16. மெய் தீண்டும் மைவிழியே!…

 

ெய் தீண்டும் மைவிழியே!…

 

வாய் பேசா மடந்தையே!….
பெய்யும் கண்களின் மின்சாரத்தால்….
தீய்கிறேன் நான் புரியலையோ!
ஹய்யோ!…இதுவென்ன நோயோ!….

 வேய்யோன் வரவாலுருகும்
நெய்யாய் மனமுருகுதே, ஏன்!
மேய்கின்ற உன் கரு விழியால்
சாய்க்கிறாயே என்னை எங்கோ

சேய்கண்ட தாயாய் மனம்
வேய்ங்குழல் இசைக்குது.
மெய்தீண்டும் மைவிழியே!..
மாய்கிறேன் இது காதலோ!..

பொய்யோ இது மெய்யொவென
ஆய்வு கொள்ளுது மனது.
போய் விடுவாய் நீயென்றால்
காய்கிறதே ஏனென் மனது!..
 
 நெய்யும் மோகத்திரையால்
செய்யும் வெல்வெட்டு நேசத்தை
மெய்யான பண்பாட்டுக் காதலால்
எய்திடு கல்வெட்டுப் போலே!

 

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
17-12-2010.

 

                          
 

Advertisements

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  டிசம்பர் 18, 2010 @ 12:35:21

  மெய் கொண்டு கவி வரையும்
  வேதாவின் சித்திரங்கள் யாவும் அருமை !!! பாராட்டுக்கள் .

  மறுமொழி

 2. கலாம் காதிர்
  டிசம்பர் 19, 2010 @ 20:12:17

  புது”மை”யால் பா”விழி”க்க வைத்து “மெய்”சிலிர்க்க வைத்தாயே

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 21, 2010 @ 08:04:17

   புதுமைகள் செய்ய எல்லோருக்கும் ஆசை தான் முயற்சிப்போம். உங்கள் இனிய கவித்துவ வரிகளுக்கு மிகுந்த நன்றி. விமரிசனங்களைத் தரம் பிரிக்கும் வசதி உள்ளதால் தேவையற்ற – இடத்திற்குப் பொருந்தாதவற்றை அழிக்கலாம். இது ஒரு நல்ல வழி. நாம் தேவையானவற்றை மட்டும் இங்கு எழுதுவோம். தேவையற்றவையைக் கழிப்போம்.

   மறுமொழி

 3. aruleesan
  டிசம்பர் 20, 2010 @ 00:45:29

  அருமை அருமை உங்களின் படைப்புக்கள் அருமை உறங்காத உங்கள் கைகள் ஓயாது எழுதட்டும்

  மறுமொழி

 4. கோவை கவி
  பிப் 11, 2015 @ 21:39:37

  Ram Pillai :-
  அருமை;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
  11- 2-15

  Vetha Langathilakam :-
  வரிகளை வாசிக்க இது நானா எழுதியது என வியக்கிறேன்.
  .எத்னையோ எழுதுகிறேன் ..
  மிக்க நன்றி.சகோதரா.
  11-2-15

  Pisupati Subramanyam:-
  இது தான் மாலை நோய். …>>>…P.S.

  Kanmani Kannan:-
  Nice

  Vetha Langathilakam:-
  Ha!..ha!…P.S mikka nanry…and Kanmani Kannan
  11-2-15

  மறுமொழி

 5. கோவை கவி
  பிப் 11, 2015 @ 21:41:36

  Kannadasan Subbiah:-
  அருமை

  Vetha Langathilakam:-
  Nanry Ramm Pillai and K.S
  11-2-15

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 12, 2015 @ 09:20:06

  Jeyam RamaChandran :_
  மோகத் திரையால் நெய்த காதல் மெத்தை வெல்வெட்டை விட மென்மையாகத் மேகதிரையால் செய்த கவிதையால் ் என்னைச் சாய்த்து விட்டாய் நண்பா.
  12 -2 -15

  Vetha Langathilakam:-
  சாய்ந்து சுகம் காணலாம் சகோதரா…
  உயிரை உய்விக்கும் உன்னதம் காதல்
  மிக்க நன்றி கருத்திற்கு.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: