135. கழுதை தேயுது..கட்டெறும்பாகுமோ!….

 

 

கழுதை தேயுது..கட்டெறும்பாகுமோ!….

 

நீலப்படம் போல நீலக்கவிமொழியோடு
பாலம் கடக்கும் தொழில்,
நூற்றில் எத்தனை விகிதம்
தோற்றியிருப்பீர் நீவிர்!
மூடிமறைக்காது கூவிப்
பாடி முடிக்கிறீர் யாவும்.
ஆடை உடலில் எதற்கு!
அதையும் தூர எறியும்!.

மண் பார்த்து நடந்து
கண்ணியமாய்ப் பேசுமுறவும்,
சுதந்திரக் கவிதையென பாலியல்
அந்தரங்கங்கள் அரங்கேற்றி
வக்கிரங்கள் வரைந்து பிறரை
இக்கிரி முள்ளால் கீறுவோரும்,
தந்திரமாய் விற்கிறார் பண்பாட்டை
எந்திர வேகத்தில் பிரபலமாக.

இலையாடை மனிதன் தான்
கலை ஆடை மாட்டினான்.
கழுதை தேய்ந்து ஒரு
கட்டெறும்பானது போன்று
காட்டுக் காலத்திற்கு மறுபடி
காலடி வைக்கத் தேய்கிறான்.
இவன் இப்படியாகினால்…வாழ்க!..
இவன் வாரிசு எப்படியாகுமோ!….

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-11-2010.

 

                               

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கலாம் காதிர்
  டிசம்பர் 12, 2010 @ 16:51:08

  மதம்/மார்க்கம் யாவும் உடலுக்கு ஆடை போன்றது
  “ஆடை இல்லா மனிதன் அரை மனிதன்” என்றது
  அதனாற்றான். அதுவேப் போல், மதம்/மார்க்கம் இல்லா மனித மனமும் ஆடையில்லா அரை குறை மனமே. நாணம் என்பது நம்பிக்கையின் ஒரு பகுதி. குருஜி தியாகராஜர் அவர்கள் கருத்திட்டது போல் கண்ணதாசன் கவிவரிகளில் எத்துணை நளினம், நயம், நாணம் (இலைமறை காயாக)இருந்தன

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 12, 2010 @ 18:06:38

   இலைமறை காயான வரிகள பலவற்றைக் கூறலாம கண்ணதாசன் வரிகளில். ஆனால் பச்சையாக எழுதுவது தான் நாகரீகம் என்பவர்களை என்ன செய்வது.!. என் மனக் குமுறலை இப்படி எழுதினேன். உங்கள் வரிகளுக்கு நன்றி.

   மறுமொழி

 2. Dhavappudhalvan
  மார்ச் 11, 2011 @ 06:00:39

  மீண்டும் இக்கவிதையை வாசிக்கவும் கருத்தியம்பவும் வாய்ப்பு ஏற்பட்டமைக்கு மகிழ்கின்றேன். வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 3. கோவை கவி
  ஆக 20, 2011 @ 13:45:28

  Face book Kvithai club comment.


  Kalam Kadir wrote:-
  ‎//இலையாடை மனிதன் தான்
  கலை ஆடை மாட்டினான்.
  கழுதை தேய்ந்து ஒரு
  கட்டெறும்பானது போன்று
  காட்டுக் காலத்திற்கு மறுபடி
  …காலடி வைக்கத் தேய்கிறான்.
  இவன் இப்படியாகினால்…வாழ்க!..
  இவன் வாரிசு எப்படியாகுமோ!…//.இவ்வரிகள் மிகவும் எதார்த்தமானவைகள்;நிஜமானவைகள்; உண்மையானவைகள்; உடலை மறைக்காத உளுத்தர்களின் மானத்தை மறைக்காமல் கப்பல் ஏற்றும் கவிதை வரிகள்.

  •இராஜ. தியாகராஜன் commented on your post in kavithai sangamam என்கிற kavithai club. ( on face book.)
  இராஜ. தியாகராஜன்8:08am Dec 12
  •மிக நன்று. அயல் நாட்டினரிடம் இருந்து எத்தனையோ கடன் வாங்கினோம். உடை நாகரிகம்; நுனி நாக்கில் ஆங்கிலம்; ஃபேஷன் ஷோ; டேட்டிங், இப்படி எத்தனையோ. அவர்களிடம் இருக்கும் மற்றொன்று டேபிள் மேனர்ஸ் என்ற மேடை/மேசை நாகரிகம். பொதுவான உணவு மேடை/மேசையில் இருக்கையில், அநாகரிகமாக இருமுவதோ, தும்முவதோ, பற்குத்துவதோ செய்யமாட்டார்கள் மேநாட்டார். மேலும் உணவினை பரிமாறும் போது மற்றவர்க்கு செய்துவிட்டுத்தான் தங்கள் தட்டுக்கு வருவார்கள்.

  •Dhavappudhalvan Badrinarayanan A M3:01am Dec 8
  •வணக்கம் சகோதரி. கவலைப்பட்டு காலம் வீணாக்க வேண்டாம். கருத்திலே கொள்வீர் நீர். புதிய காலாசரமென்றே பழையதை நோக்கிச் செல்கின்றோம். ஆடையில்லா மனிதனவன் ஆடைப்போர்த்தத் தொடங்கி முழுமையாகி, குறைப்பிலே துவங்கியிருக்கிறது. முழுமையாகும் ஆடையற்ற மனிதனாய் வாழ்க்கையது. புவியது அழிந்து புதிதாய் தொடங்கும் ஆதாம் ஏவலாய்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: