22. இலையுதிர்காலம் பனிக்காலமான.(.2010ல்)

 

இலையுதிர்காலம் பனிக்காலமான.(.2010ல்)

 

மப்பு வானம் பனி விசிற
அப்பிய பசிய இலைகளின்றி
இப்புவி மரங்களோ அதிசயம்!
கொப்புகளனைத்தும் நிர்வாணம்!
எப்போதும் வருடத்தின் ஊர்வலம்
தப்பாத இலையுதிர்காலம்.

வெள்ளைப்பனி பற்றிய மரங்கள்
வெள்ளைப் பூ பூத்த காட்சி.
கொள்ளை மலர்களள்ளிக் கொட்டியதாய்
வெள்ளைப் பூக்கள் தூவிய சாலை.
அள்ளி எடுத்து ஆனந்திக்கும்
பிள்ளைக் கூட்டக் கும்மாளம்!

ஊர் விட்டு ஊர் வந்து
ஊதற் காற்றடிக்கச் சிறிதாய்
ஊடுருவும் வெப்பத்தில், மழையோ
ஊற்றுவது பனியோவெனத் தடுமாறி
ஊசிக் குளிரில் உதறலெடுக்கும்
ஊர்…..எங்கள் ….டென்மார்க்.

பனிக்கால ஆரம்பம் மார்கழி15.
இலையுதிர் காலமோ பெரும்
அடைபனிக் காலமான 2010.
நான்கு பருவ காலங்களும் கூட
நிரந்தரமில்லையெனக் காட்டியதோர்
பாடமெமக்கு! பெரும் குளிர்வதை!

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
25-12-2010.

(முகநூலிலும்)

In Tamilvishai.com.

http://www.tamilvishai.com/poem/?p=1282

 

                                          

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  டிசம்பர் 25, 2010 @ 10:39:49

  இந்தப் பச்சை மரத்திற்குள் என்ன வலிந்த பச்சை பாருங்கள்.
  எல்லாவற்றையும் இழந்து பட்ட மரம்போல் ஆனாலும் இளவேனிலில் புத்துயிர்மை பெறுகிறதே!!
  இந்த மனவலிமை தமிழர்க்கும் வேண்டும் ….

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 26, 2010 @ 07:08:58

   pachchai maraththittku… reply – இதை சாம்பலில் பூத்த நெருப்பு என்றும் கூறலாம் தானே! உண்மையில் எவ்வளவு அழகு!…இவைகள். ஆண்டவனின் படைப்பே புதுமை தான். அவைகள் என்னுள் உருவாக்கும் கிளர்ச்சிகளே வரிகளாகிறது…உங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி..brother Nada siva..

   மறுமொழி

 2. வித்யாசாகர்
  டிசம்பர் 25, 2010 @ 11:38:39

  //கொப்புகளனைத்தும் நிர்வாணம்//

  //வெள்ளைப்பனி பற்றிய மரங்கள்
  வெள்ளைப் பூ பூத்த காட்சி.
  கொள்ளை மலர்களள்ளிக் கொட்டியதாய்
  வெள்ளைப் பூக்கள் தூவிய சாலை.
  அள்ளி எடுத்து ஆனந்திக்கும்
  பிள்ளைக் கூட்டக் கும்மாளம்!

  ஊர் விட்டு ஊர் வந்து
  ஊதற் காற்றடிக்கச் சிறிதாய்
  ஊடுருவும் வெப்பத்தில், மழையோ
  ஊற்றுவது பனியோவெனத் தடுமாறி
  ஊசிக் குளிரில் உதறலெடுக்கும்
  ஊர்…..எங்கள் ….டென்மார்க்//

  என் அன்பு சகோதரியின் வர்ணனையில் உள்ளே ஒரு ஆசை டென்மார்க் பார்க்க பூத்துக் கொண்டது.

  வீட்டின் வேலைகளுக்கு மத்தியில்; வீடு போல அனைத்துக் கொண்ட உங்களின் தமிழ்பணி சிறந்தோங்க என் மிக்க வாழ்த்துக்கள் சகோதரி…

  வித்யாசாகர்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 02, 2011 @ 08:45:22

   வீடு போல அணைத்துக் கொண்ட தமிழ்ப் பணி! ஆமாம் உண்மை தான். என்னோடு இரண்டறக் கலந்த பணி. முடிந்தளவு செய்ய முயற்சிக்கிறேன். அன்பானவர்களின் வாழ்த்துகள் மன பலத்தைத் தருகிறது. உங்கள் வரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களது பணிக்கும் வாழ்த்துகள்.தொடர்க!..வளர்க!

   மறுமொழி

 3. Hijas
  டிசம்பர் 25, 2010 @ 12:31:11

  இதில் எனக்கும் பிடித்த வரி இதுதான்

  கொப்புகளனைத்தும் நிர்வாணம்

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 25, 2010 @ 15:41:42

   அன்புச் சகோதரர்! ஹயாஸ் (ஹியாஸ்)! உண்மையில் அந்த வெறும் கொப்புகள் மிகவும் அழகு….கூகிளில் போய் ஸ்நோ என்று எழுதி (படங்கள் தரும் கூகிள்) ப் பாருங்கள் அத்தனை அழகையும் ரசிக்கலாம். அதே போல குளிரில் வெறுப்பும் வரும். வரிகளுக்கு நன்றி. வாழ்த்துகள்.

   மறுமொழி

 4. கோமதி அரசு
  ஏப் 29, 2012 @ 12:02:08

  வெள்ளைப்பனி பற்றிய மரங்கள்
  வெள்ளைப் பூ பூத்த காட்சி.
  கொள்ளை மலர்களள்ளிக் கொட்டியதாய்
  வெள்ளைப் பூக்கள் தூவிய சாலை.
  அள்ளி எடுத்து ஆனந்திக்கும்
  பிள்ளைக் கூட்டக் கும்மாளம்!

  அழகான கவிதை. பனிக்காலத்தையும் மகிழ்ச்சியாய் வரவேற்கும்
  பக்குவபட்ட மனது. பிள்ளைகளின் கும்மாளத்தை ரசிக்கும் பிள்ளை மனது வாழ்க!

  மறுமொழி

 5. கோவை கவி
  டிசம்பர் 25, 2017 @ 13:09:22

  மகாதேவன் செல்வி :- படமும் கவிதையும் அழகு
  25-12.2015
  Vetha Langathilakam :- Mikka nanry Bro..
  25.12.2017

  மறுமொழி

 6. கோவை கவி
  ஏப் 22, 2019 @ 08:00:07

  Ğâjâņ Şhîvâ Šķ :- அருமையான கவி யாத்தீர்கள், அனைத்து வரிகளும் அற்புதம், இணைப்பிற்கு மிக்க நன்றிகள்
  2011
  Nadaa Sivarajah :- இந்தப் பச்சை மரத்திற்குள் என்ன வலிந்த பச்சை பாருங்கள்.
  எல்லாவற்றையும் இழந்து பட்ட மரம்போல் ஆனாலும் இளவேனிலில் புத்துயிர்மை பெறுகிறதே!!
  இந்த மனவலிமை தமிழர்க்கும் வேண்டும் ….
  2011

  Vetha Langathilakam:- aamaam…..
  2011
  Vithyasagar Vidhyasagar //கொப்புகளனைத்தும் நிர்வாணம்//
  //வெள்ளைப்பனி பற்றிய மரங்கள்
  வெள்ளைப் பூ பூத்த காட்சி.
  கொள்ளை மலர்களள்ளிக் கொட்டியதாய்
  வெள்ளைப் பூக்கள் தூவிய சாலை.
  அள்ளி எடுத்து ஆனந்திக்கும்
  பிள்ளைக் கூட்டக் கும்மாளம்!
  ஊர் விட்டு ஊர் வந்து
  ஊதற் காற்றடிக்கச் சிறிதாய்
  ஊடுருவும் வெப்பத்தில், மழையோ
  ஊற்றுவது பனியோவெனத் தடுமாறி
  ஊசிக் குளிரில் உதறலெடுக்கும்
  ஊர்…..எங்கள் ….டென்மார்க்//
  என் அன்பு சகோதரியின் வர்ணனையில் உள்ளே ஒரு ஆசை டென்மார்க் பார்க்க பூத்துக் கொண்டது.
  வீட்டின் வேலைகளுக்கு மத்தியில்; வீடு போல அனைத்துக் கொண்ட உங்களின் தமிழ்பணி சிறந்தோங்க என் மிக்க வாழ்த்துக்கள் சகோதரி…
  வித்யாசாகர்
  2011

  மறுமொழி

 7. கோவை கவி
  ஏப் 22, 2019 @ 08:05:18

  Kalam Shaick Abdul Kader //என் அன்பு சகோதரியின் வர்ணனையில் உள்ளே ஒரு ஆசை டென்மார்க் பார்க்க பூத்துக் கொண்டது.//
  எனக்கும் தான் வித்யாசாகர், விசா ரெடியா
  2011
  Vetha Langathilakam :- please comments are wellcome.. in valai….
  2011
  Kalam Shaick Abdul Kader :- i did as i do daily and am waiting for VISA to see you and your Denmbark
  2011
  Sujatha Anton :- கொள்ளை மலர்களாய் அள்ளி ´´பூ´´ பூர்த்தமரங்களாய் இந்த பனப்பூக்கள்´´ கவர்ந்த வரிகள். என்னவாய் குளிர்கால வர்ணனை
  உங்கள் கற்கனையில் எழுந்துள்ளது. அருமை வேதா வாழ்த்துக்கள்
  கவிகள் தொடரட்டும்…….
  2011
  Sujatha Anton:- thanks………………Vetha
  2011
  Vetha Langathilakam:- nanry.sujatha,mahilini,kalam kathir sir,vidya,nada siva sir, neelamekam sir, su po sir gajan, fahim,vasantha…..
  2011
  மன்னை செந்தில் :- பசுமை போனால்….பாலை என்பார்கள்
  ஆனால்..அங்கோ வெண்மை!!! அருமை
  2011
  Natarajan Mariappan:- மப்பு வானம் பனி விசிறஅப்பிய பசிய இலைகளின்றிஇப்புவி மரங்களோ அதிசயம்!கொப்புகளனைத்தும் நிர்வாணம்!எப்போதும் வருடத்தின் ஊhவலம்தப்பாத இலையுதிர்காலம்
  சிறந்த சொல்லாடல் சகோதரி! ..தமிழ்த் தண்ணீர் ஓடுகிறது கவிதையில் ….
  பெரும் குளிர்வதை…சூப்பர்!
  2011
  Sakthi Sakthithasan :- அன்பின் சகோதரி வேதா,
  தாங்கள் வாழும் டென்மார்க் நாட்டின் காலநிலை மாற்றங்களை அன்னைத் தமிழின் எழில்கூட்டி உங்களைப் போல் அழகாக யாரால் வடித்து விட முடியும்?
  வர்ணனை, வார்த்தைக் கோப்பு, கருத்துக்களின் கனம் அனைத்தும் கவிதாயினி உங்களின் நிஜத்துடன் இணைந்த கவித்துவத திறமையைப் பறைசாற்றி நிற்கின்றன.
  வாழ்த்துக்கள் சகோதரி
  அன்புடன்
  சக்தி
  2011

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: