24. நாரணனும், வாரணனும் கூட…

நாரணனும், வாரணனும் கூட…

ந்து மகாசாகரமே உனக்கு உயர் தகவு
முந்திய பெருமையுடையவெம் முத்துத் தீவு.
சிந்தும் அலை தவழும் இலங்கைத் தீவு.
அந்தப் பெருமை நீ மறந்தனையோ!
கொந்தளித்து ஆக்ரோசக் கொலை வெறியோடு
சந்து பொந்திலும் நுழைந்து சர்வநாசமாக்கினாயே!

சுமத்திரா தீவின் சூலக அதிர்வசைவானது
சுமந்து ஆயிரத்தைந்நூறு கிலோ மீட்டரதை
சுருளாக விசிறும் சுனாமி அலையானது.
சுவடு பதித்துத் தன் சுயரூபம் காட்டியது.
சுற்றுப் புறக் கடலோர நகரங்களைச் சூறையாடியது.
பற்றிப் பிடித்து உயர்ப்பலி  கொண்டது.

தாரண ஆண்டு நத்தார் தின மறுநாளில்
பூரண நிலாவில் பொங்கிய சாகரத்தால்
சீரணமாகாத சம்பவத்தால் பல உடல்கள்
தோரணம், இறுதிக் கிரியையின்றிப் புதைகுழியுள்
நாரணனும் நாடகத்தை நடத்திய படியுள்ளான்.
வாரணனும் பார்த்தபடி வாளாவிருக்கிறான்.

காலி நகரத்தில் கனரக போர்த்தளம்
கனத்த பேச்சு வார்த்தை அடுக்குகள் ஆயத்தம்.
கடவுளுக்கும் பொறுக்கவில்லை, கடலே பொங்கி
காலிநகரையே கழுவித் துடைத்ததுவோ!
காற்றும் கடலும் நம் நண்பர்களானாலும்
வேற்று மனிதனாய் வேகத்தைக் காட்டியதே!

பா. ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-12-2004.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.
9-1-2005 ஓகுஸ் தியான சேரத்திலும் என்னால் வாசிக்கப்பட்ட கவிதையிது.)

https://kovaikkavi.wordpress.com/2014/12/26/60-%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88/

samme kind poem :- https://kovaikkavi.wordpress.com/2011/03/12/231/

                                         

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கலாம் காதிர்
  டிசம்பர் 27, 2010 @ 16:46:39

  கடலென்னச் செய்யும் கடவுளின் ஆணை
  உடனே நிறைவேற்றும் நாள்

  மறுமொழி

 2. Kowsy
  டிசம்பர் 28, 2010 @ 20:37:43

  6 வருடங்கள் கடந்துவிட்டன. இது மறைந்து வேறு தலையெடுத்தது. இனி என்ன தோன்றப் போகின்றதோ.

  மறுமொழி

 3. கோமதிஅரசு
  ஏப் 30, 2012 @ 07:20:28

  நாரணனும் நாடகத்தை நடத்திய படியுள்ளான்.
  வாரணனும் பார்த்தபடி வாளாவிருக்கிறான//

  இயற்கையின் ஊழி தாண்டவம் இப்படித்தான் இடம் மாற்றி போடும்.
  கொண்டு போகும், மாற்றி வைக்கும்.. என்ன செய்வது.!

  மறுமொழி

 4. Vetha ELangathilakam
  மே 01, 2012 @ 19:32:25

  மிக்க நன்றி சகோதரி தங்கள் இனிய கருத்திடலிற்கு.
  இறையாசி நிறையட்டும்..

  மறுமொழி

 5. கோவை கவி
  செப் 05, 2017 @ 18:32:45

  Raammohan Raammohan :- ஆஹா….ஆஹா …..!
  அருமையானசொல்லாடல்
  சோகத்தையும் சுவைபட
  பொருளுரைக்கும் வேதாவின் தமிழ் ….
  26 December 2014 at 12:04 ·

  Malini Mala :- செந்தமிழ் சொற்களில் சுனாமி நினைவு மீட்டல் அருமை.
  26 December 2014 at 12:06 ·

  Jeyaseelan Arulananthajothie Saraswathyammah :- நன்றாயிருக்கிறது ஆதங்கக் கவி.
  26 December 2014 at 12:13 ·

  சிறீ சிறீஸ்கந்தராஜா \\சுமத்திரா தீவின் சூலக அதிர்வசைவானது
  சுமந்து ஆயிரத்தைந்நூறு கிலோ மீட்டரதை
  சுருளாக விசிறும் சுனாமி அலையானது.
  சுவடு பதித்துத் தன் சுயரூபம் காட்டியது.
  சுற்றுப் புறக் கடலோர நகரங்களைச் சூறையாடியது.ப
  ற்றிப் பிடித்து உயர்ப்பலி கொண்டது.\\ ********** அருமை அம்மா!! வாழ்த்துக்கள்!!
  26 December 2014 at 12:26 ·

  Maniyin Paakkal :- தாரண ஆண்டு நத்தார் தின மறுநாளில்
  பூரண நிலாவில் பொங்கிய சாகரத்தால்
  சீரணமாகாத சம்பவத்தால் பல உடல்கள்..தோரணம், இறுதிக் கிரியையின்றிப் புதைகுழியுள் மீ வலி பா
  26 December 2014 at 12:33 ·

  Gomathy Arasu :- இயற்கை நமக்கு பகையாகி போனது, அன்று மனதை கனக்க வைத்த நாள். மீண்டும் நிகழாமல் இறைவனும், இயற்கையும் அருள வேண்டும்.
  26 December 2014 at 15:38 ·

  Subajini Sriranjan :- மிக செம்மையாக பொருள் உணர்த்தி அழகாக பாடல் வலி சுமந்து வருகிறது……
  மறம்போமா….,?
  26 December 2014 at 16:30 ·

  Ramadhas Muthuswamy :- அருமையான சொல்லாடல் !!!
  26 December 2014 at 17:41 ·

  Prema Rajaratnam :- மனக்குமுறலுடன் வேதனை மிகுந்த கவிதை.அருமை.
  பூமித்தாய்க்கும் பொறுக்கவில்லையோ அக்கிரமங்கள் என்று யோசித்தபடி ஒருபுறம்.
  27 December 2014 at 10:37 ·
  Gokulaa:- அழகிய தமிழ் மகள்….
  27 December 2014 at 11:49 ·

  Sujatha Anton :- தாரண ஆண்டு நத்தார் தின மறுநாளில்
  பூரண நிலாவில் பொங்கிய சாகரத்தால்
  சீரணமாகாத சம்பவத்தால் பல உடல்கள்
  அருமை…. தமிழ் ஆர்வத்தின் உயர்வு ஆளிப்பேரலையாக
  உருவெடுத்து ஆளிப்பேரலையை வெளிப்படுத்தியுள்ளது.
  வாழ்க தமிழ். !!!!!!
  27 December 2014 at 22:32 ·

  Vetha Langathilakam :- Anpudan Ram – Malini – J.A.S. -Sri -ManiKandan – Gomathy – Suba – R.M – Prema -K.S -Sujatha Ellorukkum mikka nanry. makilvum.
  27 December 2014 at 23:16

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: