7. பெண் மொழிகள்.

 

பெண் மொழிகள்.

 

மறைவுறுப்புகள் பெயர் எழுதி, அதில்
    நிறையும் உணர்வு, செயற்பாடு எழுதி,
மறைவின்றிப் பச்சை பச்சையாகப் பலர்,
    இறைக்கிறார் கவிதைகள், இது விடுதலையாம்.
இலையாடைப் பிறப்பு, நிர்வாண நிலையருக,
    தலையெடுப்பு நாகரீகம் பல உயர்படிகளாக.
அலைபுரண்டது மதிப்பு மரியாதையென
    வலை விரித்தது நாகரீக உறவாடல்கள்.
          
மனிதம் நாகரீக உச்சம் கண்டதென்று
    மடங்கி விழுந்ததோ இன்று தொப்பென்று!
ஆதியில் பேசினோமே பச்சை பச்சையாக,
    நீதியில்லையாம் அதை மூடிமறைப்பது!
ஆடையெதற்கு இன்று எமக்கு அங்கத்திலே
    ஆதியில் திரிந்தோமே நிர்வாணமாயென்று; ,
வாதிக்கமாட்டாரோ அடுத்த வாரிசுகள்?
    போதிக்கும் வழியோ இப் ” பெண் மொழிகள். ”
         
புல்லை, புவியை, புலர்காலை அழகென்று
    சொல்லை உழுத கவியுலகில் ” பெண் மொழி ”
முல்லை மணம் வீசுமோ! கல்லையாகுமோ!
    எல்லையின்றி எங்கு போய் முடியுமோ?
பெண்களின் கவிதையானால் இன்று சிறு
    பின்வாங்கல் அதில் மேய்ந்திட, ஐயகோ!
பெண் மொழிகளாற் தலை சுற்றுகிறது.
    என்ன இது! கவியுலகம் எங்கே போகிறது!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்
2-6-2006.

(வார்ப்பு இணையத் தளத்தில் வெளியானது.)

 

 

                                    
 

 

Advertisements

6 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. Kowsy
    நவ் 27, 2010 @ 18:22:31

    சுதந்திரம் மிஞ்சி தந்திரமாய்ப் பேசுகிறார் பெண்கள் சுதந்திரம் நிறைந்த நாடுகளில். என் செய்வோம் ஐயகோ! எழுத்தாணி துணைக் கொண்டு வடித்தெடுக்கும் கவிதைகளால் இடித்துரைக்கத் தவற வேண்டாம். தேவை இக்கவிதை தொடருங்கள் நன்றியும் வாழ்த்துக்களும்

    மறுமொழி

  2. Dhavappudhalvan
    டிசம்பர் 12, 2010 @ 11:39:01

    சூடுத்தான் இட்டீரோ? சுருக்கென்று படட்டுமென்று.

    மறுமொழி

  3. கோமதி அரசு
    ஏப் 29, 2012 @ 12:58:55

    நல்ல கவிதையை படைப்போம் என்று உங்களை போல் நல்ல உள்ளங்கள் இருக்கும் போது மற்றவைகளை புறந்தள்ளுவோம்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: