152. பொங்கட்டும் தெய்வீக மணம்

 

பொங்கட்டும் தெய்வீக மணம்

 

காலத்தில் கனவுகள் மெய்ப்பட
வலம் வரட்டும் பொங்கல்!
ஞாலத்தில் வெற்றிகள் கனிந்திட
பலன் தரட்டும் பொங்கல்!
நிலம் ஊன்றத்துடித்து ஆழமாக
வலம் வரும் நம்பிக்கை முயற்சிகள்
தலமூன்ற வரட்டும் தைப்பொங்கல்!
நலமுடன் கலகலப்பாய்ப் பொங்கட்டும்!

பாலரிசி, சர்க்கரை, நெய்
பயறென மக்களிணையட்டும்!
பொங்கும் சர்க்கரைத் தித்திப்பு
நீங்காதிருக்கட்டும் மக்கள் வாழ்விலும்.
பொங்கும் இணையக் கலகலப்பும்
பொங்கட்டும் சேர்ந்தே பொங்கலுடன்!
பொங்கும் பொங்கலின் மணத்தால்
தங்கட்டும் தெய்வீக மணம்.

அயராத உழைப்பால் விவசாயி
அறுவடை அரிசியில் பொங்கல்.
அன்னம் குறையாது காக்கும்
ஆதவனுக்கு நன்றிப் பொங்கல்.
அதற்குச் சமமாய் உதவும்
ஆவினத்திற்கும் நற் பொங்கல்.
நன்றி கூறும் நற்பண்பிற்காய்
நகைமுகம் காட்டும் பொங்கல்.

அக்கறையாய் வருடந் தோறும்
அறிமுகமாகும் தைப் பொங்கல்
அகமும்புறமும் அமர்க்களமாய் பொங்கட்டும்.
அமைதியின் அமைப்பு அமோகமாய்
அமைந்து பொலியப் பொங்கு!
அமைதியைத் தேடி நிதமும்
அகல விழிக்கும் விழிகள்
அமைதியில் மின்னப் பொங்கு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-1-2011. (9-1-2006)

 

Related poem (pongal)
https://kovaikkavi.wordpress.com/2013/01/13/261-%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/

https://kovaikkavi.wordpress.com/2012/01/14/28-%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/                              

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஜன 19, 2016 @ 17:29:51

  Sujatha Anton :- அயராது உழைக்கும் விவசாயிக்கும் அள்ளிக்கொடுக்கும் ஆதவனிற்கும்´´´;;;;; ;;நாம் நன்றி சொல்வோம். இனிய பொங்கல்
  வாழ்த்துக்கள்
  January 13, 2011 at 11:29pm · Unlike · 1

  இராஜ. தியாகராஜன் :- மிக்க நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்க்கும், உங்கள் தோழமைகளுக்கும் இத்தமிழ்ப் புத்தாண்டு இன்பங்களை நல்கட்டும்.
  January 14, 2011 at 6:48am · Unlike · 1

  பட்டுக்கோட்டை பாலு :- எல்லோரும் எல்லா நலனும் பெற்று வாழ ..இப் பொங்கல்
  நன்னாளில் வாழ்த்தி ..அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன்
  “பொங்கலோ பொங்கல் …பொங்கலோ பொங்கல் ”
  January 14, 2011 at 8:50am · Unlike · 1

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜன 19, 2016 @ 17:33:00

  அன்படன் சுஜாதா – இராஜ. தியாகராஜன் – பட்டுக்கோட்டை பாலு.. தங்கள் இனிய கருத்து வாசித்து மகிழ்ந்தேன்..
  மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

  மறுமொழி

 3. கோவை கவி
  ஜன 19, 2016 @ 17:37:45

  Kalam Shaick Abdul Kader மாச்சீர், மாச்சீர், ஓர்விளம் வாய்பாட்டில் அமையும் விருத்தம்

  வாய்க்கால் தண்ணீர் வந்திடும்
  வாய்ப்பு மில்லை; பெய்திடும்
  பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும்
  பேரா பத்தால் நெற்கதிர்
  காய்த்து வந்தும் பொய்த்தது
  காலம் தோறு மிந்நிலை
  மாய்த்துக் கொள்ளும் மக்களோ
  மங்கிச் சொல்லும் “பொங்கலோ”
  பொங்க லன்று பொங்கிடும்
  பொங்கற் சோறு போலவே
  எங்கு மின்பம் தங்கிட
  எம்வாழ்த் தாலே பெற்றிட
  பங்க மில்லா வாழ்வினைப்
  பற்றிப் போற்றி வாழ்ந்திட
  அங்க மெங்கும் பொங்கிடும்
  அன்பே வாழ்த்தாய்த் தங்கிடும்
  சோற்றில் கையை வைத்திட
  சேற்றில் காலை வைத்திடும்
  ஆற்றல் மிக்க மக்களை
  ஆர்வம் கொண்டு வாழ்த்திடு
  ஏற்றம் பெற்ற ஏரினை
  ஏந்திச் சிந்தும் வெற்றியால்
  மாற்றம் பெற்று முன்வர
  மக்க ளெல்லாம் போற்றுவோம்!

  “கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

  எனது வலைப்பூத் தோட்டம் உலா வர வழி:

  http://www.kalaamkathir.blogspot.com/

  ய்.ஏ.இ. தமிழ் சங்கம் பொங்கல் கவிதை இதழுக்கு யான் யாத்தளித்தது
  January 14, 2011 at 8:53am · Unlike · 1

  Ğâjâņ Şhîvâ Šķ :- அனைத்து தமிழ் உறவுகளுக்கும் அடியேனின் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்..பொங்கிடும் பால் போல எல்லோர் நெஞ்சங்களிலும் இன்பங்கள் பொங்கிட்ட்டும்,, இன்னலுறும் தமிழ் உறவுகளுக்கு இத் தமிழ் புத்தாண்டு இன்பங்களை தந்திட்ட்டும்,,, அனைவரும் இன்பமாக வாழ வேண்டும்
  January 14, 2011 at 9:53am · Unlike · 1

  Karthiya Karthikesan :- வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டு,
  வாழ்த்துகிறேன் உங்களையும் தைப் பொங்கலன்று! நன்றி.

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜன 15, 2017 @ 11:20:24

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: