144. முகமூடி.

 

 

                  

முகமூடி.

ழகிய முகத்திற்கு முகமூடியேன்!
பழகிய முகங்களை ஏமாற்றுவதேன்!
அழகாய்ப் புனையும் புனை பெயரும்
நிழலாய்ச் சுயம் மறைக்கும் முகமூடி!

பொங்கி வழியும் அன்பு மொழியும்
தங்க முலாம் பூசிய புன்னகையும்
தனித்துவ உண்மை மனிதம் மறைக்க
தடையாகும் சிலநேர முகமூடி தான்.

மௌன மொழியையும் ஒரு நேரத்தில்
யௌவன முகமூடியாக்குகிறான் மனிதன்.
திருடனுக்கும் பெரும் உதவி செய்யும்
அரும் பெரும் சொத்து முகமூடி.

லைப் பின்னலுடை தங்கம், வெள்ளி
வலைத் துணியால் முகம் மூடி
இலையாலே கன்னிமை மறைப்பதாய் மணவறைக்கு
சிலையாக நடப்பாள் புது மணமகள்.

க்கறையோடு இஸ்லாமியரிடும் முகமூடி
சிக்கல் இணைப்பாய் மேற்குலகக் கலாச்சாரத்தில்
எக்கச்சக்க முரண்பாட்டு விவாதங்கள் கிளப்புகிறது.
பக்க விளைவாய்ச் சமூகநிலைகளும் வழுக்குகிறது.

லைவேலை, கைவேலையென பிள்ளைகள்
காகிதக்கூழில் சுய முகமூடி செய்து
கண்கவர் வர்ணமிட்டு அலங்கரித்து
களித்து விளையாடுவார், கண்ணாமூச்சி ஆடுவார்.

ல்லவராய் முகமூடி போட்டு நாட்டில்
நயவஞ்சகம் செய்வோர் பலர் உளர்.
முகம் மூடி தன்னை மறைப்பது
அகம் மூடும் அவல நிலை தானோ!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-8-2008

http://www.vaarppu.com/padam_varikal.php?id=25

((இதே தலைப்பில் இன்னொரு கவிதை இணைப்பு இதோ!)):-  https://kovaikkavi.wordpress.com/2015/08/07/381-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

 

                                    

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதிஅரசு
  ஏப் 30, 2012 @ 07:09:23

  கலைவேலை, கைவேலையென பிள்ளைகள்
  காகிதக்கூழில் சுய முகமூடி செய்து
  கண்கவர் வர்ணமிட்டு அலங்கரித்து
  களித்து விளையாடுவார், கண்ணாமூச்சி ஆடுவார்.//

  கண்ணாமூச்சி ரே ரே என்று விளையாண்ட காலங்கள் மனதில் ஆடுகிறது.

  மறுமொழி

 2. கோவை கவி
  ஆக 30, 2015 @ 19:16:00

  Vetha Langathilakam :- முகம் மூடி தன்னை மறைப்பது
  அகம் மூடும் அவல நிலை தானோ!…
  August 6 at 12:14pm · Like

  மறையூர் மு.பொ.மணியின் பாக்கள் :- முகத்தையும் அகத்தையும் திறக்க வைக்கும் பா
  August 7 at 9:39am · Like

  இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி :- முதலிரவில் முகம்மூடி விரலிடையே பார்ப்பதுவும்
  முகிழும்மலரில் முகம்மூடி தேனைவண்டு குடிப்பதுவும்
  அன்னைமார்பில் முகம்மூடி அருந்தும் பாலழகும்
  எல்லையில்லா இன்பங்கள் முகம்மூடி இருப்பதிலே
  முகமூடி போடாமல் முகம்மூடி வாழ்வதிலே
  முகத்தில்மஞ்சள் பூசுவதும் ஒருவகை முகம்மூடியே
  August 7 at 1:01pm · Edited · Like

  Velavan Athavan :- முக மூடிக்குள் முகம் அவர் அகத்தோடு இருளாய் விழி நீரில் மிதக்க ஒளி சாய்த்துப் போகிறது… சிற்சில வேளை இருளே நட்சத்திர ஒளி மீட்டுகிறது… முகமூடி முகம் காட்டவில்லை…
  August 7 at 12:41pm · Unlike · 1

  Vetha Langathilakam:- மிக்க நன்றியுடன் மகிழ்வைத் தெரிவிக்கிறேன்….மணி…
  7-8-2015…See More
  August 7 at 12:53pm · Like · 1

  Vetha Langathilakam:- மிக்க நன்றியுடன் மகிழ்வைத் தெரிவிக்கிறேன்..ஐயா….
  இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி .and Velavan Athavan.
  August 7 – 2015 at 12:57pm · Edited · Like · 2

  Sujatha Anton :- அக்கறையோடு ஒரு சமயத்தினரிடும் முகமூடி
  சிக்கல் இணைப்பாய் மேற்குலகக் கலாச்சாரத்தில்
  எக்கச்சக்க முரண்பாட்டு விவாதங்கள் கிளப்புகிறது.
  பக்க விளைவாய்ச் சமூகநிலைகளும் வழுக்குகிறது.
  அருமை….. சமுதாய சிந்தனைக்கு எடுத்துக்காட்டு. வாழ்க தமிழ்.!!!

  மறுமொழி

 3. கோவை கவி
  டிசம்பர் 07, 2015 @ 12:51:41

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: