138. தெங்கு தலையால் தருகிறதே!….

 

தெங்கு தலையால் தருகிறதே!….

 

உயரத்திலிருந்தாலென்ன!
ஊர் நன்கு அறிந்தாலென்ன!
தெங்கு தானுண்ட நீரைத்
தலையாலே அயராது தருகிறது.

கொடுத்து வாங்குதல் புரிந்துணர்வு.
அங்கீகாரம் மானுட தேவை.
வாங்கிட வேண்டும் வாழ்த்தொலி – பிறரை
அங்கீகரித்திடவோ கருமித்தனம்.

அரக்கிடப்பட்ட எழுதுகோல்.
சரக்கில்லை பிறரை வாழ்த்திட.
இரக்கமற்ற புகழ்ப் பிசின்.
இறக்க விடுவதில்லை வரிகளை.

மதி! மதிக்கப் படுவாய்!
மிதி! பெரும் தலைப்பாரத்தை!
நதியாயக் கலந்திடு ஊரோடு!
நிதியாவாய் சமூகத்திற்கு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க். 
2-11-2010.

 

                               

3 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  ஏப் 29, 2012 @ 12:23:09

  உயரத்திலிருந்தாலென்ன!
  ஊர் நன்கு அறிந்தாலென்ன!
  தெங்கு தானுண்ட நீரைத்
  தலையாலே அயராது தருகிறது.//

  வாழ்த்தினால் வாழ்த்து கிடைக்கிறது.
  தென்னை வெறும் தண்ணீர் கொடுத்தத்ற்கு இனிமையான இளநீர் தருகிறது. பிறரை வாழ்த்தி நாமும் வாழ்வோம்.
  அருமையான் கவிதை.

  மறுமொழி

 2. Vetha ELangathilakam
  ஏப் 29, 2012 @ 15:10:17

  மிக நன்றி சகோதரி.
  இறையாசி நிறைக.

  மறுமொழி

 3. கோவை கவி
  செப் 14, 2014 @ 11:57:20

  You, Ma La, Kannadasan Subbiah and Eeram Magi like this.

  Ma La :-
  தானுண்ட நீரை தலையாலே தருதலால் தான் பெற்ற பிள்ளையை விட தென்னம்பிள்ளையை நம்பிடலாம்னு நம் மூத்தோர் சொல்லியிருக்கின்றனர் . கண்ணதாசன் கூட ஒரு பாடலில் ‘ தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு’ ன்னு சொல்லியிருக்கார் ,,, இங்கே அடுத்தவரின் திறமையை பார்க்கவும் ஆளில்லை ; ஆனால் அவர்களின் அரைகுறை படைப்புகள் மட்டும் வந்து குவிந்து கொண்டே இருக்கும் … இப்படியும் சில ஜென்மங்கள் … மனம் பழக்கப்பட்டு விட்டது

  Vetha Langathilakam:-
  Aha!….nanry……mala…or latha…which name is correct….?

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: