நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம்..(12)

 

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம்..(12)

பயண அனுபவங்களும், சரித்திரத் தகவல்களுடனும் அமைந்தது.


பெனடிற்றா 1858ல் தனது 14வது வயதில் மலைக் குகையான மசபியெல்லாவில் (massabiella) மாதா கன்னி மேரியின் தரிசனத்தைக் கண்டார். அதுவும் 18 தடவை மாதா இவருக்குத் தரிசனம் கொடுத்துள்ளார். “” நான் உன்னை இவ்வுலகில் சந்தோசப்படுத்துவேன் என்று சத்தியம் செய்யமாட்டேன், அடுத்த வாழ்வில் சந்தோசப்படுத்துவேன்”” என்ற தனது வாக்குறுதியை மாதா நிறைவேற்றிவிட்டார்.

வருக்குக் கிடைத்த ஒன்பதாவது தரிசனத்தில் குகையிலுள்ள நீரூற்றை அருந்தும்படி மாதா வேண்டியுள்ளார். ஆனால் நீரூற்று காணப்படவில்லை.

வேறொரு தரிசனத்தில் காட்டப்பட்ட இடத்தில் பெனடிற்றா தோண்டிய போது, நீரூற்று பீறிட்டுக் கொண்டு வந்ததாம். அன்றிலிருந்து சுமார் 27 ஆயிரம் கலன் நீர் ஒவ்வொரு கிழமையும் வருகிறதாம். இந்த நீர் சோடியம் குளொறைட், லைம், மக்னீசியா பை காபனேற், சிலிக்கேற்ஸ் of  அலுமினியம், ஒக்சைட்  of  இரும்பு என்று பலவகை தாதுப்பொருட்கள் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாக உள்ளதாம். முடவர்கள், அங்கவீனர்கள்,அனைவரும் அந்த நகரின் புனிதத்தை அறிந்து இங்கு வந்து குணப்பட்டுச் செல்கிறார்கள். அற்புதங்கள் நடக்கிறது என்றும் வாசித்தேன்.

இந்துக்களுக்குக் கங்கை, முஸ்லிம்களுக்கு மெக்கா போல, கத்தோலிக்கருக்கு லூட்ஸ் ஆக உள்ளது. தான் காட்சியளித்த இடத்தில் தேவாலயம் அமைக்குமாறு மாதா வேண்டினாராம். பெனடிற்றாவின் தேவ தரிசனத்தை வத்திக்கான் விசாரித்து, உறுதிப்படுத்தி, அன்றிலிருந்து லூட்ஸ் புனிதத் தலமாக ஆக்கப்பட்டதாம்.

பெனடிற்றா எனும் பெயர் பின்னர் பேர்னாடா என வழங்கப்பட்டது. 16-4-1879ல் இவர் மண்ணுலகை விட்டு மறைந்தார்.

பைறெனிஸ் மலைச்சாரலில் பவு எனும் ஆறும், கோயிலுக்கு அருகில் ஓடுகிறது.

   

குகையின் நீரூற்றைக் காணவும், மாதா தரிசனம் காட்டிய இடத்தைக் காணவும், நீண்ட நேர வரிசையில் காத்து நின்று  பார்த்தோம்.

க்கள் குகைச் சுவரை முத்தமிட்டும், நீர்த்துளியை ஏந்தியும் செல்கின்றனர். காட்சி தந்த மாதா உருவமே பிளாஸ்டிக்கில் உருவான போத்தலாகக் கடையில் வாங்கி, அதில் புனித நீரை ஏந்தி மக்கள் பயனடைகிறார்கள். உடலில் பூசுகிறார்கள், அருந்துகிறார்கள்.                                                         

கோயிலின் ஒரு பகுதியில் வித விதமான அளவுகளில் மெழுகுதிரி பற்ற வைக்கின்றனர்.

மலை மீது ஒரு இடம் மட்டும் உயரே ஏறிப் பார்த்தோம். அங்கு பூசை நடந்தது. இன்னும் எல்லா உயரமான இடங்கள் மீதும் நாங்கள் ஏறவில்லை.

கோயிலின் இரண்டாவது மாடியில் அன்னை மாதாவின் முடி தங்க நிறம் பூசப்பட்டு மிகப் பெரிதாகச் செய்து வைக்கப் பட்டுள்ளது. இது மிக வித்தியாசமாக எனக்குத் தென்பட்டது. மிக அழகாகவும் இருந்தது. ஆசையுடன், ஆவலுடன் அதை ரசித்தேன்.

         

தே போல நீரூற்று உள்ள இடப் பகுதியிலும் பல மெழுகு வர்த்திகள் பல அளவுகளில்  ஏற்றித், தட்டுத் தட்டாக மிக அழகாக இருந்தது. 3வயதுக் குழந்தை உயரத்திலும் மெழுகுவர்த்திகள் காணப்பட்டது.

கோயிலுக்கு முன்புறம் ஒரு பெரிய கோட்டை இருக்கிறது. அது பழைய அரசர்களின் கோட்டையாக இருக்கலாம். அது பற்றி அறிய முடியவில்லை.

கோயிலில் ஒரு சஞ்சிகை விற்பனைக்கு இருந்தது.  லூட்ஸ்- மகசீன் .கொம் www.lourds-magazine.com  இணைய முகவரியில் இந்த சஞ்சிகையை வாசிக்க முடியும்.                                                               

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
5-1-2007.

 

 

 
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: