13. நவராத்திரி. – 1 -2

நவராத்திரி.  –  1

 

மூர்த்தியாகத் தேவியர்கள் மூலவராகும் இராத்திரி.
முச்சக்தி நாயகியரின் மூலமான இராத்திரி.
மும்மூன்று இராத்திரியாக முகிழ்வது நவராத்திரி.

ங்கல முதல் மூன்று மகோன்னத இராத்திரி.
மகிசாசுரமர்த்தனி துர்க்காவின் இராத்திரி.
மகாவீரம் மல்கிட மக்கள் துதிக்கும் இராத்திரி.

செல்வத்து அதிபதி செந்தாமரைச் செல்வியிடம்
செல்வம் யாசித்துச் சக்தி இசை பாடியும்
சேவிக்குமிரவுகள் நடு மூன்று இராத்திரி.

ல்வி கலைகளின் கர்த்தா கலைவாணியின்
கருணை கசியும் கடை மூன்று இராத்திரி.
காலத்திற்கும் ஆழவூன்றும் அறிவுக்கான இராத்திரி.

 ருத்தான வித்தியாரம்பம் கலைகளின் ஆராத்தி,
கடைநாள் விசயதசமியோடு களிப்புடன் பூர்த்தி.
கலைகொஞ்சும் நவரச அனுபவம் நவராத்திரி.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-10-2004.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

In Anthimaalai.web site:-     http://anthimaalai.blogspot.com/2011/10/1.html

 

                                         

 

 

                                             

2 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. sujatha
    அக் 06, 2013 @ 06:37:08

    கருத்தான வித்தியாரம்பம் கலைகளின் ஆராத்தி,
    கடைநாள் விசயதசமியோடு களிப்புடன் பூர்த்தி.
    கலைகொஞ்சும் நவரச அனுபவம் நவராத்திரி.

    தலைவணங்கி நவராத்திரியில் சக்திகளின் ஆசியை வேண்டிடுவோம்.

    மறுமொழி

  2. kowsy
    அக் 06, 2013 @ 09:23:16

    முச் சக்திகளின் அருள் வேண்டி நவராத்திரி விரதம் அனுஷ்டித்து உடல் உளப் பலம் பெறுவோம்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: