137. கோலங்கள்.

ங்். 

சந்தான சீவன்களின் உறவுப் பாலம்
சரித்திரம் அமைக்கும் வாழ்வுக் கோலம்.
சக்கர வாழ்வின் சஞ்சாரக் காலம்
சாயாத வினைத் தவம், ஓயாத வெற்றி மூலம்.

தாழ்விலா வாழ்வும் வீழ்விலா நீள்வுமில்லை.
வாழ்வை வசப்படுத்த வனையும் கோலங்கள்
தழும்பின்றி எழுந்திடும் பிரயத்தன கோலங்கள்.
ஊழ்வினை யென்றுமொரு வார்த்தைக் கோலங்கள்.

இதமான கோடையில் மகிழும் மனங்கள்
கதமான குளிரில் உறையும் மனங்கள்.
பதமிலாச் சுவாத்தியம், கலாச்சாரச் சூழல்கள்
சதமென வாழவோரிங்கு பலவகைக் கோலங்கள்.

வண்ணப் பொடிக்கோலமல்ல வாழ்வு.
வண்ணப்பூச்செண்டுக் கண்காட்சியல்ல வாழ்வு.
எண்ண மலர்களின் எத்தனிப்பு முகிழ்வு
பின்னிப் பிணைக்கும் விடைக்கோலம் வாழ்வு.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-12-2010.

http://www.geotamil.com/pathivukal/poems_january2011.htm#vetha

Advertisements

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  ஏப் 29, 2012 @ 12:36:15

  சந்தான சீவன்களின் உறவுப் பாலம்
  சரித்திரம் அமைக்கும் வாழ்வுக் கோலம்.
  சக்கர வாழ்வின் சஞ்சாரக் காலம்
  சாயாத வினைத் தவம், ஓயாத வெற்றி மூலம்.//

  வாழ்வின் இலக்கணம் கூறும் கவிதை அழகு.

  மறுமொழி

 2. Vetha ELangathilakam
  ஏப் 29, 2012 @ 15:11:38

  மிக நன்றி சகோதரி.
  இறையாசி நிறைக.

  மறுமொழி

 3. கோவை கவி
  டிசம்பர் 19, 2014 @ 15:15:04

  You, Subbu Subbu, Loganathan Ratnam and 2 others like this. (in 2014)

  Vetha Langathilakam:-
  மிக்க நன்றி சகோதரா…Kannadasan Subbiah…(Pune tamil sangam)
  December 16

  சிறீ சிறீஸ்கந்தராஜா:-
  இதமான கோடையில் மகிழும் மனங்கள் கதமான குளிரில் உறையும் மனங்கள்.
  பதமிலாச் சுவாத்தியம், கலாச்சாரச் சூழல்கள்
  சதமென வாழவோரிங்கு பலவகைக் கோலங்கள்.
  December 16 .

  Vetha Langathilakam:-
  மிக்க நன்றி சகோதரா Sri.S
  December 17

  Gomathy Arasu :-
  அழகான கோலம். அழகான கவிதை.
  December 17

  Vetha Langathilakam:-
  Nanry Gomathy..sis..

  மறுமொழி

 4. கோவை கவி
  டிசம்பர் 16, 2016 @ 08:51:20

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: