்பது என் கருத்து. நாம் அவசரமாகப் பார்த்தோம்.
 

ந்தப் போர் வீரர் பாடசாலை 1700ன் நடுப் பகுதியில் கட்டப்பட்டதாம். 1784ல் நெப்போலியன் பொனப் பட்டாவும் இப் பாடசாலையில் தான் படித்து வெளியேறியுள்ளார்.

 
    

(ஈபில் கோபுரத்தினூடாக மிலிட்டரிப் பாடசாலை தெரியும் காட்சி.)

 வரது இளவயதுத் திறமைகள் இங்கு தான் உருவாகியதாம். அவரது மேலதிகாரிகள் ‘ அவரொரு சிறந்த கப்பலோட்டியாகத் திகழ்வார்’ என்று கூறினார்களாம்.
 

 பாடசாலை பெரிய பூங்காவுடன் அமைந்துள்ளது. இதன் மறுபுற முடிவு தான் ஈபில் கோபுரம். கோபுரத்து மறு பக்கம் அரும் பெரும் காட்சியகம். மனித உடலியற் (அனற்ரொமி) சாத்திரக் காட்சியகம் என்று ஒரு உல்லாசப் பயணி கூறினார். நாம் உள்ளே போகாததால்  அதன் விபரம் தெரியவில்லை.
நேரம் 7.30 ஆகியது.

     ( Hitler standing  )

னி நமது தங்குமிடம் செல்லலாம் என்று சென்று வாகனத்தில் அமர்ந்து, அறை முகவரியைக் கொடுத்தோம் பாதையைக் காட்ட மாட்டேன் என்று அடம் பிடித்தார் நவீனபார்த்த சாரதியார். சட்டலைட் சிக்னல் அவருக்குக் கிடைக்கவில்லைப் போலும். வாகனம் நிறுத்திய இடத்திலிருந்து மாறி வந்து கோபுரத்துப் பச்சைப் புல்வெளி முடியும் இடத்து ஓரத்தில் நிறுத்தி முயற்சித்தோம். இப்படி இவர் வேலை நிறுத்தம் செய்தால் எப்படி எமது இடத்திற்குச் செல்வது!
 

ற்பனை கன்னா பின்னாவென ஓடியது. வாகனக் கண்ணாடியை கீழே இறக்கி நவீன பார்த்தசாரதியை  வெளியே உயர்த்திப் பிடித்தபடி கூறுகிறேன் ‘எவனாவது ஓடி வந்து இதைப் பிடுங்கிக் கொண்டும் போகலாம்’…என்று. சட்டலைட் தொடர்புள்ள ஈபில் கோபுரத்தினடியில் சிக்னல் கிடைக்காது எமது வாகனம் நிற்கிறதே! இது மிக வேடிக்கை! என்று சிரிப்பு வேறு..வாகனம் நிறுத்த இடமில்லாத நேரங்களிலும், பார்த்தசாரதி வேலை நிறுத்தம் செய்த நேரங்களிலும், ஏன் சொந்த வாகனத்தைக் கொண்டு வந்தோம் என்று எண்ணியதுமுண்டு.

 ரியாக 8.30 மணிக்கு சிக்னல் வந்தது. அதாவது ஒரு மணி நேரம் பார்த்தசாரதி வேலை நிறுத்தம் செய்தார்.

 கோபுரத்தருகில் நாம் நின்றது மறக்க முடியாதது. உலக அற்புதத்தைச் சும்மா பார்த்திட்டு ஓடி வந்திடலாமா!

 

ல்ல வேளை பொலிஸ் அது..அதுவென வேறு பிரச்சனைகள் வரவில்லை. அது நிம்மதி தான். லாச்சப்பலை நோக்கிப் புறப்பட்டோம்.

 

ப்படியே சிறிது தூரம் வர ஒரு பெரிய சதுக்கம் வந்தது. நிறைந்த உல்லாசப் பயண மக்கள் கூட்டம். ஒரு ஓரமாக வாகனத்தை நிறுத்தினோம்.

       

 

கீழே இறங்கி புகைப்படக் கருவியுடன் நடந்தோம். ஒரு சீனக் குடும்பம் தாங்கள் எல்லாம் பார்த்து முடிய, பாரிஸ் நகரப் படத்தை எம்மிடம் நீட்டி ‘இது வேண்டுமா?’ என்று கேட்டனர். ‘ஆமாம்’ என்று நன்றி கூறி வாங்கி, மள மளவென விரித்து நாங்கள் இப்போ எங்கே நிற்கிறோம் என்று பார்த்தோம். இது தான் கொன்கோட் சதுக்கம் என்று தெரிந்தது.

பாரிசில் மிகவும் பெரிய, சரித்திர சம்பந்தமான, விசேட சதுக்கம் இது.
இதன் ஆதிப் பெயர் லுயிஸ் 15இடம், அல்லது லுயிஸ் சதுக்கம் (பிளேஸ் லுயிஸ்எக்ஸ்.வி) என்று இருந்தது. சீன் நதியோடு அமைந்தது. அவென்யு டி சாம்ப்ஸ் இலுயிசீஸ் ஆரம்பத்தில் ருலறி காடின்சைப் பிரிக்கிறது. லுயிஸ் 16க்குப் பிறகு ஞாபகர்த்த நினைவாக அவரது உருவச் சிலையை இங்கு நாட்டுவதாக இருந்ததாம்.

———மிகுதியை அங்கம் 10ல் பார்ப்போம்.——

க்கம்   வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-3

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: