11.. உன்னை நினைக்கிறோம்…..(பாரதி – 1)

 

 

உன்னை நினைக்கிறோம்…..

11-12-2008. பாரதியார் பிறந்த நாளுக்காக

எற்றி எதிரொலிக்கும் தமிழ்.
சுற்றிப் பல தலைமுறைகளையும்
பற்றிப் பாய்கிறது பாசியின்றி.
பற்றுடை பாரதி வரிகள்
வெற்றி வரிகள, பாரினிலே.
சுற்றம் காணும் சுகந்தம்.
கொற்றவனைத் தமிழ் உலகு
பெற்றநாள் இன்று நினைக்கிறோம்.

உணர்வுப் பூக்கள் – எனது 3வது நூலில் இடம்பெற்ற சில வரிகள்…..

பாரதியே! தமிழ்க் கவிதை வாரிதியே!
பேரதிர்வான உன் வாலிபப் பண்களுக்குத்
தீரமதிகம், தீர்க்கமும் பூமியில் அதிகம்.
ஊரதிரும் தாக்கங்கள் உருவானது உண்மை.
பேரதிசயம் பெற்ற கவிதையின் தாக்கங்கள்
வேரதிகம் விரித்தது பெண்கள் உலகிலும்.
சாரமதிகமான இவன் சுந்தர வரிகளை
யாரதிகம் எடுத்தாளவில்லை சுய வாழ்விலே!

பாரதியே! தமிழ் பாவுலகில் நீயுமொரு – யுக
சாரதியானாலும் உன் வாழ்வில் சரிபாதியாக
நீரதியெனக் கவிபாடிய உன் கண்ணம்மாவை
ஆராதிக்காத உன் சுய வாழ்வுப் பாதையை
கூரதிகம் உன் கவியானாலும் எடுத்துக்
கூறாத மனிதருண்டோ! நீயறிவாயா!
வீரதீரனாகிலும் சரிபாதியான வாழ்விற்கு மனைவி
வேரதுவாக வாழ்கிறாளென்பது பெரிய உண்மை.

இறுதியில் அறிந்து கொண்டாய்…..

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.

In Anthimaalai web site:-   http://anthimaalai.blogspot.com/2012/03/9.html

                                 

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. N.Rathna Vel
    ஜூலை 24, 2011 @ 10:48:21

    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூலை 24, 2011 @ 14:03:15

      ஐயா! மிக்க நன்றி ஐயா! இவ்வளவு உற்சாகமாக நீங்கள் இயங்குவது மகிழ்ச்சி. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: