18. தமிழே! பொங்கு!

 

aaaaaaaaaaaaa

தமிழே! பொங்கு!  

ங்கொலிக்க சபைகளிலே புகழ்
ஓங்கி ஒலித்த தமிழ்!
எங்கள் சமூகத்தின் உயர்வைத்
தாங்கும் உயிர்! தமிழ்!.
தங்கமாம் அமுதத் தமிழ்
சங்கை இழக்கக் கூடாது!
பொங்கு தமிழே! எங்கும்
கங்கையாய்ப் பொங்கு! தமிழே! 

ச்சியிலிருந்த தமிழ்க் கன்னி
கொச்சைப்படுகிறாள் தாய் நிலத்தில்.
அச்சமின்றி இங்கவள் வளர
அத்தனை முயற்சிகளும் வெல்லட்டும்!
முங்குதல் தமிழுக்கில்லையென்று
முழங்குகிறோம் நாம் இங்கு.
பங்கமின்றி உயர்ந்து ஓங்கட்டும்!
பொங்கும் உணர்வுடைத் தமிழ்!

தேங்கும் அறிவிற்குத் தூண்!
ஏங்கிடும் புலவருக்குத் தேன்!
இங்கு உறவுக்கிது வான்!
பங்குபங்காக நாம் பிரியாது
சங்கமம் ஆகாவிடில் வீண்!
தங்கத் தமிழ் வளரட்டுமோங்கி!
பூங்காவன அழகுத் தமிழே!
தீங்கு வராது தமிழே பொங்கு!
  

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
19-7-2008.

                                     

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. கலாம் காதிர்
    ஜன 20, 2011 @ 17:17:07

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    தமிழெங்கள் உயிருக்கு நேர்

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 22, 2011 @ 11:19:17

      (தமிழுக்கும் அமுதேன்று…..) நன்றி சகோதரரே! வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் பேசுபவர்களை என்ன செய்வது! உதாரணமாக இருக்க வேண்டியவர்களே உரிமையைப் போட்டு மிதித்து ஆங்கிலத்தில் கொஞ்சுகிறார்கள்! ம்….ஊடகங்களில்….!!!!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: