17. இரகசிய மனம்.

 

 

 

ரகசிய மனம்.

 

தேனருந்திய வண்டு மலரைச் சுற்றிச் சுற்றி வந்தது.
தன்திருப்தியை நவிலும் நன்றியின் மொழிபெயர்பாக.
கண்களில் விசமம், கரங்கள் கழுத்தில் மாலை,
கழிந்த காரிருள் களிப்பில் சிவந்த முகம்.
நன்றி நவிலும் நட்பான கன்னத்து முத்தம்.
ஓன்றிய இதயம்,  விலகிட முடியாத பாதங்கள்.
கிரீடம் சூட்டிய உன் அன்பு, ஒரு மலர் விலங்கன்றோ!
ஓ!  அன்பே!  நன்றி!  உன் அன்பில் நான் உருகுகிறேன்

 கழுத்தில் மாலையான கரங்கள் இடையில் மாலையானது.
எங்கே என் கண்ணா என விழிகளுக்குள் தேட
இங்கே நானென்று விழி சிரித்துச் சிமிட்டியது.
விழியுள் புகுந்து இதயத்துள் விழுந்த மனம் களித்தது.
தோள் கண்டு சுகம் கொண்ட தேன் சுவையினால்
நாள்தோறும் கண்ணிறைந்த சுகம் காண உன்னைக்
கள்ளுறும் மலராக துள்ளும் இரகசிய மனம்
உள்ளுற மகிழ்ந்து அழைக்கிறது ஓடி வா!

வள்ளுவன் கூறிய மூன்றாம் பாலும் இதுதான்.
உள்ளம் உணர்ந்து உவந்த காதலும் இதுதான்.
உருவத்தில் ஒன்றான இலக்கியக் காதலும் இதுதான்.
ஆதாம் ஏவாள், அனார்கலி சலீமும் கண்டு
ஆராதித்த அந்த அற்புதக் காதலும் இதுதான்!
ஆனந்தத் தேனெனும் அமுதக்  காதலும் இதுதான்!
ஆடிப் பெருக்காய் அனுதினமும்  பரிமாறலாம் வா!
கூடிக் குலாவிக் குதூகலிக்கலாம் வா! வா!.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
30-7-2002.

(ரி.ஆர்.ரி தமிழ் அலையில் கவிதை நேரம் – (சகீலா சிறீதர் நேரத்தில்) என்னால் வாசிக்கப்பட்டது.

In Anthimaalai web site – http://anthimaalai.blogspot.com/2011/06/blog-post_16.html

 

 

      

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. கலாம் காதிர்
    ஜன 07, 2011 @ 17:15:04

    //வள்ளுவன் கூறிய மூன்றாம் பாலும் இதுதான்.
    உள்ளம் உணர்ந்து உவந்த காதலும் இதுதான்.
    உருவத்தில் ஒன்றான இலக்கியக் காதலும் இதுதான்.
    ஆதாம் ஏவாள், அனார்கலி சலீமும் கண்டு
    ஆராதித்த அந்த அற்புதக் காதலும் இதுதான்!
    ஆனந்தத் தேனெனும் அமுத காதலும் இதுதான்!//

    ஆதாம் ஏவாள் ஆராதித்த காதல் இதுதான்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: