17. மெல்லினமொழி ஊர்வலம்..

mismb-mini-smiley-balls-bulk-vending1

மெல்லினமொழி ஊர்வலம்..

 

கசடதபற – வல்லினம்
ஙஞணநமன – மெல்லினம்.
யரலவழள – இடையினம்.

மெல்லினமொழி ஊர்வலம்
வல்லின வகையானால், கல்லாகி,
பொல்லாகி, எல்லாமாய் ஆகிடும்.

கள்ளக் கருத்துடன் உமிழும்
எள்ளி நகையாடும் அசிங்கமொழி
பள்ளம் பறிக்க வழிகளுமுண்டு.

கலக்கிடும் புலம்பல் மொழியை
அலம்பிக் காய விட்டாலுடன்
துலக்கமாகி ஒளி விடும்.

மொழிகள் புழுக்களாகி நெழியும்
வாயில், வழிபாட்டுக் கோயிலானாலும்
மனிதக் காலடி படாது.

சிந்தும் மொழிகளை நீங்கள்
தந்திரமாக உருட்டுங்கள். அழகிய
பந்துகளாக மெல்ல உருட்டுங்கள்

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
4-12-2010.

bigballsimage2

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Dhavappudhalvan
  டிசம்பர் 16, 2010 @ 08:56:31

  ஊஞ்சலாய் கவிதை உள்ளமதில் ஆட, உற்சாகம் கொண்டேன் உவ்வகையில் திளைத்தேன்.

  மறுமொழி

 2. கலாம் காதிர்
  டிசம்பர் 17, 2010 @ 19:28:34

  மூவினம் கொண்ட முதல்மொழி தாய்த்தமிழை
  பாவினம் மூலம் படைத்திட்ட உன்றன்
  திறம்கண்டு வாழ்த்த திறனின்றி போனேன்
  நிறம்மாறா பூக்களுன்றன் பாடல்.

  மறுமொழி

 3. Vetha ELangathilakam
  ஏப் 28, 2012 @ 21:02:26

  from face book Kavithai club–

  Arul Mozhi12:48am Dec 16:-
  ஙஞணநமன –கள்ளக் கருத்துடன் உமிழும்
  எள்ளி நகையாடும் அசிங்கமொழி அற்புத கருத்து. மொழியை கையாளும் விதம் பல அதில் தந்திரமாக சிந்துமொழியை பயன்படுத்த சொன்னது அருமையோ அருமை.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: