15. தமிழ்ப் பட்டறை.

 

  

 

தமிழ்ப் பட்டறை

 

வெள்ளையன் மண்ணில் தமிழ் வேளாண்மை
வெண்பட்டுக் குடையின் கீழில்லை ஆளுமை
வாண வேடிக்கை செங்கம்பள விரிப்பில்லை.
வானலைத்தமிழில் நாம் பங்கு பெறத்தடையில்லை.

மடைதிறந்த தமிழ்ப் பண்ணையென ஊடகங்கள்
குடைவிரித்த செழும் தமிழ்த் தடாகங்கள்.
தடையின்றித் தவழ்ந்திடக் களமாய் எமக்கு
தடமிட இவையொரு வகைப் பட்டறைகள்.

மறத்தமிழின் இயல், இசை வலம்
திறன் விரிக்க நல்லவொரு தளம்.
மறந்த தமிழ் வரிசை வார்த்தைகள்
புறமாகாது திறமை புடமாகும் பலம்.

நேர அறுவடைப் பயனைத் தரமாக்கினால்
உரமான செந்தமிழ்ச் சூழல் உருவாக்கலாம்.
தூரமின்றி வாரிசுகள் வழுவிலாத் தமிழை
சாரமாய்ப் பற்றித் தமிழ்ச் சாரலில் நனையலாம்!.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-12-2010.
T: 12.8.2014

 

                                  

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. கோமதி அரசு
    ஏப் 29, 2012 @ 12:40:38

    நேர அறுவடைப் பயனைத் தரமாக்கினால்
    உரமான செந்தமிழ்ச் சூழல் உருவாக்கலாம்.
    தூரமின்றி வாரிசுகள் வழுவிலாத் தமிழை
    சாரமாய்ப் பற்றித் தமிழ்ச் சாரலில் நனையலாம்!.

    நீங்கள் சொல்வது போல் நாம் தமிழை வளர்த்தால் நம் தலைமுறைகளும் தமிழ் பேசி தமிழ்ச்சாரலில் நனையலாம்.

    மறுமொழி

  2. Vetha ELangathilakam
    ஏப் 29, 2012 @ 15:12:48

    மிக நன்றி சகோதரி.
    இறையாசி நிறைக.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: