134. மதங்களும் மனித நல்லிணக்கங்களும்.

 

 

மதங்களும் மனித நல்லிணக்கங்களும்.

 

ஒன்றே மதம், ஒருவனே தேவன்
என்று வாழ்வது இனிய இணக்கம்.
மனிதனோடு மனிதனுக்கு இல்லை இணக்கம்
மனிதன் ஆக்கிய மதங்களாலும் பிணக்கம்.
      தொன்றுதொட்டுப் பல மதங்களின் வணக்கம்
      நின்று உலவி கெடுத்தது நல்லிணக்கம்.
      மன அமைதி தரும் மத சிந்தனையின்று
      மன நிம்மதி குலைக்கும் போதனையாயிற்று.
தான் சார்ந்த மதம் உயர்வென்று
வீண் போராட்டம் ஒருவருக்குள் ஒருவர்.
வன்முறை, கொலை, குழுச் சண்டை
வலையெனப் படர்கிறது முழு உலகில்.
      கட்டுப்பாடு ஒழுக்கம் சமூகத்தில் நிலவ
      நட்டுக் கொண்டனர் மனதில் இறைபயத்தை.
      விடடுவிலகியது இறை பயம் மனதால்;.
      காட்டுத் தீயாகிறது காசினியில் பிணக்கு.
மத தீவிரவாதம் பலர் மானுடவேதம்.
பேதம், போதனை, வாதப் பிரதிவாதமாக
மதம் மனித நல்லிணக்கத்தின் எதிர்க் கணக்காகவே
கதம் தரும் செயல்கள் நிலவுகிறது.

 

பா ஆக்கம்   வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
21-11-2006

 

                                   

9 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. தர்மேந்திரா
    டிசம்பர் 06, 2010 @ 21:15:41

    தங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை. நன்றாக எழுதுகின்றீர்கள். கவிதையில் உயிர்ப்பு, உணர்வு, உண்மை இருக்கின்றது. வாழ்த்துக்கள்

    மறுமொழி

  2. கோமதி அரசு
    ஏப் 29, 2012 @ 12:44:55

    மனிதனோடு மனிதனுக்கு இல்லை இணக்கம்
    மனிதன் ஆக்கிய மதங்களாலும் பிணக்கம்.//

    மதநல்லிணக்கம் மக்களிடம் வேண்டும்.
    கவிதை அருமை.
    மதங்களின் பெயரால் மக்கள் சண்டையிடுவது மறைந்து அனைவரும் அன்பாய் வாழ வேண்டும்.

    மறுமொழி

  3. Vetha ELangathilakam
    ஏப் 29, 2012 @ 15:33:25

    மிக நன்றி சகோதரி.
    இறையாசி நிறைக.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: