12. வேதாவின் வலை – ஒரு கண்ணோட்டம்.

 

 

வேதாவின் வலை – ஒரு கண்னோட்டம்.

வணக்கம் இணையத் தமிழுலகப் பெருமக்களே!

இன்று 20-மாசி 2011 காலை 9.15 – டென்மார்க் நேரம்.
எனது வலை தொடங்கி சுமார் 7 மாதங்கள் சென்றுள்ளது.

இதுவரை – இந்த நிமிடம் வரை 6347 விருந்தாளிகள் எனது வலைக்கு வந்து பார்த்துச் சென்றுள்ளனர். இதில் பின்னூட்டம் இட்டவர்கள் தொகையோ ஆக 186 தான். ஏனோ தெரியாது வருகை தருபவர்கள் அனைவருமே தமது கருத்தை வலையில் பதிவது இல்லை. இது ஒரு பின்னடைவான நிகழ்வு தான்.

மொத்தமாக 489 ஆக்கங்கள் வலையில் ஏற்றியுள்ளேன். 6347விருந்தினர் – எனது வருகையைத் தவிர்த்து கணக்கெடுத்தது என்று வேட் பிறெஸ் கூறுகிறது.

ஆக்கங்களை வலையில் ஏற்றும் போது, எனது 50வது ஆக்கம்,எனது 100வது ஆக்கம் என்று நான் கொண்டாடவில்லை. நேரம் கிடைத்த போது இதுவரை ஏற்றிய ஆக்கங்கள்; தான் 489.
கவிதை – இதை பாமாலிகை – பாக்களின் மாலை என்று ஏற்றுகிறேன் அவற்றையும் பிரிவு பிரிவாக வகுத்துள்ளேன். கவிதையைக் கதம்பமாக, அதாவது எல்லா வகைக் கவிதைகளையும் கலந்து போடுவதை இப்படி குறிப்பிட்டேன். பின்பு பல பிரிவாக வகுத்தேன்.

பாமாலிகை (கதம்பம்)      222.
பாமாலிகை (பெண்மை)     10
பாமாலிகை (தாய்நிலம்)     28
பாமாலிகை (காதல்)              20
பாமாலிகை அஞ்சலி, வாழ்த்துப்பா 29.  (இன்பம், சோகம் கலந்தது….)
பெற்றோர் மாட்சி          28 (இதிலும் கவிதைகள், பெற்றோர் பெருமை வரிகள்)
சிறு கட்டுரைகள்           23  (பல வகைக் கட்டுரைகள்)
வேதாவின் ஆத்திசூடி  12  (உயிரெழுத்து மட்டும் இப்போதைக்கு உண்டு)
பிரபலங்கள்                           9  ( இன்னும் வரும்…..)
பயணக் கட்டுரைகள்       46.  (முழுவதுமாக 2 பயணம். இன்னும் வரும்….)
சிறுவர் பாடல் வரிகள்    12.
சிந்தனைச் சாரல்            8  (முழுவதுமான எனது சொந்தச் சிந்தனைகள்.)
ஆன்மிகம்                          16  (இதுவும் என் சொந்த வரிகளே)
கவிதை பாருங்கள். (படம்-கவிதை) 9.
கவிதை கேளுங்கள்             3. (காணொளியாக, என் குரலில், இன்னும்…. )
எனது புத்தகங்கள்                 4

இப்படி ஒரு கண்ணோட்டமிட எண்ணம் வந்தது. இதில் பார்வையாளரின் கருத்துப் பதிவுகள் குறைவு என்பது குறையாகவே உள்ளது. இது நேயர்களாக உணர்ந்து செய்ய வேண்டியது. எல்லாம் நல்லபடி செல்லும் எனும் நம்பிக்கையில் தொடருகிறேன் என் பணியை.

உங்கள் ஆதரவை என்றும் வேண்டுகிறேன். பின்னூட்டம் இட்டவர்களுக்கு மனமார்த்த நன்றிகள். அது எமக்கு புது உற்சாகம் தருவது. சோர்வை அகற்றுவது.
வருகை தருவோருக்கும் அதே மகிழ்வு நன்றிகள் உரித்தாகுகிறது.  நன்றி நேயர்களே.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-2-2011.

 

                                                      

 

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மன்னார் அமுதன்
  பிப் 21, 2011 @ 07:48:31

  வேதா அக்காவிற்கு,

  மிகவும் அருமையான ஆக்கங்களை வெளியிட்டு வருகிறீர்கள்… நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன்…. மேலும் பல ஆக்கங்களை வெளியிட வாழ்த்துக்கள் 😉

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 21, 2011 @ 16:29:49

   அப்பாடா! அமு யோவின் எழுதுகோல் இன்று தான் என் பக்கம் திரும்பியது! இவ்வளவு சிரமப்பட வேண்டுமா இங்கு திருப்ப. நாம் கொடுப்பதைத் தானே எடுக்க முடியும்! பரஸ்பரம் புரிந்துணர்வு என்பது பெரிய மந்திரக்கோல்! நிறைய மயாசாலங்கள் நெய்ய முடியும். மிக்க நன்றி. தொடருவோம்!

   மறுமொழி

 2. Natarajan
  பிப் 22, 2011 @ 04:22:45

  தொடரட்டும் சகோதரி தங்கள் சொற்காலம்!

  anbudan
  Natarajan

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 22, 2011 @ 16:48:36

   நடராஐன் என்றதும் நான் குளம்பிவிட்டேன். மின்னஞ்சலும் புதிதாக இருந்தது. இப்போது புரிகிறது எந்த எம் நடராஐன் என்று. உங்கள் பின்னூட்டக் காற்றையும் இப்பக்கமும் இடையடையே அனுப்புங்கள் மிக்க நன்றி சகோரரே!

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: