145. மாயமந்திரங்களுடன் மலர்வாய் புத்தாண்டே!

 

மாயமந்திரங்களுடன் மலர்வாய் புத்தாண்டே!

 

பூம்பனி பொழிந்து ஒளியுடை அழகுக்
கம்பளம் விரித்தது வெண்மையாய்,
ஆகா! தோம் தன தீமென அம்சமாய்
அம்புவி புத்தாண்டை ஆனந்தமாய் வரவேற்கிறதோ!
நத்தார் மகிழ்வுடன் இணைந்து வருகிறாய்!
புத்தாண்டே வெற்றி ஆண்டாய் மலர்வாய்!
மெத்த மகிழ்வோடு மொத்த அதிட்டத்தையும்
சித்தம் குளிர அனைவருக்கும் தருவாய்!

நம் மண்ணின் பெறுமதிகள் சேதமாய்
நல் மனித உயிர்கள் அர்ப்பணமாய்
நாட்டளவில் மனம் இரணகளமாய் ஆகி
விட்டகன்றது பழைய ஆண்டுகள்.
கேள்விகளும், நிச்சயமற்ற தன்மையும், வெங்காயத்
தாள்களாக நசுங்கும் தமிழன் நிலையும்,
கோள் கூறிக் காட்டிக் கொடுத்தலும்
நீள் நடை போடுதல் நிறுத்தப்படட்டும்!

அடுத்தடுத்துத் துன்பங்களைப் புளிக்கப் புளிக்கக்
கொடுத்துத் தோசையாய்ப் புரட்டிப் புரட்டி
எடுத்து மீள் வாங்குவதை விட்டிடலாம்.
தடுக்கி விழுந்தால் சட்டென எழுகிறோமே!
வைப்பறையுள்ளே  பாவனை இல்லையெனத் தீர்மானித்து
கைக்குட்டைகளைக் கழுவி மடித்து வைத்து
மைவிழிகளில், மனங்களில் சோகங்களையினி  நிறுத்தி
கைகுலுக்கப் புத்தாண்டு மாயமந்திரங்களுடன் மலரட்டும்!

 

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்
29-12-2010

அலைகள் .கொம் இணையத்தளத்தில் பிரசுரமானது.

http://www.alaikal.com/news/?p=53268

 

                              

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. இரா.சி.பழனியப்பன்.
  டிசம்பர் 31, 2010 @ 04:13:15

  Happy New Year 2011 to all.Remember good things in 2010.Forget bad things in 2010.
  காலை வணக்கம்.இந்த நாள் இனியதாக அமையட்டும்.
  இனிய புத்தாண்டு 2011வாழ்த்துக்கள்.இந்த ஆண்டு மகிழ்ச்சியுடனும்,
  செல்வமுடனும்,வளமாகவும்,அமைய எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறோம்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 02, 2011 @ 08:38:11

   நன்றி சகோதரரே!. உங்களுக்கும் இனிய 2011 அமையட்டும்.இதயத்தில் எண்ணும் எண்ணங்கள் ஈடேறி மகிழ்வு இமயத்தைத் தொடட்டும். வாழ்த்துகள்.

   மறுமொழி

  • கோவை கவி
   ஜன 04, 2011 @ 16:09:56

   சகோதரரே! உங்களுக்கும் இந்த ஆண்டு மகிழ்ச்சியுடனும்,
   செல்வமுடனும்,வளமாகவும்,அமைய எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன். வரிகளுக்கு மிக்க நன்றி.

   மறுமொழி

 2. கலாம் காதிர்
  டிசம்பர் 31, 2010 @ 11:19:07

  பூத்திருக்கும் புத்தாண்டில்
  காத்திருக்கும்
  கனவுகள் நனவாகட்டும்

  மறுமொழி

 3. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  டிசம்பர் 31, 2010 @ 23:40:15

  நலத்துடன் மகிழ்ச்சியும்
  புதுமையுடன் பொலிவும் பெற
  இன்னுமொரு புத்தாண்டை
  இனிதாய் வரவேற்போம் !!

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜன 19, 2016 @ 17:00:09

  பட்டுக்கோட்டை பாலு :- ஒரு புதிய ..எண்ணங்களுடன் …புதிய சிந்தனையுடன் …சோகமில்லா புது உலகம் பிறக்கட்டும் ..இந்த புதிய ஆண்டில் ….வாழ்க வளமுடன் ..!
  December 30, 2010 at 7:09pm · Unlike · 3

  Vishnu Rajan :- உங்கள் எண்ணம் போல இனிய ஆண்டாய் வரும் ஆண்டு சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாய் அமையட்டும் !!!

  வாழ்க வளமுடன் !!!

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு
  அன்புடன்
  விஷ்ணு …
  December 30, 2010 at 7:18pm · Unlike · 2

  Vetha Langathilakam :- வேற வழியில்லை. மனிதர்கள் மனிதர்களாக இல்லாத போது, மாயம் தான் நிகழவேண்டும்.
  December 30, 2010 at 7:34pm · Like · 1

  Vathiri C Raveendran:- வேதாவின் வாழ்த்து
  வேதவாக்கியங்கள்
  ஆகட்டும்.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜன 19, 2016 @ 17:01:25

  Gowry Sivapalan :- மொத்த அதிட்டத்தையும்சித்தம் குளிர அனைவருக்கும் தருவாய்!
  ஆனாலும், விரும்பும் நல்லவை அனைத்தும் பெருக வேண்டும் என நானும் உங்களையும் அனைவரையும் வாழ்த்துகிறேன். இது அளவுக்கதிகமான ஆசை.
  December 30, 2010 at 9:34pm · Unlike · 2

  Sujatha Anton :- நம்மண்ணில் பெறுமதிகள் சேதமாய் நல்ல மனித உயிர்களின்
  அர்ப்பணமாய் நாட்டளவில் மனம் இரணகளமாய் ஆகிய பழைய
  ஆண்டுகள்´´´´´´´அருமை பிடித்தவரிகள். புதிய ஆண்டின் விடியல்
  நல்லவை நடக்கட்டும்.
  December 30, 2010 at 10:55pm · Unlike · 2

  Vi Ji :- உங்கள் எண்ணம் போலவே புதிய புத்தாண்டு அனைவருக்கும் நல்லது தரும் புத்தாண்டை அமைய இறைவனை வேண்டி வரவேற்போம்
  December 31, 2010 at 1:13am · Like · 1

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜன 19, 2016 @ 17:02:54

  Karthiya Karthikesan :- புது வாழ்த்துக்கள் உங்களுக்கும்.
  December 31, 2010 at 2:17am · Like · 1

  Palaniappan Chidambaranathan Rajapalayam :- காலை வணக்கம்.இந்த நாள் இனியதாக இருக்கட்டும்.
  இனிய புத்தாண்டு 2011 வாழ்த்துக்கள்.இந்த ஆண்டு வளமுடனும்,மகிழ்ச்சியாகவும்,செல்வமுடனும் இருக்க எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறோம்.
  இரா.சி.பழனியப்பன்,இராஜபாளையம்.
  December 31, 2010 at 2:21am · Like · 2
  V
  Vimalathithan Vimalanathan :- இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  December 31, 2010 at 3:57am · Like · 1

  Ğâjâņ Şhîvâ Šķ :- நேற்றைய தாக்கங்களை மறந்து நாளைய ஏக்கங்களை களைந்து நிதர்சனமான நிமிடங்களுடன் நிலையற்ற வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும்… நிலையான பேரின்ப வாழ்வின் தகவல்களாய் கண்முன் விரியும் நாளைய விடியலின்.. நல்வாழ்த்துக்களுடன். அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜன 19, 2016 @ 17:04:00

  Natarajan Baskaran :- காலை வணக்கங்கள், தங்கள் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் “இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்” தங்கள் தமிழினிடையே உலா வருவதே ஒரு உவகை தான்! இப் புத்தாண்டுத்தருணத்தில் த்ங்களின் கோரிக்கையை இறைவன் அனிவருக்கும் பகுந்தளிப்பாராக… நன்றி பாஸ்கரன்.
  December 31, 2010 at 4:16am · Like · 1

  Neelamegam Neela Neelu //!புத்தாண்டே வெற்றி ஆண்டாய் மலர்வாய்!மெத்த மகிழ்வோடு மொத்த அதிட்டத்தையும்சித்தம் குளிர அனைவருக்கும் தருவாய்!//

  அருமையான வாழ்த்துப்பா வேதா. மகிழ்ச்சியுடன் எனது உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
  December 31, 2010 at 4:35am · Like · 1

  வசந்தா சந்திரன் :- உங்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜன 19, 2016 @ 17:06:01

  Kalam Shaick Abdul Kader :- பூத்திருக்கும் புத்தாண்டில்
  காத்திருக்கும்
  கனவுகள் நனவாகுக

  Vetha Langathilakam :- thank you all of you and your comments. Happy new year.
  December 31, 2010 at 10:12pm · Like

  Nadaa Sivarajah :- நலத்துடன் மகிழ்ச்சியும்
  புதுமையுடன் பொலிவும் பெற
  இன்னுமொரு புத்தாண்டை…See More
  January 1, 2011 at 12:41am · Like

  Prakash Balu :- புதிய பாதைக்கு வழிவகுப்போம்,இனிய புத்தண்டு நல்வாழ்த்துக்கள்
  January 1, 2011 at 3:50am · Like

  Vetha Langathilakam :- nanry and samme happy new year to you.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: