128. எண்ணங்கள்.

 

                          

எண்ணங்கள்.     

அட்சயக் கிண்ண இதயத்தில்
உச்சமாய் எழும் எண்ணம்
எச்சம்! தூய்மை இன்றேல்.
அச்சமற்று மொழி முதுகேறினால்
நிச்சயம் வார்த்தைப் பல்லக்கில்,
பாச்சரமாகலாம் பாவலர் அருகில்.
நீச்சலடிக்கலாம் பழமை புதுமையில்.
பேச்சில் சேர்க்கலாம் எண்ணங்களை.

மேதாவித்தன எண்ணம், பிரசங்கங்களை
ஏதாவது புத்தக அடுக்கிலிடுங்கள்.
யதார்த்த நல்ல எண்ணங்களை
சாதாரணமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
பொறாமை எண்ணத்தால் ஒதுக்கம்
கூறடையும் மனதின் வீக்கம்.
தூறாத புரிந்துணர்வினால் தாக்கம்
ஆறாகும் அன்பு எண்ணத்தைச் சிதைக்கும்.

நன்செய் பயிராம் எண்ணங்கள்
புன்செய் மரங்களாய் ஓருவகை.
போன்சாய் எண்ணங்கள் மறுவகை.
புயலாய், பூவாய் விரிவகை.
புதையலில் மகிழும் எண்ணம்.
பிரிந்திட்டால் துன்ப எண்ணம்.
புரட்டில், பொய்யில் திகைக்கும்
புனலில் நீராடிக் குளிர்ந்திடும்.

23-9-2006.

(இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)
18-7-2014 in pathivukal :- http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&amp%3Bview=article&amp%3Bid=2186%3A-2014-&amp%3Bcatid=4%3A2011-02-25-17-28-36&amp%3BItemid=23

 

வேறு

எண்ணம்.

ஒழுங்காகக் கத்தரித்து நீர் பாய்ச்சும்
அழுங்காமையின்றிப் பாதுகாக்கும் நந்தவனம் மனம்.
எழுந்தோற்றத்தில் காடாக்குவதல்ல எழில் இதயம்.
எழுப்பு எழுவான் சூரியனாய் பயணம்!

அடகு வைத்த புத்தியால் நாளும்
அடம் பிடித்து அழுவேன் என்றால்
இடமுண்டு மனவியல் நிபுணரைப் பார்க்கலாம்.
தடவும் பேச்சுகளால் துடைத்து உருவாக்கலாம்.
(அழுங்காமை – சோம்பேறித்தனம்)

23-4-2016

 

                                

 

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  ஏப் 29, 2012 @ 13:07:25

  பொறாமை எண்ணத்தால் ஒதுக்கம்
  கூறடையும் மனதின் வீக்கம்.
  தூறாத புரிந்துணர்வினால் தாக்கம்
  ஆறாகும் அன்பு எண்ணத்தைச் சிதைக்கும்.//

  வரிகள் அற்புதம்.

  வேதா. இலங்காதிலகம்:- செப்ரெம்பர் – 2008
  புதிய உறவு இந்திய சஞ்சிகையில்
  30ம் பக்கத்தில் இந்தக் கவிதை பிரசுரமானது.
  இதழுக்கு நன்றி

  மறுமொழி

 2. கோவை கவி
  ஆக 03, 2014 @ 08:05:00

  You, Karthikeyan Singaravelu and 7 others like this..

  Vetha ELangathilakam Nanry…siva…(for republish)

  Ratha Mariyaratnam:-
  மிகவும் உயரிய கருத்து ……வாழ்க சகோதரா ..வளர்க உம் பணி
  Rathan Vishva:-
  Ok ok
  சிவரமணி கவி கவிச்சுடர்:-
  அருமை அருமை

  Karthikeyan Singaravelu :-
  சுட்டபழம் சூடாகவும் சுவையாகவும் இருந்தது நன்பரே மிக அருமை
  Vetha ELangathilakam:-
  mikka nanry ellorukkum + likers. also.

  சி வா:-
  பாராட்டும் பெருமையும் “பா” வானதிக்கே உரித்தாகும்..
  உளமார்ந்த நன்றி ….
  அக்கா மரியம்…
  நண்பர் கார்த்திக்…
  தோழி சிவா..
  குட்டி ரத்து….

  மேலும் லைக் தந்த அனைவருக்கும்..

  மறுமொழி

 3. கோவை கவி
  ஆக 17, 2017 @ 11:33:49

  Subi Narendran :- எண்ணங்கள் எத்தனை வகை. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
  2017 -· 14 August at 23:11

  Vetha Langathilakam :- மிக் மகிழ்வு சகோதரி.
  மிக்க நன்றி.
  ஊக்குவிப்பு என்ற நடை
  தாக்கமிகு செல்வாக்கு விடை
  ஆக்கமிகு ஊன்றுகோல், கொடை
  2017 – 15 August at 09:58 ·

  Gomathy Arasu:- எண்ணங்கள் தொகுப்பு அருமை.
  16-8-2017
  Vetha Langathilakam:- மிக மகிழ்வு சகோதரி.
  மிக்க நன்றி.
  17-8-2017

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: