நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (20)

 

 

வீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (20)

 

(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களும் அமைந்தது)

நேரம் சுமார் மாலை 4.45ல் கணவர் கூறியதுவும் நல்ல யோசனையாகவே இருந்து, ”கிறிஸ்ரியன் ரோம்” எனும் சுற்றுலாப் பேருந்தின் பயணச் சீட்டு, ஒருவருக்கு 13 ஈரோவாக பயணக் கட்டணமிருந்தது. அன்று 19-8-06ம் திகதி பேருந்தினுள் ஆங்கில மொழி பெயர்ப்பு ஒலி வாங்கியைக் காதில் கொழுவிக் கொண்டு ஓய்வாக அமர்ந்திருந்து முழு இடங்களையும் ஒரு சுற்று சுற்றிப் பார்த்தோம்.

     

ந்த பயணச் சீட்டை 24 மணித்தியாலங்கள் பாவிக்கலாம். இது எமக்கு மிக வசதியாக இருந்தது. அடுத்த நாள் 5 மணி வரை அதைப் பாவிக்கலாமே! நாம் நமது வாகனத்தை எடுக்க வேண்டிய தேவையே இருக்கவில்லை. ரோமைச் சுற்றி வர ஒன்றரை மணி நேரம் எடுத்தது.
மீண்டும் சுற்றுலாப் பேருந்தில் ஏறிய அதே இடத்தில் வந்து இறங்கினோம்.

த்திக்கான் கோயில் உள்ளே சென்று நாங்கள் மிகவும் ஆராயவில்லை. இதற்கு நேரமும் எமது பயணத் திட்டத்தில் இருந்திருக்கவில்லை. 1656லிருந்து 1667ல் தேவாலயத்திற்கு அருகில் உள்ள சதுக்கம் கட்டப்பட்டதாம். சதுக்கத்தில் ஒரு சுற்றுச் சுற்றினோம்.

   

ருட்டிக் கொண்டு வர இரவு உணவைத் தேடிச் சென்றோம். நூடில்ஸ் தான், சாப்பிட்டோம், இத்தாலி அல்லவா!                                  

ரவு ஒளியில் மிக அழகாகவே கட்டிடங்களும் ஒளியமைப்பும் இருந்தன. மக்கள் நடமாட்டமும் பகல் போலவே இருந்தது.” இரவில் அறையில் இருக்காது சுற்றிப் பாருங்கள், இரவில் தான் ரோம் மிக அழகு! ” என்று மகள் சொல்லியே தான் எங்களை அனுப்பினார். அவர் பாடசாலைக் காலங்களில் இந்த இடங்ளைச் சுற்றிப் பார்த்துள்ளார். நடந்து திரிந்து விட்டு அறைக்குச் சென்றோம்.

ரவு கழிந்தது. மறு நாள் அதே இடத்திற்கு வந்து காலை 9 மணி போல சுற்றுலாப் பேருந்தில் ஏறினோம்.
முதலில் கொலீசியம் என்று கூறும் மாபெரும் சாகச விளையாட்டு அரங்கத்தைப் பார்ப்போம் என்று, அங்கு இறங்கினோம்.

   

பாடசாலைக் காலங்களில் எமது மகன் தனது சுற்றுலாப் படங்களைக் காட்டியபோது எப்போது நான் இந்த இடங்களைப் பார்ப்பது! ஐரோப்பாவில் தானே இருக்கிறோம்! என்று எண்ணியதுண்டு. வேறும் பல தடவைகள் இயற்கைக் காட்சிகளைக் காணும் போதும் ஏங்கியதுண்டு. பின்னர் மகள் சென்று வந்த போது ”கொலோசியம் பார்த்தீர்களா?” என்றும் கேட்டதுண்டு. ஆக கொலோசியம் என் மனதில் ஒரு சுற்றுலாப் புள்ளியாக இருந்தது. இப்போது அது நிசமாகியது மகிழ்வு தான்.

கிறிஸ்துவிற்கு முன் 753 சித்திரை 21ல் தான் ரோம் கண்டு பிடிக்கப்பட்டது என்று ரோமர் நம்புகின்றனர். ஆனால் நவீன சரித்திரக்காரர் கி. பி 625ல் கண்டு பிடிக்கப்பட்டது என்று நம்புகின்றனர்.

வ்வொரு வருடமும் சித்திரை 21ல் தமது நகரம் பிறந்தது என்று ரோம நகரம் இருக்கும் மலை முழுதும் நீண்ட நேரம் எரியும் மெழுகுதிரியால் மூடி அழகு படுத்திப், பிரமாண்ட நெருப்பு விளையாட்டுக்களை, ரைபர் நதிக் கரையில்  செய்து மகிழ்வார்களாம். (முன்னைய படங்களில் இந்த நதியைக  காட்டியிருந்தேன்)அன்று நூதன சாலைகள் போன்ற இடங்களுக்கு நுழைவுக் கட்டணங்கள் யாவும் இலவசமாக இருக்குமாம்.                                           

ரோம நகரம்  கிறிஸ்துவிற்குப் பின் 64ல் நீரோவின் ஆட்சியில் தீப்பிடித்து எரிந்தது. நகரம் எரியத் தொடங்கிய போது நீரோ நாட்டிற்குத் தூரவே இருந்தான். ஆயினும் மக்கள் அவனைத்தான் நாடு எரிந்ததற்குக் குறை கூறினார்கள். அவன் மிகவும் மனக் குளப்பமாகி தற்கொலை செய்து கொண்டான். அப்படியாகியும் மக்கள் திருப்தி அடையவில்லை. அவனைப் பற்றிய எல்லா அடையாளங்களையும் அழித்தார்கள்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
18-3-2007.

 

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஊமைபுலி
  ஜன 04, 2011 @ 00:47:49

  ரோம் – ஐ ரவுண்டு அடிப்பது எனக்கும் நீண்ட நாள் கனவு. கண்டிப்பா அங்கு ஒரு பத்து பதினஞ்சு நாள் டேரா போற்றுவேன். விரைவில் சந்திப்போம் அம்மா.. இன்னும் நீங்கள் அகிலம் சுற்ற வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 04, 2011 @ 07:42:22

   ஒரு இடத்திற்குப் போக முதல் அந்த இடத்தைப்பற்றி நன்கு அறிந்து போவது பயணத்தை மிக உல்லாசமாக்கும். எனது கட்டுரையையும் வாசிக்கலாம். அதற்கு உதவியாகத் தானே பயணக் கட்டுரைகளே வருகிறது. இதற்கு முன்னர் சிங்கப்பூர், மலேசியா பற்றி எழுதியுள்ளேன். இதன் பின்பு தாய்லாந்து வரும் இறைவன் நல்ல ஆரோக்கியத்தைத் தரவேண்டும் எல்லாம் எழுதி முடிக்க. கருத்துப் பதிவிற்கு நன்றி. வாழ்த்துகள்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: