7. கவிதை பாருங்கள்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
25-1-2011.

164. ‘ நான் ‘……ஏன்!

 

 

 நான் ‘……ஏன்!

(தவறைத் தவறென்று ஏற்காத தன்மானச் சிலிர்ப்புக் கண்டு எழுதியது.)

 சமுதாயப் பார்வை இணைந்த கணங்கள்
சமபாதை நோக்கும் சீர் அடிகள்.
வேர்கள் அழியாது காக்கும் கவனம்
சேர்ந்து கனலும் ஞானச் சுடர்.

நாண நாதாங்கி களன்ற சாளரம்
நரம்புகளின் ஓயாத துடிப்பின் சாதுரியம்.
நாலு நல்லது எண்ணும் தாராளம்.
வழுவாத சந்தர்ப்பம் பாராளக் கூடும்.

தரம் காண விளையும் மனது
தவறு கண்டு துடித்தல் பொது.
தன்மான மனிதன் தற்காப்பு முறுகல்
தவறை ஏற்காது தலை சிலிர்த்தல்.

பிணங்கிப் பிணங்கிப் பெறுவது சிறிது.
இணங்கும் கரங்களின் பலம் பெரிது.
வணங்கத் தேவையில்லை வஞ்சகம் தொலைத்து
வனாந்தர மனமழித்தால் சோலையாகலாம்.

நான் என்ற அகந்தை உயர்விற்கு
வீண் என்ற சிந்தனை துயரழிக்கும்.
ஏன் இதை மானுடன் மறந்து
ஊன் உருக உடல்வாதைப்படுகிறான்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2008.

                                 

15. வணங்குகிறேன்.

 

வணங்குகிறேன்.  

இராப்பகலாய் உனை வணங்கி
இராசவரி எழுதி ஒரு
இராசராகம் பாடி இறைவா
இரட்சிப்புக் கேட்கிறேன்.

இரக்கம் கொண்டு நீயும்
இத் தரையில் வந்தெமது
இன்னல்கள் களைந்து விடு!
இன்பங்கள் தந்து விடு!   (இரா…)

சூரியனாய் இவ் உலக
சூதுவாது சுட்டு விடு!
சுவர்ண பூமியாக்கி, தீய
சுவடுகளை மாற்றி விடு!  (இரா…)

உறவு மேடையில் தினம்
உன்னை நினைந்து உருகி
உயர் பக்திப் பாலருந்தி
உணர்வோடு வணங்குகிறேன். (இரா….)

19-7-2008.

 

 

                                                      

 
 

163. வேட்டைக்காரர்.

வேட்டைக்காரர். 

 

காட்டில் மட்டுமா வேட்டைக்காரர்!
நாட்டிலும் நால்வகை வேட்டைக்காரர்.
ஆட்டமிடும் உலகக் காட்டில்
நோட்டமிடும் சங்கதிகளை ஊட்டமாக்கி
நாட்டமிடும் தேட்டம் வென்றிட
கூட்டம் கூட்டமாக கூடும்
வாட்டமற்ற வேட்டைக்காரர், வெற்றி
ஆட்டமாக்கும் வேட்டைக்காரர் மனிதர்.

தினம் அப்பாவி மக்கள் உயிரெடுப்போரும்
தினமொரு பெண் தேடிக் காமுறுவோரும்
பணம் தேடும் வேட்டையில் பலரும்
குணம் மாறி ஆடுகிறார் ஆட்டம்.
வன்முறை வேண்டாமென வாழ இடமும்
இன்னலெனும் பசிக்கு உணவும் நீரும்
சந்நியாசம் பூண்டு சாந்தி தேடுவோரும்
எந்நாளும் ஒரு வகையில் வேட்டைக்காரரே.

வேட்டைக்காரனும் வேட்டைக்காரியுமாய்
ஊட்டமிகு வாழ்வுக்காய் நாம்
வேட்டம் கொள்வதும் அதை
ஈட்டுதலும் வேட்டையாகிறது.
தமிழ் வார்த்தைகள் வேட்டையாடி
தரமான பாவினைப் புனைந்து
தரவேண்டும் ‘வேட்டைக்காரர்’ தலைப்பில்
தவிப்பில் நானுமோர் வேட்டைக்காரி.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-5-2008.

(வார்ப்பு இணையத் தளத்தில் பிரசுரமானது.
இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் ஒலியிலும் என்னால் வாசிக்கப்பட்டது.)

http://www.vaarppu.com/padam_varikal.php?id=21

 

4 years ago

காற்றுவெளி செப்ரெம்பர் இதழ் வந்து விட்டது.
ஆக்கதாரர்கள் – ஆக்கியோருக்கு இனிய வாழ்த்துகள்.
அதில் வந்த எனதிரு கவிதைகள்..

வேட்டைக்காரர்.

காட்டில் மட்டுமா வேட்டைக்காரர்!
நாட்டிலும் நால்வகை வேட்டைக்காரர்.

2.  poem 

அவசரம்.

அவசரம் ஒரு குறை வரம்,
அவலம் பெருக்கும் அந்தரம்.
அவதி அவதியாய்ப் படும் அவசரம்…

 

 

 

                                 

 

 

162. வெளிச்சம்.

  

வெளிச்சம். 

விளக்கு என்ற கருத்தில்……..

கருநீல வானில் நிலவு வெளிச்சம்
ஒரு நிம்மதிப் பொலிவு அற்புதம்.
ஒரு மழலையின் சிரிப்பு மொழி
பெரும் துன்பத்திலும் ஒரு வெளிச்சம்.
குலவி இணையும் முறையான வாழ்வில்
கலவி ஒரு அற்புத வெளிச்சம்.

பெண்மையின் தாய்மை, பாசக் களிப்பு
மண்ணுலக வாழ்வில் மாபெரும் வெளிச்சம்.
புன்னகை எவரும் விலைமதிக்;கவொண்ணா
நன்னகை வெளிச்சம் மனித வாழ்வில்.
மாய வாழ்விற்குத் துணிவு, நம்பிக்கை
ஓயாத வெளிச்சம் தரும் மின்சாரம்.

பகட்டு  என்ற கருத்தில்…..

பூமாலை, பொன்னாடை வாங்கிக் கொடுத்துப்
பாராட்ட வைக்கும் கூட்டமொரு வெளிச்சம்.
உயர் பாணி உடை, பாவனைப் பொருள்,
துயருடை நோயில்லா உடல் தமக்கென்று
அயர்வின்றிப் பதவிசாகப் பலர் இங்கு
பெயருக்குக் காட்டுகிறார் பெரு வெளிச்சம்.

பணம் பாலாக விழாவெடுக்கப் பாயும்
குணம் இங்கிது ஆடம்பர வெளிச்சம்.
மேற்குலக மொழிப் பாவனையால் வாரிசுகளுக்கு
தாய்மொழி வராதெனக் காட்டுவார் வெளிச்சம்.
தங்க நகையணிந்து காட்டிய வெளிச்சம்
மங்கி வருகிறது போலி வண்ண நகைகளால்.

தெளிவு  என்ற கருத்தில்…..

மனித சிந்தனை வெளிச்சம்
மாபெரும் செயல் வெளிச்சமாகும்.
வெளிச்சம் தரும் விளக்கம்
தெளிவற்ற நிலை விளக்கும்.
இளிவான தீமையுடை நடத்தை
வெளிச்சமான வாழ்வு தராது.

 

பா ஆக்கம,வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
16-11-2008.

இதே தலைப்பில் எனது இன்னொரு கவிதை. கீழே இணைப்பு உள்ளது.

https://kovaikkavi.wordpress.com/2011/02/04/220-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/

This poem in    vaarpu.com – http://www.vaarppu.com/padam_varikal.php?id=28

 

                                  

 

 

14. தெய்வம்.

 

 தெய்வம்.

 (இசையோடு பாட)

     
இறையுருவின் மீது
பாறை போல் நம்பிக்கை
நிறைவாகப் பிணைப்பார்.
குறைவின்றி வணங்குவார்.
மறைவான பெரும் துணை
இறைவன் – தெய்வம்.        (இறையுருவின்….)

உயர்ந்தவர் தாழ்ந்தாலும்
தாழ்ந்தவர் உயர்ந்தாலும்
பக்கலில் நிற்பானவன்.
சோதனை தந்தும்
வேதனை நீக்கியும்
தீவினை தணிப்பானவன்.        (இறையுருவின்…)

அவன் சாரத்தியம்
அவன் இயக்குவான்.
அவனில் பாரமிட்டு
அவனை வணங்கும்
அதிலொரு சுகம்.
அவனே எம் துணை.          (இறையுருவின்…)

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
11-1-2009.

 

                                                   

 

 

28. தீயே! தீயே!

 

 

தீயே! தீயே!   

தீயே! தீயே எரிகிறாய்
நீயே எம்மைச் சுடுகிறாய்.
வாயே பேசாது எம்மை
வாட்டி யெடுக்கிறாய் வெப்பத்தால்.

கல்லோடு கல்லை உரசினார்.
காயந்த குச்சிகளை உரசினார்.
கனலும் தீயைக் கண்டார்.
அனலில் உணவை வாட்டினார்.

கற்காலம் அன்று மனிதர்
கனலும் தீயைச் சுற்றினார்.
கானம் பாடி ஆடினார்.
கடவுளாய் உன்னை வணங்கினார்.

கலக்கம் தரும் தீ
உலகையும் அழிப்பாய் நீ.
துருவப் பகுதியில் குளிரின்
துயர் துடைக்கிறாய் நீ.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-12-2008.

(இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

                                   

 

 

 

 

160. கடிகாரம்.

 

    

கடிகாரம்.

 

மின்சாரம் தன் சாரமாக்கும் கடிகாரம்.
கண் ஓயாது தரிசிக்கும் மையப்புள்ளி.
எண் ஆரம் கொண்டு எத்தனை அலங்காரம்!
வண்ண ஆரம் கரத்தினிலும் பல்லுருவம்!

எதிர்வாதமற்றவன், ஏவற்காரன் கண்காணிப்பாளன்.
அதிகாரம் முழுமை பெற்ற சட்டக்காரன்.
அதிகாரன் உலகை ஆட்டுவிக்கும் வணங்காமுடி.
சதிகாரன், சர்ச்சைக்காரன் இவன் சோம்பேறிக்கு.

‘கடமையைச் செய் பலனை எதிர் பாராதே’  என
திடமாய் திருப்பள்ளியெழுச்சி பாடும் திறலோன்.
 திடசித்தன், மணிக்காதலிக்கு மணிக்கொரு தடவை
நடனமாடி முத்தமிடும் நிமிடக் காதலன்.

ஊருறங்கும் போதினிலும் யாருமற்ற வேளையிலும்
பாருறங்காது பாதுகாக்கும் பாகுபாடற்ற பாகன்.
‘திருவினையாக்கும் முயற்சி ‘ யென்ற முதுசொல்லிற்கு
பெருமையான உதாரணம், இவனைப் பேசாதார் யார்?.

முடிப்பான், விடயங்களைத் தொடங்குவான் தொடர்வான்.
நொடிக் கொரு பேச்சு மாறாதவன்.
முடிப்பான் பேச்சு என்றாலவன் இறப்பான்.
கடிகாரத்தை மதிப்பவன் கௌரவம் பெறுகிறான்;.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
21-05-2008.

http://www.vaarppu.com/padam_varikal.php?id=20

(ரி.ஆர்.ரி வானொலி,  இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

In Muthukamalam.   –  http://www.muthukamalam.com/muthukamalam_kavithai528.htm

 

                            

6. கவிதை பாருங்கள்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-1-2011.

18. கடனைத் திருப்பு!

 

 

டனைத் திருப்பு!

நெஞ்சிலென்னை நிறுத்திடென்று
நெற்றியில் குங்குமமிடும் நேசனே!
நெஞ்சிலே வலியெடுக்கத் தினம்
வஞ்சமாய் நெருஞ்சி முள்ளாகிறாய்.

அதிகார போதை மயக்கம்.
எதிர்வாத ஆட்சி பீடம்.
புதிரான வாழ்க்கை ஓடம்.
பொதியான பாரச் சுமையோ!

நெஞ்சில் தேனான மொழிகள்
பஞ்சில் நெருப்பாய்ப் பற்றுமோ!
காதலென்பது  வாலிபமிடுக்கின்
கானல் வரியோ! உண்மையோ!

காதலா! காதற் கடனை
கனிவோடு திருப்பிக் கொடு!
கனிவான மொழியை, செயலைப்
பனியாகப் பொழிந்து விடு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-1-2011.

                                           

 

Previous Older Entries Next Newer Entries