நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 10.

 

 

   

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 10.

 பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களுடனுமானது. படங்களின் மேல் கிளிக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.

கொழும்பு பம்பலப்பிட்டியில் மசாலா தோசை சாப்பிட்ட நினைவில் லாச்சப்பலில் அதைப் பதிவு செய்துவிட்டுக் காத்திருந்தோம். மசாலா தோசை வந்தது. ஆவலாகச் சாப்பிட்டோம்.  என்னே! கன்றாவி! பகல் சமைத்த கறிக் கலவை புளித்து மணந்தது. மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது, கறியை ஒதுக்கிவிட்டு, மணம் வராத பகுதியோடு சாப்பிட்டோம். நேரம் பிந்தியதால் வேறு உணவுக்கும் கட்டளையிட முடியவில்லை. பால் தேனீர் பதிவு செய்து அருந்திவிட்டு, வெளியே வந்தாலே போது மென்று எழுந்து வந்து விட்டோம். விமர்சனமும் கூறவில்லை. அன்றைய நாள் முடிந்தது.

ரவு நல்ல தூக்கம். காலையில் விழிப்பு வந்த போது விழித்து, இனி நாம் செல்ல வேண்டிய இடத்து முகவரியைக் கொடுத்துப் பார்த்தசாரதியைத் தயார்ப்படுத்தினோம்.                                      

காலைக் கடன்கள் முடிய, தங்கிய இடத்தின் காலையுணவைத் தவிர்த்து 9 மணியளவில்  கடைவீதி சென்று காலையுணவு அருந்தினோம். டென்மார்க்கிற்குக் கொண்டு போக, சமையலறைச் சரக்குச் சாமான்கள் வாங்கினோம். மகனுக்குத் தமிழ் பாடல் இறுவெட்டுகள் வாங்கினோம். அனைத்தும் எடுத்துச் சென்று, வாகனப் பிற்பகுதியில் பத்திரப்படுத்தினோம்.
 

சுமார் 10.50க்கு தங்குமிடத்துக் கணக்குகள் முடித்து லூட்ஸ் மாதா கோவில் நோக்கிப் புறப்பட்டோம்.
855 கிலோ மீட்டர் நாங்கள் ஓட வேண்டிய தூரம் என்று பார்த்தசாரதி காட்டியிருந்தார்  

டென்மார்க்கிலிருந்து வர 1227 கி.மீட்டர் இருந்தது. இது 855 என்ற போது சிறிது ஆறுதலாக இருந்தது.
வாகனம் செலுத்திய படி இடைவேளைகள் எடுக்கும் போது, அதில் பொதுத் தொலைபேசிப் பெட்டி வரும் போது பிள்ளைகளுடன்  பேசுவதுமாகச் சென்றோம். 12.15 மணியான போது போடுயக்ஸ் ஓலியன்ஸ்,  எனுமிடத்தில் வாகனம் ஓடும் போது நெடும் சாலை 4 வாகனங்கள் ஒரே நேரம் போகும் பாதைகளாக இருந்ததைக் கவனித்தோம். இது குறிப்பிடக் கூடியது தான். வேறு இடத்தில் இப்படி நாங்கள் காணவில்லை. துலூஸ்(ருலா)  நோக்கிப் போகும் போது தெரு மிக வளைவாக, பாம்பு வளைவாகச் சென்றது. ஒரே வேகத்தில் தான் வாகனங்கள் செல்ல வேண்டும். பின்னால் வருபவர்கள் தம்மை முன்னால் செல்ல விடும்படி ஒளியைப் பாய்ச்சித் தொல்லை தந்தபடியே இருந்தனர். விசேடமாக டென்மார்க் வாகனம் என்றதும் ஒரு நளினமாக இருந்திருக்கும் என்று எண்ணினோம்.
    

 

லைப் பகுதியானதால் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதி செல்லப் பாலங்கள். தலைக்கு மேலே பாலங்கள் வர அது இத்தாலி வெனிஸ் நகர நீர்ப் பாலங்களை நினைவு படுத்தியது. துலூஸ் – பாலங்களின் நகரம் என்றும் கூறலாம் போலத் தெரிந்தது. அலாசக்  எனும் கிராமத்தடியில் செல்லும் போது, அச்சு அசலாகக் கண்டி, நுவரெலியா மாதிரியே சுற்றிவர முன்புறக் காட்சிகள் இருந்தது.  

டிக்கடி தெரு வரிப்பணம் கட்டியபடியே இருந்தோம்.
 

சில இடங்களில் வெயில் அசல் வவுனியா போலவும் இருந்தது.  இங்கும் யாழ் நினைவு தானா என்கிறீர்களா? அது தானே உடலில் இரத்தமாக ஓடுகிறதே! மலைகளில் வீடுகள், தீப்பெட்டிகள் போலத் தென்பட்டன.
  

 

றொக்கமடுயர், பீச்மொன்ரற்    என்ற இடங்களில் வீடுகளின் அமைப்புகள் வித்தியாசமாகப், பழைய காலக் கிராமம் போலத் தெரிந்தது. கல்லு மலைகளாக, அதைக் குடைந்து அரை வட்டமாக வாகனம் செல்லப் பாதை அமைத்துத், தலைக்கு மேலும் வீடுகளாகத் தெரிந்தது. அதுவும் பாலங்களின் நகரம் தான்.
 

மொன்ரவுபான்  என்ற இடம் மலைகளின் அழகு நகரமாக, விவசாயப் பண்ணைகளாகக் காணப்பட்டது. இரவு 8.48 லும் இருட்டாகவில்லை, தெருவோரம் ஒரே காடாக, வானம் காட்டை முத்தமிட்டது. இரவு 9.30ற்கு லூட்சைச் சென்றடைந்தோம்.

     

———மிகுதியை அடுத்த அங்கம் 12ல் பார்ப்போம்……….

வேதா. இலங்காதிலகம்
ஓகஸ்,  டென்மார்க்.

16161859-ab

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: