நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம்…(15)

 

 

வீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம்…(15)

 

(பயண அனுபவங்களும், சரித்திரத் தகவல்களும் அமைந்தது.)


                                                 

18-8-06 காலை 9.00 மணிக்கு நீசின் Busby hotel ஐ விட்டு இத்தாலியின் ரோம் நகரம்  நோக்கிப் புறப்பட்டோம். இங்கிருந்து இரண்டு பாதையை இத்தாலிப்
பயணத்திற்குத் தெரிவு செய்யலாம்.

நீஸ் கடற்கரை பார்த்த ஆசையில், அழகில் எனது கணவர்   நாம் கடற்கரைத்
தெருவோரப் பாதையெடுத்துப் பயணிப்போம் என்றார்.

வீன பார்த்தசாரதியார் எத்தனை குறுக்கு வழியிருந்தாலும், எப்போதும் பெரும் தெருவை யொட்டியே தனது வழியை எமக்குக் காட்டுவார். அவரது பாதை Firenze வழியூடு செல்லும் பாதையான இத்தாலி நடு முதுகு ஊடாகச் செல்லும் பாதையாகும்.  ஆகையால் சரியான இடம் வரும் வரை அவர் உதவியை எடுத்து, அந்தப் பாதை கடற்கரை நோக்கிப் பிரியும் போது அவரை நிறுத்துவது என்று முடிவெடுத்தோம்.

நாம் இத்தாலி செல்லச் சுமார் 820 கி. மீட்டர் தூரம் ஓட்டம் காத்திருந்தது. இத்தாலியை நோக்கி ஓடத் தொடங்கவும், என் கணவர்  ”  சாய்ந்த கோபுரம் இத்தாலியில் தானே உள்ளது, அதையும் பார்க்கலாமே!” என்றார். எனது மூளையில் அது இருக்கும் சரியான பட்டினப் பெயர் வரச் சிறிது சிரமப்பட்டது. பெரிய ஐரோப்பாப் படத்தை உன்னிப்பாகப் பார்த்தேன். ஓடும் பாதையின் பட்டினங்களைப் பார்த்தபடி வர,  Genova,  Portofino,  Laspezia, Pisa என்றதும் உடனும் மூளையில் வெளிச்சமானது பைசாக் கோபுரம்.

பிறகென்ன! பைசா நகரம் நோக்கி ஓடினோம்.  ஃபையறென்ச பாதை காட்டிய போது, அதை விலக்கி லிவோர்னோ (Levorno) பாதையைப் பிடித்து ஓடினோம். எமது விருப்பப் படி கரையோரப் பயணமாகவே இருந்தது.

 

வெயில் கொழுத்திக் கொண்டு இருந்தது.             

த்தித் தரைக் கடலினுள் நீட்டியபடி, குதிக்காற் சப்பாத்துப் போல நீண்ட தீபகற்பமானது இத்தாலியாகும். கடலுக்குள் துருத்திக் கொண்டுள்ள உயர் மலைப்பகுதியே இந்தத் தீபகற்பமானதால், முழுவதும் கல்லு மலையே தான். கல்லு மலையைக் குடைந்து அரை வட்ட வடிவச் சுரங்கப் பாதைகள்,  சுரங்கப் பாதைகள் 1000, 1300மீட்டர், 1800 மீட்டர், என்று நீளமானவை.. அடிக்கடி வந்த வண்ணமே இருந்தது

  (சில சுரங்கப் பாதைகளை இங்க காண்கிறீர்கள்.)

   

கொண்டை ஊசி ( hair pin) வளைவுகள், பாம்பு வளைவுத் தெருக்களாக இருந்தது.

     

தெருவோரங்களில் அலரிப் பூக்கன்றுகள் நிறம் மாற்றி மாற்றி அழகுக்காக நட்டிருந்தனர். சுரங்கப் பாதை, வளைவாக உள்ளது என நாம் நிதானமாக வாகனம் ஓட்ட, அந்தப் பாதையில் பழக்கமானவர்கள் அடித்து அள்ளிக் கொண்டு ஓடினார்கள். நாம் விட்டுக் கொடுத்து, ஒதுங்கியே ஓடினோம்.

போட்டோபினோ (Portofino) நகரம் மிக அழகான வீடுகள், மலைக் காட்சிகளாக இருந்தது.
எனது சக ஊழியர்  ஒரு தடவை Portofino சென்றதாகக் கூறிய போது, எங்கே இந்த இடம் என்று எண்ணினேன். இப்போது புரிந்தது. எவ்வளவு அழகான இடமென்று! Portofino……..

 

டைவேளைகளில் உணவு, ஐஸ், தேனீர் என்று எடுத்த வேளையில் ஒரு நடுவயதானவர் எம்மோடு சிரித்துப் பேசி, நாம் நின்ற இடம் நெருங்கினார். எமது பேச்சில் நம்பிக்கை வந்த போது,  தன் கை முட்டியை விரித்து, இரண்டு சங்கிலியைக் காட்டி, ” நல்ல விலை”  என்று பேசினார். கறுப்புப் பண வியாபாரி போலும். ”  வேண்டாம் , நன்றி ” என்று கூறி நாம் நழுவி விட்டோம். 

 Viariggio வில், இன்னும் சில இடங்களிலும் ஈரோவாக தெரு வரிப் பணம் கட்டினோம். உணவு பஸ்ரா, பீசா, நூடில்ஸ் ஆகவே இருந்தது.                 

ருமையான  கடற்கரைக் காட்சிகளை இடைவேளையின் போது ரசித்தோம், பிள்ளைகளுடனும் பேசினோம்.  

 

—————மிகுதியை அடுத்த அங்கத்தில் பார்ப்போம்.————                                                    
வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்
29-1-2007.                                                      

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: