165. உருவாக்கும் ஊடகம்.

 

 

உருவாக்கும்  ஊடகம். 

 

கருவாகும் கருத்தின் விரிவு
எருவாகப் பலரது மனதில்
உருவாக – உலகில் விரிய
அருமையாக உதவும் ஊடகம்.
அரசியல்வாதியும் ஆன்மிகவாதியும் ஆளும் ஊடகம்,
கருவாக ஏந்துவது புகழ்ச்சியும் இகழ்ச்சியும்.
ஆயகலைகளிதன் ஊன்றுகோல்கள். – ஊடகத்தால்
அல்லலுற்று அலைக்கழிபவன் சாமான்யனே.

பெருகும் நாகரீக அடிப்படையால்
உருவாகும் அறிவியல் மகத்தானது.
குறி தவறி அநாகரீகமாகும் ஊடகம் – தீ
பொறியாகிறது கேடுடை பாவனையால்.
பற்றியவன் கைப் பகடைக் காயாகிறது,
பற்றை இழக்கிறது சமூகத்தில்,
பரிமாணம் இழந்து தன்
பரிபூரணமும் இழக்கும் நிலையாகிறது.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்  டென்மார்க்.
31-5-2008.

 

                                  

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: